அமில மழை
அண்மைக்காலமாக, அமிலமழையின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. கைத்தொழில் புரட்சியின் பின் புவியில் ஏற்பட்ட சூழல் அனர்த்தங்களில் அமில மழையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கைத்தொழில் சாலைகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றதும், வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்றதுமான கந்தகவீரொட்சைட்டு, நைதரசன் ஓரொட்சைட்டு, நைதரசனீரொட்சைட்டு ஆகியன வளிமண்டலத்திலும், வளிமண்டல நீர் நிலைகளிலும் கலக்கப்படுகின்றன. இவற்றின் மூலமாக தோற்றுவிக்கப்படும் படிவு வீழ்ச்சி அல்லது அமிலப்படிவுகளுடன் பெய்வதாக காணப்படும். இதனையே அமில மழை என்கிறோம்.
இத்தகைய அமில மழை உலகில் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது பொழிவதை நாம் கேட்டும், பார்த்தும், அறிந்தும் வருகின்றோம். உதாரணமாக 1979 இல் கனடாவில் டொரான்டோ, அமெரிக்காவின் லொஸ்ஏன்ஜல்ஸ் (1981), மற்றும் நோர்வே போன்ற நாடுகளில் இத்தகைய அமில மழை பொழிந்துள்ளது.
- கந்தகம் அதிகமாகவுள்ள எரிபொருளை பயன்படுத்தும் பாரிய கைத்தொழிற்சாலைகளிலுமிருந்தும்,
- உயிர்ச்சுவட்டு எரிபொருட்களை எரிப்பதன் மூலமாகவும்,
- எரிமலைக் கற்குகைகள் மூலமாகவும், தோற்றுவிக்கப்படுகின்றன.
தோற்றுவிக்கப்படுகின்றன.
- அமில மழையின் காரணமாக மண்ணில் அமிலத் தன்மை அதிகரிக்கும். இதன் மூலமாக மண்ணில் காணப்படும் உலோக மூலகங்களின் அளவு அதிகரிக்கும்.
உ+ம்: அமில மழையினால் மண்ணில் அலுமினியத்தின் அளவு அதிகரிக்கும். அவை தாவரங்களுக்கு நச்சுத்தன்மையாக மாறும்.
- அமில மழையின் காரணமாக மண்ணில் உள்ள போசணைக் கூறுகள் அல்லது வளரும் தாவரங்களுக்கு கிடைக்காமல் போகும். அத்துடன் மண்ணிலுள்ள நுண்ணங்கிகளும் ஏனைய அங்கிகளும் கொல்லப்படுவதால் அதன் மூலமாக ஆற்றப்படுகின்ற உக்கல் செயற்பாடுகள் தடுக்கப்படும்.
- பசுமையான மரங்களின் இலைகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
உ+ம்: தாஜ்மகால்
மேற்கண்ட எடுத்துக்காட்டுக்கள் அமில மழையினால் புவியில் தோற்றுவிக்கப்படும் சில பிரச்சினைகளை மட்டுமே விளக்கியுள்ளன. இத்தகைய அனர்த்தங்களை தவிர்ப்பதற்காக நாம் பல்வேறு மாற்று வழிகளைத் தேட வேண்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக