ஆய்வறிக்கை எழுதுதல்
எப்.எம்.நவாஸ்தீன்
அறிமுகம்
ஆய்வுச் செயன்முறையின் இறுதிப்படிநிலை ஆய்வறிக்கை எழுதுவதாகும். ஆய்வாளர் தான் மேற்கொண்ட ஆய்வினைப் பற்றிய விடயங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துகூறத் தயாரிக்கும் ஆவணமே ஆய்வறிக்கை எனப்படும். ஆய்வறிக்கை எழுதும்போது கவனத்திற்கொள்ள வேண்டிய சில அடிப்படை அம்சங்கள் பற்றி இக்கட்டுரை எடுத்து நோக்குகிறது.
ஆய்வு அறிக்கை தயாரிக்கப்படுவதன் நோக்கங்கள்
ஆய்வாளர் பல்வேறு நோக்கங்களுக்காக ஆய்வறிக்கையினை தயாரிக்க முடியும். அவற்றுள் சில வருமாறு
- பட்ட நிகழ்ச்சித்திட்டம் அல்லது பட்டமேற் கற்கையினை நிறைவுசெய்வதற்காக ஆய்வொன்றை மேற்கொண்டு, அதன் இறுதியில் ஆய்வினை அறிக்கையாக சமர்ப்பித்தல். இது ஆங்கிலத்தில் Dissertation, Thesis எனப் பலவாறாக பெயரிடப்படும். அறிக்கையில் உள்ளடங்க வேண்டிய சொற்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இவற்றின் பெயர் Dissertation ஆகவோ Thesis ஆகவோ அமையப்பெறும்.
- மேற்கொண்ட ஆய்வினை, ஓர் ஆய்வு மாநாட்டில் முன்வைப்பதற்காக அல்லது ஆய்வுச் சஞ்சிகையில் கட்டுரையாக வெளியிடுவதற்காக ஆய்வறிக்கையை தயார் செய்தல்
- சிலபோது, ஆய்வாளர், தனது ஆய்வினை மேற்கொள்வதற்கு, நிறுவனம்/நபர்களிடம் நிதி உதவி பெற்றிருக்கக்கூடும். எனவே, ஆய்வின் முடிவில் நிதி உதவி செய்தவர்களுக்கு அறிக்கையாக சமர்ப்பிப்பதற்காக வேண்டி ஆய்வறிக்கையை எழுதுதல் வேண்டும்.
- ஆய்வுக் கண்டுபிடிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாட்டின் கொள்கை வகுப்பாளர்களுக்கு அல்லது பொறுப்புவாய்ந்த நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக ஆய்வறிக்கையை எழுதுதல்.
மேற்கண்ட நோக்கங்களை, ஆய்வறிக்கை தயாரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
ஆய்வுஅறிக்கை- வகைகள்
ஆய்வறிக்கை பின்வரும் வகைகளாக நோக்கப்படும்.
- Technical Report - தொழினுட்ப அறிக்கை
- Popular Report - பிரபலமான அறிக்கை
- Oral Report – வாய்மூல அறிக்கை
தொழில்நுட்ப அறிக்கை மற்றும் பிரபலமான அறிக்கை என்பன வெவ்வேறு நோக்கங்கள் மற்றும் வாசகர்களைக் கொண்ட இரண்டு வெவ்வேறு வகையான ஆவணங்கள் ஆகும். இவற்றில் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. இவற்றை அறிக்கையை வாசிக்கும் வாசகர், அறிக்கையின் நோக்கம், அறிக்கையின் வடிவம், அறிக்கையில் பயன்படுத்தப்படும் மொழிநடை என்பனவற்றின் அடிப்படையில் வேறுபடுத்தி நோக்க முடியும். அவையாவன:
- வாசகர்கள்: தொழினுட்ப அறிக்கைகளின் வாசகர்கள் ஆய்வுடன் தொடர்புடைய ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், அல்லது துறைசார் நிபுணர்கள் ஆகும். ஆனால், பிரபலமான அறிக்கை, நிபுணர்கள் அல்லாதவர்கள் உட்பட சாதாரண பொது மக்களுக்காக தயாரிக்கப்படுவதாக இருக்கும்.
- நோக்கம்: ஆய்வறிக்கை தயாரிக்கப்படும் நோக்கத்தின் அடிப்படையிலும் தொழினுட்ப அறிக்கை, பிரபல அறிக்கையில் வேறுபாட்டை காண முடியும். ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பினை அல்லது பிரச்சினை பற்றிய விரிவான தகவல்களை வழங்குதல், ஆய்வு பிரச்சினையின் முக்கியத்துவம், தரவு சேகரிப்பு முறைகள், தரவு பகுப்பாய்வு முறைகள், கண்டுபிடிப்புகள், பரிதுரைகள் பற்றி விரிவான தகவல்களை வழங்கும் நோக்கில் தொழினுட்ப அறிக்கை தயாரிக்கப்படும். மாறாக, அதிக பார்வையாளர்களிடம் /வாசகர்களிடம் தகவல்களை கொண்டு சேர்ப்பதற்காக, குறித்த வாசகர்களை மேலும் ஆர்வமூட்டுதல், அறிவூட்டுதல் போன்ற நோக்கங்களுக்காக பிரபலமான அறிக்கைகள் தயாரிக்கப்படும்.
- வடிவம்: தொழில்நுட்ப அறிக்கைகளை எவ்வாறு எழுத வேண்டும், அதன் கட்டமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வழிகாட்டல்கள் உள்ளன. அதாவது தொழில்நுட்ப அறிக்கைகள் ஒரு குறிப்பிட்ட முறையிலேயே கட்டமைக்கப்படுகின்றன, முறையான தலைப்புப் பக்கம், உள்ளடக்க அட்டவணை, அறிமுகலந்துரையாடல், முடிவிரை மற்றும் பரிந்துரைகள் என ஓர் ஒழுங்குமுறையில் இவை தயாரிக்கப்படுவதாக காணப்படும். ஆனால், பிரபலமான அறிக்கைகளின் அவற்றின் கட்டமைப்பு நெகிழ்வு தன்மை கொண்டதாக இருக்கும். யாருக்காக எழுதப்படுகின்றது எனபதைப் பொறுத்து இதன் கட்டமைப்பு மாற்றமடையும். இதற்காக கதை சொல்லல் நிகழ்வுகளை சித்தரிப்பது போன்றவாறு எளிமையானதாக இது அமையலாம்.
- மொழி நடை: தொழில்நுட்ப அறிக்கைகள் பெரும்பாலும் கல்விசார் மொழி நடையினை பின்பற்றி எழுதப்படும். தொழில்நுட்ப அறிக்கைகளை துறைசார் நிபுணர்களே அதிகம் வாசிப்பதால், அவர்கள் விளங்கும் வகையில், துறைசார் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டு இவ்வறிக்கைகள் எழுதப்படும். ஆனால் பிரபலமான அறிக்கைகள், பொது மக்கள், துறைசார் நிபுணர்கள் அல்லாதவர்கள் விளங்கும் வகையில் எழுதப்படல் வேண்டும். எனவே, அவர்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் இவ்வறிக்கைகள் எளிய மொழி நடையில் எழுதப்படும்.
|
ஆய்வு முன்மொழிவு |
ஆய்வறிக்கை |
நோக்கம்
|
முதுமாணி, கலாநிதி
கற்கைகளுக்கு அனுமதி பெறல், நிதியளிப்பு
நிறுவனங்களில் நிதியை பெற்றுக் கொள்ளல், மேற்பார்வையாளரின்
ஒப்புதலை பெறுதல் ஆய்வு ஒழுக்கநெறி
சபைகளில் ஆய்வினை தொடர்ந்து முன்னெடுக்க ஒப்புதலை பெறல் போன்ற நோக்கங்களுக்காக
ஆய்வு முன்மொழிவு எழுதப்படும். |
முதுமாணி, கலாநிதி
படிப்புகளை நிறைவு செய்வதற்காக சமர்பிக்கப்படுதல், மேற்கொள்ளப்பட்ட
ஆய்வின் முடிவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளல் போன்ற நோக்கங்களுக்காக
ஆய்வறிக்கை எழுதப்படும். |
கட்டமைப்பு
|
ஆய்வு முன்மொழிவின்
கட்டமைப்பு, பொதுவாக அறிமுகம், இலக்கிய மீளாய்வு, ஆய்வு முறையியல் எதிர்பார்க்கப்படும் முடிவுகள் போன்றவற்றை
சுருக்கமாக தெரிவிக்கும் வகையில் காணப்படும்.
|
ஒரு ஆய்வு
அறிக்கையின் கட்டமைப்பு, நீங்கள் எந்த துறையில் ஆய்வினை மேற்கோள்கிறீர்கள்
என்பதை பொறுத்து வேறுபடும். எனினும், பொதுவாக, அறிமுகம், இலக்கிய மீளாய்வு, ஆய்வு முறையியல், கண்டுவிடிப்புகள், கலந்துரையாடல் முடிவுரையும், பரிந்துரைகள் என்றவாறான
நிலையான கூறுகளை கொண்டிருக்கும். |
நீளம்
|
ஆய்வு
முன்மொழிவுகள் பொதுவாக ஆய்வு அறிக்கைகளை
விட குறைவாக இருக்கும், பொதுவாக 5 முதல்
20 பக்கங்கள் வரையே காணப்படும்.
|
ஆய்வு
அறிக்கைகள் ஆய்வு மேற்கொள்ளப்படும்
நோக்கத்தைப் பொறுத்து மிக நீளமாக இருக்கும். இளமாணி பட்ட படிப்பில் சமர்பிக்கப்படும்
ஆய்வறிக்கை 25,000 சொற்களைக்
கொண்டதாகவும், முதுமாணி கற்கையில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை 60,000 சொற்களுக்குள் எழுதப்படும்.
கலாநிதி கற்கையில் சமர்பிக்கப்படும் அறிக்கை 100,000 சொற்கள் வரை காணப்படும்.
அதேவேளை, ஆய்வு சஞ்சிகைக்கு சமர்பிக்கப்படும் கட்டுரை 3000-6000
சொற்கள் கொண்டதாக அமையலாம். |
தொனி (மொழி நடை)
|
ஆய்வு
முன்மொழிவுகள், இனிமேல் செய்யப்பட வேண்டிய ஆய்வொன்றிக்கான ஒப்புதலைப் பெறுவதற்கு
சமர்பிக்கப்டுவதால், இதன் தொனி பெரும்பாலும் தற்காலிகமானது. மொழிநடை நடை எதிர்காலத் மொழி நடையில் எழுதப்படும்.
|
ஆய்வறிக்கை, ஆய்வொன்றை
மேற்கொண்ட பின்னர் எழுதப்படுவதால், அதன் தொனி
பொதுவாக மிகவும் உறுதியானதாகவும் நம்பிக்கையுடனும் இருக்கும். மொழி நடை
நிகழ்கால அல்லது இறந்த கால நடையில்
எழுதப்படுவதாக இருக்கும்.
|
பார்வையாளர்கள் |
ஒரு ஆய்வு
முன்மொழிவுக்கான முதன்மை பார்வையாளர்கள் பொதுவாக மேற்பார்வையாளர், நிதியளிப்பு நிறுவனம் அல்லது ஆய்வு ஒழுக்க
நெறிமுறை சபை ஆகும்.
|
ஆய்வு அறிக்கைக்கான பார்வையாளர்கள் முதன்மை பொதுவாக ஆய்வு கண்டுபிடிப்புகளில்
ஆர்வமுள்ள பிற ஆராய்ச்சியாளர்கள் அல்லது துறை சார் நிபுணர்கள் ஆக காணப்படுவர். |
- ஆய்வுத் தலைப்பு
- ஆய்வுச் சுருக்கம்
- அறிமுகம்
- இலக்கிய மீளாய்வு
- ஆய்வு முறையியல்
- கண்டுபிடிப்புகள்
- கலந்துரையாடல்
- முடிவுரை
- உசாத்துணை / நூல்விபர பட்டியல்
- பின்னிணைப்புகள்
- சுருக்கமான ஆனால் தெளிவான விபரத்தை அளிப்பதாக அமைதல் வேண்டும்.
- உத்தேச ஆய்வினை பிரதிபலித்தல் வேண்டும்.
- கவரக்கூடியதாக அமைதல் வேண்டும்.
- ஆய்வுத் தலைப்பு சுயாதீன மற்றும் சார்ந்த மாறிகளை உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும்.
- ஆய்வுத் தலைப்பில் இருந்து ஆய்வுக்குரிய கருச் சொற்களை பெறக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
- தலைப்பில் ஆய்வுக் குடி/ பிரதேசம் உள்ளடக்கப்பட்டு இருத்தல் வேண்டும்.
[அத்தியாயம் 1:] அறிமுகம்
ஆய்வு அறிக்கையின் ஆரம்பத்தில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான பின்னணி விபரங்களை அளித்தல் வேண்டும். ஆய்வு அறிக்கையின் ஒரு தொடக்க புள்ளியாக இந்த அறிமுகம் அமையும் எனலாம். இது ஆய்வுக்கான பின்னணி தகவலை வாசகர்களுக்கு வழங்குகிறது. அதன் நோக்கம் ஆய்வுக்கான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவதாகும், இதன்போது, வாசகர்கள், உங்கள் ஆய்வைப் புரிந்துகொள்வதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் இது போதுமான பின்னணியை வழங்கவதாக அமைய வேண்டும். இதனைப் வாசித்த பிறகு, உங்கள் ஆய்வு எதைப் பற்றியது, நீங்கள் என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள், ஏன் இந்த ஆய்வினை மேற்கொள்கிறீர்கள் மற்றும் எந்த ஆய்வு முறைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உங்கள் வாசகர் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அறிமுகப் பகுதியில் பொதுவாக பின்வரும் கூறுகள் உள்ளடங்கும்:
- அறிமுகம்
- ஆய்வு பிரச்சினை
- ஆய்வு பிரச்சினைக்கான பின்னணி
- ஆய்வின் முக்கியத்துவம்
- பிரதான நோக்கம், குறிக்கோள்கள், ஆய்வு வினா,
- ஆய்வின் நியாயிப்பு
- தொழிற்படு வரைவிலக்கணம்
- உங்கள் ஆய்வுடன் தொடர்புபட்ட வகையில் தற்போது காணப்படும் அறிவு என்ன? What is the current state of knowledge on the topic?
- நீங்கள் இலக்கிய மீளாய்வுக்கு தெரிவு செய்த சார்பிலக்கியங்களில் பயன்படுதப்பட்டுள்ள வெவ்வேறான அணுமுறைகள் /முறையியல்கள் யாவை? What differences in approaches / methodologies are there?
- நீங்கள் இலக்கிய மீளாய்வுக்கு தெரிவு செய்த சார்பிலக்கியங்களின் பலங்களும், பலவீனங்களும் யாவை? Where are the strengths and weaknesses of the research?
- உங்கள் ஆய்வுடன் தொடர்புபட்ட வகையில் எத்ததைய மேலதிக ஆய்வுகள் தேவையாக உள்ளன்? இது ஆய்வு இடைவெளியாக அமையப் பெறும். What further research is needed? The review may identify a gap in the literature which provides a rationale for your study and supports your research questions and methodology.