ஓசோன் படலம்
ஓசோன், ஒட்சிசனினால் ஆக்கப்படும் ஒரு மூலக்கூறாகும். மூன்று ஒட்சிசன் மூலக்கூறுகளால் ஓசோன் (O3) உருவாக்கப்படுகிறது. வளிமண்டலத்தில் ஓசோன் படலத்தின் செயற்பாடு மிக முக்கியமானதாகவுள்ளது. புவியின் வளிமண்டலப் பகுதியில் படைமண்டலத்தில் கீழ்ப்பகுதிகளில் இந்த ஓசோன் படலத்தை நாம் காணலாம். ஓசோன் நிறமற்ற வாயுவாகும். தாழ்மண்டல ஓசோன் பச்சை வீட்டு வாயுவாக விளங்க படைமண்ட ஓசோனே புவியைப் பாதுகாக்கும் கவசமாகத் தொழிற்படுகிறது.
சூரியனிலிருந்து வெளிவரும் சூரியக் கதிர்வீச்சானது மிகச் செறிவான கழிஊதாக் கதிர்களை கொண்டுள்ளது. இக்கதிர்கள் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பயங்கரமான தீங்குகளை விளைவிக்கக்கூடியது. இத்தகைய கதிர்களை வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலமானது தடுத்து நிறுத்துகின்றது.
இத்தகைய பெரும் பங்களிப்பினை ஆற்றுகின்ற ஓசோன் படலமானது அண்மைக் காலமாக அழித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனையே ஓசோன் படை ஓட்டை என்று கூறுகின்றனர்.
நாம் பயன்படுத்துகின்ற மிகை குளிரூட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் ஆகியவற்றில் இருந்தும் ஊகுஊ வாயுக்களும் நெற்செய்கை நிலங்களிலிருந்து சதுர்ப்பு நிலங்களிலிருந்தும் உற்பத்தியாக்கப்படுகின்ற மீதேன் வாயு, வாகனங்கள், சக்தி நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படுகின்ற நைதரசன் ஒட்சைட்டு ஆகியன ஓசோன் மூலக்கூறுகளைத் தனித்தனி ஒட்சிசன் மூலக்கூறுகளாக பிரிகையடையச் செய்கின்றன. இதனால் ஓசோன் படலம் இல்லாமலாக்கப்படுகின்றது. இதன் மூலமாக ஓசோன் படலத்தில் துவாரங்கள் ஏற்பட்டு அதன் மூலம் புவியிலுள்ள உயிர்க்கூறுகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சூரிய கதிர்கள் நேரடியாக புவியினை வந்தடைய வழி ஏற்படுகின்றது. இதனால் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு கட்காசம், தோற் புற்றுநோய் என்பன ஏற்படுகின்றன.
A useful Video: https://www.youtube.com/watch?v=aU6pxSNDPhs
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக