புவி, புவியின் வடிவம் மற்றும் புவியின் இயக்கங்கள்

 புவி, புவியின் வடிவம் மற்றும் புவியின் இயக்கங்கள்

புவி

ஞாயிற்று தொகுதியில் உள்ள கோள்களுள், உயிர்வாழும் அங்கிகளையும், தண்ணீரையும் கொண்ட ஒரே கோளாக, புவி விளங்கி வருகின்றது. புவியின் வடிவம் அதன் இயக்கம் பற்றி இங்கு சற்று எடுத்து நோக்குவோம்.

புவியின் வடிவம்

புவியானது கோள வடிவானது. ஆயினும் நாம் எண்ணுவது போன்று, புவியானது ஒரு சமச்சீரான கோள வடிவமானதல்ல. ஏனெனனில், புவியின் புவியச்சு விட்டமும், மத்திய கோட்டு விட்டமும் வேறுபட்ட அளவுகளில் அமைந்துள்ளன. புவியின் புவியச்சு விட்டம் 12,714km  ஆக உள்ளது . ஆனால், மத்திய கோட்டு விட்டமானது , 12,757 (12,756) km ஆக உள்ளது. புவியின் மத்திய கோட்டு விட்டமானது,, புவியச்சு விட்டத்தை விடவும் 43 km அதிகமாக உள்ளதே, புவி சமச்சீரற்ற கோளம் எனக் கூறக் காரணமாகும்.

புவியின் இயக்கங்கள்

புவி இடைவிடாது தன்னச்சில் சுற்றிக் கொண்டே உள்ளது. இதனேயே புவிச் சுழற்சி என்பர். புவி ஒரு தடவை தன்னை தானே சுற்றுவதற்கு சுமார் 24 மணி நேரம் அல்லது ஒரு நாளினை எடுத்து கொள்கிறது. புவியின் சுழற்சி காரணமாகவே, இரவு, பகல் தோன்றுகின்றன.

பூமி, தன்னச்சில் சுழன்று வருவது போல, சூரியனையும் நீள்வட்ட பாதையில்சுற்றிப் பயணம் செய்கிறது. இதனையே. புவி சுற்றுகை என்பர். புவிச் சுற்றுகையின் காரணமாக, புவியில் வேறுபட்ட பருவகாலங்கள் உருவாகுகின்றன.

பருவ காலங்கள் 

மார்ச் 21 : சம இராக்காலம் காணப்படும். புவிக்கு சூரிய உச்சம் முனைவுகளினூடாக கிடைக்கப்பெறுவதால், புவியெங்கிலும் சமமான இரவு, பகல் காணப்படும். இக்காலம் இலைதுளிர் காலம், வசந்த காலம், இளவேனில் காலம் எனப் பலவாறாக அழைக்கப்படும்.

ஜூன் 22: சூரியன், கடகக் கோட்டிக்கு உச்சம் கொடுக்கும் காலம். இதனால், புவியின் வட அரைகோளம், கோடையினை அனுபவிக்கும்.  புவியின் வட அரைகோளத்தில் நீண்ட பகல் வேளையும், தென் அரைகோளம், நீண்ட இராப் பொழுதுகளையும் கொண்டிருக்கும்.

செப்டம்பர் 23: இலையுதிர் காலம். சூரிய உச்சம் புவியின் முனைவினூடாக கிடக்கப்பெறுவதால், மீண்டும், புவியில் சம இராக்காலம் காணப்படும்.

டிசெம்பர் 22: மகரக் கோட்டில், சூரிய உச்சம் காணப்படும். இதன் காரணமாக, வட அரைக் கோளம், நீண்ட இரவுகளை கொண்டிருக்கும். தென் அரைகோளம், நீண்ட பகல் வேளைகளை அனுபவிக்கும்.

ஓசோன் படலம் - Ozone Layer

 ஓசோன் படலம்

ஓசோன்ஒட்சிசனினால் ஆக்கப்படும் ஒரு மூலக்கூறாகும். மூன்று ஒட்சிசன் மூலக்கூறுகளால் ஓசோன் (O3உருவாக்கப்படுகிறது. வளிமண்டலத்தில் ஓசோன் படலத்தின் செயற்பாடு மிக முக்கியமானதாகவுள்ளது. புவியின் வளிமண்டலப் பகுதியில் படைமண்டலத்தில் கீழ்ப்பகுதிகளில் இந்த ஓசோன் படலத்தை நாம் காணலாம். ஓசோன் நிறமற்ற வாயுவாகும். தாழ்மண்டல ஓசோன் பச்சை வீட்டு வாயுவாக விளங்க படைமண்ட ஓசோனே புவியைப் பாதுகாக்கும் கவசமாகத் தொழிற்படுகிறது.

Source: Clipart-Library

சூரியனிலிருந்து வெளிவரும் சூரியக் கதிர்வீச்சானது மிகச் செறிவான கழிஊதாக் கதிர்களை கொண்டுள்ளது. இக்கதிர்கள் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பயங்கரமான தீங்குகளை விளைவிக்கக்கூடியது. இத்தகைய கதிர்களை வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலமானது தடுத்து நிறுத்துகின்றது.

இத்தகைய பெரும் பங்களிப்பினை ஆற்றுகின்ற ஓசோன் படலமானது அண்மைக் காலமாக அழித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனையே ஓசோன் படை ஓட்டை என்று கூறுகின்றனர்.

Source: Clip-Art Library

நாம் பயன்படுத்துகின்ற மிகை குளிரூட்டிகள்குளிர்சாதனப் பெட்டிகள் ஆகியவற்றில் இருந்தும் ஊகுஊ வாயுக்களும் நெற்செய்கை நிலங்களிலிருந்து சதுர்ப்பு நிலங்களிலிருந்தும் உற்பத்தியாக்கப்படுகின்ற மீதேன் வாயுவாகனங்கள்சக்தி நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படுகின்ற நைதரசன் ஒட்சைட்டு ஆகியன ஓசோன் மூலக்கூறுகளைத் தனித்தனி ஒட்சிசன் மூலக்கூறுகளாக பிரிகையடையச் செய்கின்றன. இதனால் ஓசோன் படலம் இல்லாமலாக்கப்படுகின்றது. இதன் மூலமாக ஓசோன் படலத்தில் துவாரங்கள் ஏற்பட்டு அதன் மூலம் புவியிலுள்ள உயிர்க்கூறுகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சூரிய கதிர்கள் நேரடியாக புவியினை வந்தடைய வழி ஏற்படுகின்றது. இதனால் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு கட்காசம்தோற் புற்றுநோய் என்பன ஏற்படுகின்றன.

A useful Video: https://www.youtube.com/watch?v=aU6pxSNDPhs

அமில மழை -Acid Rain

 அமில மழை 

அண்மைக்காலமாக, அமிலமழையின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. கைத்தொழில் புரட்சியின் பின் புவியில் ஏற்பட்ட சூழல் அனர்த்தங்களில் அமில மழையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கைத்தொழில் சாலைகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றதும்வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்றதுமான கந்தகவீரொட்சைட்டுநைதரசன் ஓரொட்சைட்டுநைதரசனீரொட்சைட்டு ஆகியன வளிமண்டலத்திலும்வளிமண்டல நீர் நிலைகளிலும் கலக்கப்படுகின்றன. இவற்றின் மூலமாக தோற்றுவிக்கப்படும் படிவு வீழ்ச்சி அல்லது அமிலப்படிவுகளுடன் பெய்வதாக காணப்படும். இதனையே அமில மழை என்கிறோம். 

Source: http://clipart-library.com/clipart/n553755.htm

இத்தகைய அமில மழை உலகில் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது பொழிவதை நாம் கேட்டும்பார்த்தும்அறிந்தும் வருகின்றோம். உதாரணமாக 1979 இல் கனடாவில் டொரான்டோஅமெரிக்காவின் லொஸ்ஏன்ஜல்ஸ் (1981), மற்றும் நோர்வே போன்ற நாடுகளில் இத்தகைய அமில மழை பொழிந்துள்ளது.

 அமில மழைக்குக் காரணமாகின்ற கந்தகவீரொட்சைட்டு,

  • கந்தகம் அதிகமாகவுள்ள எரிபொருளை பயன்படுத்தும் பாரிய கைத்தொழிற்சாலைகளிலுமிருந்தும்,
  •  உயிர்ச்சுவட்டு எரிபொருட்களை எரிப்பதன் மூலமாகவும்,
  •  எரிமலைக் கற்குகைகள் மூலமாகவும்தோற்றுவிக்கப்படுகின்றன.
  •  அமில மழைக்குக் காரணமாகின்ற நைதரசன் ஓரொட்சைட்டுநைதரசன் ஈரொட்சைட்டு என்பன,
  •  நைதரசன் அதிகமாகவுள்ள உயிர்ச்சுவட்டு எரிபொருட்களை எரிப்பதன் மூலமாகவும்,
  •  வாகனங்கள் வெளியேற்றும் புகைகளின் மூலமாகவும்,
  •  கைத்தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் அமிலத் துளிகள் மூலமாகவும்,
  •   எரிமலைக் கற்குகைகள் மற்றும் மின்னலின் மூலமாகவும்,

                               தோற்றுவிக்கப்படுகின்றன.

  • அமில மழையின் காரணமாக மண்ணில் அமிலத் தன்மை அதிகரிக்கும். இதன் மூலமாக மண்ணில் காணப்படும் உலோக மூலகங்களின் அளவு அதிகரிக்கும்.

உ+ம்: அமில மழையினால் மண்ணில் அலுமினியத்தின் அளவு அதிகரிக்கும். அவை தாவரங்களுக்கு நச்சுத்தன்மையாக மாறும்.

  • அமில மழையின் காரணமாக மண்ணில் உள்ள போசணைக் கூறுகள் அல்லது வளரும் தாவரங்களுக்கு கிடைக்காமல் போகும். அத்துடன் மண்ணிலுள்ள நுண்ணங்கிகளும் ஏனைய அங்கிகளும் கொல்லப்படுவதால் அதன் மூலமாக ஆற்றப்படுகின்ற உக்கல் செயற்பாடுகள் தடுக்கப்படும்.
  •  பசுமையான மரங்களின் இலைகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
  •  நீர்நிலைகள் அமிலத்தன்மையுடையதாக மாறுவதால் உணவுச் சங்கிலிகள் மற்றும் சூழற்தொகுதியின் தொழிற்சாலைகள் பாதிப்படையும்.
  •  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் மாசுபடுவதற்கும் அழிவுறுவதற்கும் காரணமாகின்றது.

உ+ம்: தாஜ்மகால்

மேற்கண்ட எடுத்துக்காட்டுக்கள் அமில மழையினால் புவியில் தோற்றுவிக்கப்படும் சில பிரச்சினைகளை மட்டுமே விளக்கியுள்ளன. இத்தகைய அனர்த்தங்களை தவிர்ப்பதற்காக நாம் பல்வேறு மாற்று வழிகளைத் தேட வேண்டியுள்ளது.

பூகோளம் வெப்பமாதல்- Global Warming

 பூகோளம் வெப்பமாதல்

பச்சை வீட்டு விளைவினால் ஏற்பட்டுள்ள நேரடித் தாக்கமாக புவி வெப்படைதல் காணப்படுகிறது. கைத்தொழில் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட நிகழ்வுகளினால் பச்சை வீட்டு வாயுக்கள் அதிகரித்தே  வந்துள்ளன. அதிகரித்த பச்சை வீட்டு விளைவின் காரணமாக புவியின் முழு வெப்பமும் அதிகரிக்கின்றது. இச்செயற்பாடு புவி வெப்பமடைதல் அல்லது பூகோளம் வெப்பமாதல் எனப்படும். இது காலநிலை மாற்றத்தைக் குறிப்பதன்று. புவி வெப்பமடைவதால் ஏற்படும் பல பாதிப்புகளில் காலநிலை மாற்றமும் ஒன்றாகும்.

Source: http://clipart-library.com/global-warming-cliparts.html

ஏற்கனவே கூறப்பட்டது போன்று புவி வெப்பமடைதலுக்கு பச்சை வீட்டு வாயுக்களே காரணமாகின்றன. இப்பச்சை வீட்டு வாயுக்கள் இயற்கைச் செயற்பாடுகளின் மூலமாகவும் மனித நடவடிக்கைகள் மூலமாகவும் வளிமண்டலத்தில் அதிகரித்து வருகின்றன.

காபனீரொட்சைட்டுமீதேன்அலோ காபன்கள்கந்தகவீரொட்சைட்டுகாபனோரொட்சைட்டுநைதரசவீரொட்சைட்டுதாழ்வளி ஓசோன் ஆகியன புவி வெப்பமடைதலுக்கு பங்களிக்கின்ற மூலகங்களாக விளங்குகின்றன.

 புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகள்

  • புவியின் சராசரி வருடாந்த வெப்பநிலை 3 பாகை பரனைட்டில் இலிருந்து பாகை பரனைட் வரை உயர்ந்து வருகின்றது. இந்த வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக உருகுகின்ற பனிக்கட்டிகள் அபாயகரமான தாக்கத்தை விவசாயத்திலும் இறுதியாக கடல் மட்டத்திலும் உருவாக்க முடியும். வெப்பநிலையின் உயர்ச்சி துருவப் பனிக்கட்டிகளை உருகச் செய்வதனால் அதிகளவு நீரை வெளியேற்றி சமுத்திர மட்டம் உயர்வதற்கு காரணமாக அமையும். அண்மையில் கங்கை நதியின் ஆரம்ப இடமான பனிமலைப்பகுதியில் பனிக்கட்டிகள் விரைவாக உருகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  •  நிலப்பகுதியிலிருந்து அதிகளவு நீராவியாதல் ஏற்படும். இதன் காரணமாக நீரியல் வட்டம்கடல் சூழற் தொகுதியின் உப்புத்தன்மைநன்னீர் தொகுதி போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். அத்துடன் மீன்களின் முட்டை உற்பத்தியும் பாதிக்கப்படும்.
  •  சமுத்திர நீரோட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
  •  வாழும் அங்கியின் நொதியத் தொழிற்பாட்டில் பாதிப்பு ஏற்படும். இதனால் சுவாசமும் ஒளித்தொகுப்பும் பாதிக்கப்படும்.
  •  பாலைவனமாதல் தீவிரமடையும்.

இவைபோன்ற பாதிப்புக்கள் பூகோள வெப்பமடைவதால் ஏற்படும் என அஞ்சப்படுகின்றது.

இவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பான பேரழிவுகள் தற்பொழுது உலகில் அரங்கேறி வருகின்றன. இனியும் தாமதிக்காது இதனை தடுத்து நிறுத்துவதற்கான செயற்பாடுகளில் நாமும் அரசாங்கமும் ஈடுபட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. இதற்காக தனிமனிதன் என்ற வகையிலும் நாம் இப்புவியில் வாழுகின்ற பிரஜை என்ற வகையிலும் சூழலைப் பாதுகாக்க வேண்டிய செயற்பாடுகளை ஆற்ற வேண்டியுள்ளோம். முடியுமான அளவு தாவரங்களை அழிக்காதிருத்தல்மரம் நடுகையில் ஈடுபடுதல்பச்சை வீட்டு வாயுக்களை வெளியிடும் பொருட்களை உபயோகிக்காது இருத்தல் சிறிய சிறிய தேவைகளுக்கு மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்தல்துவிச்சக்கரவண்டியின் பாவனைகளை அதிகரித்தல் போன்ற இன்னோரன்ன நடவடிக்கைகளில் எம்மை ஈடுபடுத்துவது புண்பட்டுப் போயிருக்கும். எம் பூமித்தாய்க்கு நாம் மேற்கொள்கின்ற ஆறுதலான விடயங்கள் எனலாம்.

அரசாங்கம் என்ற வகையில் பச்சை வீட்டு விளைவுகளை அதிகரிக்கும் வாயுக்களை வெளியிடும் பொருட்கள் தொழில் நடவடிக்கைகளை தடுத்தல்காடழிப்பினைத் தடுத்தல்மீள்காடாக்கம் செய்தல்மக்களை விழிப்புணர்வுக்கு உள்ளாக்குதல்சர்வதேச ஒப்பந்தங்களை மதித்து நடத்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

பச்சை வீட்டு விளைவும் புவி வெப்பமடைதலும்

 பச்சை வீட்டு விளைவும் புவி வெப்பமடைதலும்

Source: https://www.pinterest.com/pin/54887689184097710/

உவப்பற்ற காலநிலையில் தாவரங்களை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற கூடாரத்தை பச்சை வீடு என்று அழைப்பர். இப்பச்சை வீட்டின் சிறப்பம்சம்உரிய தாவரத்துக்குரிய வெப்பத்தினை பேணுவதாகும். இதே போன்றதொரு தொழிற்பாட்டினை எமது வளிமண்டலமும் ஆற்றுகின்றது.

சூரியனிலிருந்து சிற்றலைக் கதிர்களாக புவியினை நோக்கி வரும் கதிர்வீசலில் புவிக்குத் தேவையான வெப்பத்தினை வளிமண்டலம் உட்புக விடுகின்றது. இவ்வாறு புவியை வந்தடைகின்ற வெப்பம் இரவில் நெட்டலைக் கதிர்வீசலாக வீசப்படும்போது வளிமண்டலமானது அதனைத் தடுத்து புவி வளிமண்டலத்திற்குத் தேவையான வெப்பத்தை பேண உதவும். வளிமண்டலத்தில் காணப்படும் காபனீரொட்சைட்டுநீராவி போன்றன வெப்பத்தை உறிஞ்சி வைத்துக் கொள்ள உதவுகின்றன. இதனையே பச்சை வீட்டு விளைவு என்பர். இது உண்மையிலேயே புவியியற் செயற்பாட்டுக்கு மிக இன்றியமையாததாக உள்ளது. ஆயினும் இத்தகைய செயற்பாடானது அண்மைக்கால மனித நடவடிக்கைகளின் மூலமாக அபாயகரமாக மாறியுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.

மனித நடவடிக்கைகளின் மூலமாக வளிமண்டலத்தில் காணப்படுகின்ற பச்சை வீட்டு வாயுக்கள் (காபனீரொட்சைட்டுமீதேன்நைதரசு ஒக்சைட்டுஅலோ-காபன்கள்தாழ் மண்டல ஓசோன் வாயு) அதிகரிக்கின்றன. இதன் காரணமாக வளிமண்டலத்தினால் தங்க வைக்கப்படும் வெப்பத்தின் அளவும் கூடுகின்றது. இதன் மூலம் வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரிக்கப்படும்போது புவியின் வெப்பநிலையும் அதிகரித்து புவியின் உயிர்வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்றது.

இவ்வாறு வெப்பம் அதிகரிப்பதன் காரணமாக உலகில் பல விரும்பத்தகாத அழிவுகள் ஏற்படத் தொடங்குகின்றன. புவியின் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்து வரல்அதன் காரணமாக துருவப் பனிமலைகள் உருகுதல்கடல்மட்டம் உயருதல்பல நாடுகளின் பெரும்பாலான பிரதேசங்கள் கடலில் மூழ்குதல். அத்துடன் புவி வெப்பமடைவதனால் காலநிலையில் ஏற்படும் ஒழுங்கீனங்கள் அதன் மூலம் ஏற்படுகின்ற வறட்சிவெள்ளம்பாலைவனமாதல் போன்ற பாரிய அச்சுறுத்தல்களை நாம் இன்று எதிர்நோக்கி வருகின்றோம்.

 பச்சை வீட்டு வாயுக்கள்

காபனீரொட்சைட்டு (Co2மீதேன்நைதரசு ஒட்சைட்டுஅலோ-காபன்கள்தாழ் மண்டல ஓசோன் ஆகியவையாகும். இவை தவிர நீராவியும் பச்சை வீட்டு விளைவில் முக்கிய பங்காற்றும் ஒரு காரணியாகும்.

CO2CO2 வாயுவானது பிரதானமாக தாவர சுவாசம்விலங்குகளின் வாழ்வுஆகியவற்றில் இருந்தும்  உயிர்ச்சுவட்டு எரிபொருட்களையும் மழைக்காடுகளை எரிப்பதன் மூலமாகவும்காடுகளை அழிப்பதன் மூலமாகவும் தோற்றுவிக்கப்படுகிறது. பச்சை வீட்டு வாயுக்களில் இது முக்கிய வாயுவாகக் காணப்படுவதுடன் அண்மைக்காலமாக உயிர்ச்சுவட்டு எரிபொருட்கள் பாவனையின் தீவிரமான அதிகரிப்புகாடுகள் அழிக்கப்படல் ஆகியவற்றின் காரணமாக COவின் அளவு மிக வேகமாக வளிமண்டலத்தில் அதிகரித்து வருகின்றது. பச்சை வீட்டு வாயுக்களில் நீராவியைப் பேணல் கனவளவு கொண்ட வாயுவில் இரண்டாம் இடம் வகிக்கின்றது.

மீதேன் (CH4)வளிமண்டலத்தில் ஊழு2 விட மீதேன் குறைவாக இருந்தபோதிலும் பச்சை வீட்டு வாயுக்களில் அதிக தாக்கமிக்கது. மீதேன் வாயுவானது நெற்செய்கை வயல் நிலங்களின் மூலமாகவும்விலங்குகள்மாடுகளின் மூலமாகவும் தோற்றுவிக்கப்படுகின்றது. மிகச் செறிந்த கைத்தொழில் நிலங்களும் ஈர நிலங்களும் இம்மீதேன் வாயுவை உருவாக்குகின்றன. அண்மைக் காலமாக பல நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட கைத்தொழில் அபிவிருத்தியின் காரணமாக கால்நடை வளர்ப்பின் மூலமாகவும் இம்மீதேன் வாயுவின் அளவு வளிமண்டலத்தில் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பச்சை வீட்டு விளைவில் பங்கேற்கின்ற மீதேனின் அளவு புவி வெப்பமடைவதற்கு பல்வேறு முறையில் காரணமாக அமைகின்றது.

 நைதரசு ஒட்சைட்டு: நைதரசு ஒட்சைட்டுக்கள் மண்ணும் சமுத்திரங்களும் மற்றும் மனித செயற்பாடுகளான விவசாயம்பசளையிடல்நைலோன் தயாரிப்புசேதனப்பொருள் தகனம்எரிபொருள் தகனம்வாகனப்புகை ஆகியவற்றில் இருந்து தோற்றுவிக்கப்படுகின்றன. பச்சை வீட்டு வாயுக்களில் முக்கியமான வாயுவாகும். இவ்வகை வாயுக்கள் வாகனங்கள் வெளியேற்றும் புகைகளில் காணப்படுகின்றன. இருந்தபோதிலும் இவை மின்நிலையங்களிலும் மிக செறிவான விவசாய நடவடிக்கைகளிலும் மிக அதிகமாகத் தோற்றுவிக்கப்படுகின்றன. இவ்வகை வாயுக்கள் புவி வெப்பமடைவதில் 6மூ அளவு பங்களிப்புச் செய்கின்றது.

தாழ் ஓசோன் வாயு: தாழ்மண்டல ஓசோனும் முக்கியமானது. இவ்வகை வாயு வாகனங்களினால் வெளியேற்றப்படும் புகைகளிலுள்ள ஆவிப்பறப்புள்ள சேர்வைகள் சூரிய ஒளியுள்ள போது நைதரசு ஒட்சைட்டுடன் சேரும்போது உருவாக்கப்படுகின்றன. இந்த தாழ்நிலை ஓசோன் மரங்களுக்கும் மிருகங்களுக்கும் மிகவும் தீமையை உண்டுபண்ணுவதுடன் புவி வெப்பமடைவதிலும் பிரதான பங்காற்றுகின்றது.

அலோ-காபன்கள் (Halocarbons): மனித செயற்பாடுகளால் இவை உருவாக்கப்படுகின்றன. புரோமின்குளோரின்புளோரின் போன்ற வாயுக்களைக் கொண்ட அலசன் குடும்ப (halogen family) வாயுக்கள் மற்றும் காபன்களை இவை கொண்டுள்ளன. இவையனைத்தும் வலிமைமிக்க பச்சை வீட்டு வாயுக்களாகும். அனேகமான கைத்தொழில்சாலைகள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து CFC எனும் குளோரோ புளோரோ காபன் விடுவிக்கப்படுகின்றது. பச்சை வீட்டு வாயுக்களில் குளோரோ புளோரோ காபன்களும் முக்கிய பங்காற்றும் ஒன்றாக காணப்படுகின்றது. இவை வாசனைக் கொள்கலன்களிலும்குளிரூட்டிகளிலும் உபயோகிக்கப்படுகின்றன. இது இரு அபாயகரமான பச்சை வீட்டு வாயுவாகும். CFC மூலக்கூறானது ஒரு காபனீரொட்சைட்டு மூலக்கூறினை விட 100 மடங்கு வெப்பத்தினை அதிகமாக உறிஞ்சி வைத்துக் கொள்ளக்கூடிய தன்மை வாய்ந்ததாகும்.

நீராவி (Water Vapor): நீராவியும் பச்சை வீட்டு விளைவை உண்டாக்கும் ஒன்றாகும். இது இயற்கையாகவும் மனிதனாலும்சுவாசம்ஆவியாக்கம் ஆவியுயிர்ப்பு மூலம் உருவாகின்றது. ஆவியாக்கத்தின் மூலம் அதிக நீராவி வெளியிடப்படும்போது புவிமேற்பரப்பு வெப்பம் அதிகரிக்கிறது.

கடந்த வருடங்களில் எந்தளவு பச்சை வீட்ட வாயுக்கள் அதிகரித்துள்ளன என நோக்குவது முக்கியமாகின்றது. கடந்த 200 வருடங்களில் மீதேனின் செறிவு இரட்டிப்பாகியுள்ளது. ஊழு2 வின் செறிவானது கடந்த 160000 வருடங்களிலும் பார்க்க இன்று 20மூ க்கும் மேல் காணப்படுகிறது. சில அலோ காபன்கள் வளிமண்டலத்தில் கடந்த 100 வருடத்திற்குள்ளாக அதிகரித்துச் செல்லுவதாக உள்ளது.

பூகோளம் வெப்பமாதல்

கைத்தொழில் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட நிகழ்வுகளினால் பச்சை வீட்டு வாயுக்கள் அதிகரித்தே  வந்துள்ளன. புவி வெப்பமடைவது பச்சை வீட்டு விளைவின் நேரடித் தாக்கமாகும் அதிகரித்த பச்சை வீட்டு விளைவின் காரணமாக புவியின் முழு வெப்பமும் அதிகரிக்கின்றது. இச்செயற்பாடு புவி வெப்பமடைதல் அல்லது பூகோளம் வெப்பமாதல் எனப்படும். இது காலநிலை மாற்றத்தைக் குறிப்பதன்று. புவி வெப்பமடைவதால் ஏற்படும் பல பாதிப்புகளில் காலநிலை மாற்றமும் ஒன்றாகும்.

ஏற்கனவே கூறப்பட்டது போன்று புவி வெப்பமடைதலுக்கு பச்சை வீட்டு வாயுக்களே காரணமாகின்றன. இப்பச்சை வீட்டு வாயுக்கள் இயற்கைச் செயற்பாடுகளின் மூலமாகவும் மனித நடவடிக்கைகள் மூலமாகவும் வளிமண்டலத்தில் அதிகரித்து வருகின்றன.

காபனீரொட்சைட்டுமீதேன்அலோ காபன்கள்கந்தகவீரொட்சைட்டுகாபனோரொட்சைட்டுநைதரசவீரொட்சைட்டுதாழ்வளி ஓசோன் ஆகியன புவி வெப்பமடைதலுக்கு பங்களிக்கின்ற மூலகங்களாக விளங்குகின்றன.

 புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகள்

  • புவியின் சராசரி வருடாந்த வெப்பநிலை 3 பாகை பரனைட்டில் இலிருந்து பாகை பரனைட் வரை உயர்ந்து வருகின்றது. இந்த வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக உருகுகின்ற பனிக்கட்டிகள் அபாயகரமான தாக்கத்தை விவசாயத்திலும் இறுதியாக கடல் மட்டத்திலும் உருவாக்க முடியும். வெப்பநிலையின் உயர்ச்சி துருவப் பனிக்கட்டிகளை உருகச் செய்வதனால் அதிகளவு நீரை வெளியேற்றி சமுத்திர மட்டம் உயர்வதற்கு காரணமாக அமையும். அண்மையில் கங்கை நதியின் ஆரம்ப இடமான பனிமலைப்பகுதியில் பனிக்கட்டிகள் விரைவாக உருகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  •  நிலப்பகுதியிலிருந்து அதிகளவு நீராவியாதல் ஏற்படும். இதன் காரணமாக நீரியல் வட்டம்கடல் சூழற் தொகுதியின் உப்புத்தன்மைநன்னீர் தொகுதி போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். அத்துடன் மீன்களின் முட்டை உற்பத்தியும் பாதிக்கப்படும்.
  •  சமுத்திர நீரோட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
  •  வாழும் அங்கியின் நொதியத் தொழிற்பாட்டில் பாதிப்பு ஏற்படும். இதனால் சுவாசமும் ஒளித்தொகுப்பும் பாதிக்கப்படும்.
  •  பாலைவனமாதல் தீவிரமடையும்.

இவைபோன்ற பாதிப்புக்கள் பூகோள வெப்பமடைவதால் ஏற்படும் என அஞ்சப்படுகின்றது.

இவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பான பேரழிவுகள் தற்பொழுது உலகில் அரங்கேறி வருகின்றன. இனியும் தாமதிக்காது இதனை தடுத்து நிறுத்துவதற்கான செயற்பாடுகளில் நாமும் அரசாங்கமும் ஈடுபட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. இதற்காக தனிமனிதன் என்ற வகையிலும் நாம் இப்புவியில் வாழுகின்ற பிரஜை என்ற வகையிலும் சூழலைப் பாதுகாக்க வேண்டிய செயற்பாடுகளை ஆற்ற வேண்டியுள்ளோம். முடியுமான அளவு தாவரங்களை அழிக்காதிருத்தல்மரம் நடுகையில் ஈடுபடுதல்பச்சை வீட்டு வாயுக்களை வெளியிடும் பொருட்களை உபயோகிக்காது இருத்தல் சிறிய சிறிய தேவைகளுக்கு மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்தல்துவிச்சக்கரவண்டியின் பாவனைகளை அதிகரித்தல் போன்ற இன்னோரன்ன நடவடிக்கைகளில் எம்மை ஈடுபடுத்துவது புண்பட்டுப் போயிருக்கும். எம் பூமித்தாய்க்கு நாம் மேற்கொள்கின்ற ஆறுதலான விடயங்கள் எனலாம்.

அரசாங்கம் என்ற வகையில் பச்சை வீட்டு விளைவுகளை அதிகரிக்கும் வாயுக்களை வெளியிடும் பொருட்கள் தொழில் நடவடிக்கைகளை தடுத்தல்காடழிப்பினைத் தடுத்தல்மீள்காடாக்கம் செய்தல்மக்களை விழிப்புணர்வுக்கு உள்ளாக்குதல்சர்வதேச ஒப்பந்தங்களை மதித்து நடத்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

 அமில மழை 

அண்மைக்காலமாக, அமிலமழையின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. கைத்தொழில் புரட்சியின் பின் புவியில் ஏற்பட்ட சூழல் அனர்த்தங்களில் அமில மழையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கைத்தொழில் சாலைகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றதும்வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்றதுமான கந்தகவீரொட்சைட்டுநைதரசன் ஓரொட்சைட்டுநைதரசனீரொட்சைட்டு ஆகியன வளிமண்டலத்திலும்வளிமண்டல நீர் நிலைகளிலும் கலக்கப்படுகின்றன. இவற்றின் மூலமாக தோற்றுவிக்கப்படும் படிவு வீழ்ச்சி அல்லது அமிலப்படிவுகளுடன் பெய்வதாக காணப்படும். இதனையே அமில மழை என்கிறோம். இத்தகைய அமில மழை உலகில் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது பொழிவதை நாம் கேட்டும்பார்த்தும்அறிந்தும் வருகின்றோம். உதாரணமாக 1979 இல் கனடாவில் டொரான்டோஅமெரிக்காவின் லொஸ்ஏன்ஜல்ஸ் (1981), மற்றும் நோர்வே போன்ற நாடுகளில் இத்தகைய அமில மழை பொழிந்துள்ளது.

 அமில மழைக்குக் காரணமாகின்ற கந்தகவீரொட்சைட்டு,

  • கந்தகம் அதிகமாகவுள்ள எரிபொருளை பயன்படுத்தும் பாரிய கைத்தொழிற்சாலைகளிலுமிருந்தும்,
  •  உயிர்ச்சுவட்டு எரிபொருட்களை எரிப்பதன் மூலமாகவும்,
  •  எரிமலைக் கற்குகைகள் மூலமாகவும்தோற்றுவிக்கப்படுகின்றன.
  •  அமில மழைக்குக் காரணமாகின்ற நைதரசன் ஓரொட்சைட்டுநைதரசன் ஈரொட்சைட்டு என்பன,
  •  நைதரசன் அதிகமாகவுள்ள உயிர்ச்சுவட்டு எரிபொருட்களை எரிப்பதன் மூலமாகவும்,
  •  வாகனங்கள் வெளியேற்றும் புகைகளின் மூலமாகவும்,
  •  கைத்தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் அமிலத் துளிகள் மூலமாகவும்,
  •   எரிமலைக் கற்குகைகள் மற்றும் மின்னலின் மூலமாகவும்,

                               தோற்றுவிக்கப்படுகின்றன.

  • அமில மழையின் காரணமாக மண்ணில் அமிலத் தன்மை அதிகரிக்கும். இதன் மூலமாக மண்ணில் காணப்படும் உலோக மூலகங்களின் அளவு அதிகரிக்கும்.

உ+ம்: அமில மழையினால் மண்ணில் அலுமினியத்தின் அளவு அதிகரிக்கும். அவை தாவரங்களுக்கு நச்சுத்தன்மையாக மாறும்.

  • அமில மழையின் காரணமாக மண்ணில் உள்ள போசணைக் கூறுகள் அல்லது வளரும் தாவரங்களுக்கு கிடைக்காமல் போகும். அத்துடன் மண்ணிலுள்ள நுண்ணங்கிகளும் ஏனைய அங்கிகளும் கொல்லப்படுவதால் அதன் மூலமாக ஆற்றப்படுகின்ற உக்கல் செயற்பாடுகள் தடுக்கப்படும்.
  •  பசுமையான மரங்களின் இலைகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
  •  நீர்நிலைகள் அமிலத்தன்மையுடையதாக மாறுவதால் உணவுச் சங்கிலிகள் மற்றும் சூழற்தொகுதியின் தொழிற்சாலைகள் பாதிப்படையும்.
  •  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் மாசுபடுவதற்கும் அழிவுறுவதற்கும் காரணமாகின்றது.

உ+ம்: தாஜ்மகால்

மேற்கண்ட எடுத்துக்காட்டுக்கள் அமில மழையினால் புவியில் தோற்றுவிக்கப்படும் சில பிரச்சினைகளை மட்டுமே விளக்கியுள்ளன. இத்தகைய அனர்த்தங்களை தவிர்ப்பதற்காக நாம் பல்வேறு மாற்று வழிகளைத் தேட வேண்டியுள்ளது.

 ஓசோன் படலத்தின் பாதிப்பு

ஓசோன்ஒட்சிசனினால் ஆக்கப்படும் ஒரு மூலக்கூறாகும். மூன்று ஒட்சிசன் மூலக்கூறுகளால் ஓசோன் (O3உருவாக்கப்படுகிறது. வளிமண்டலத்தில் ஓசோன் படலத்தின் செயற்பாடு மிக முக்கியமானதாகவுள்ளது. புவியின் வளிமண்டலப் பகுதியில் படைமண்டலத்தில் கீழ்ப்பகுதிகளில் இந்த ஓசோன் படலத்தை நாம் காணலாம். ஓசோன் நிறமற்ற வாயுவாகும். தாழ்மண்டல ஓசோன் பச்சை வீட்டு வாயுவாக விளங்க படைமண்ட ஓசோனே புவியைப் பாதுகாக்கும் கவசமாகத் தொழிற்படுகிறது.

சூரியனிலிருந்து வெளிவரும் சூரியக் கதிர்வீச்சானது மிகச் செறிவான கழிஊதாக் கதிர்களை கொண்டுள்ளது. இக்கதிர்கள் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பயங்கரமான தீங்குகளை விளைவிக்கக்கூடியது. இத்தகைய கதிர்களை வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலமானது தடுத்து நிறுத்துகின்றது.

இத்தகைய பெரும் பங்களிப்பினை ஆற்றுகின்ற ஓசோன் படலமானது அண்மைக் காலமாக அழித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனையே ஓசோன் படை ஓட்டை என்று கூறுகின்றனர்.

நாம் பயன்படுத்துகின்ற மிகை குளிரூட்டிகள்குளிர்சாதனப் பெட்டிகள் ஆகியவற்றில் இருந்தும் ஊகுஊ வாயுக்களும் நெற்செய்கை நிலங்களிலிருந்து சதுர்ப்பு நிலங்களிலிருந்தும் உற்பத்தியாக்கப்படுகின்ற மீதேன் வாயுவாகனங்கள்சக்தி நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படுகின்ற நைதரசன் ஒட்சைட்டு ஆகியன ஓசோன் மூலக்கூறுகளைத் தனித்தனி ஒட்சிசன் மூலக்கூறுகளாக பிரிகையடையச் செய்கின்றன. இதனால் ஓசோன் படலம் இல்லாமலாக்கப்படுகின்றது. இதன் மூலமாக ஓசோன் படலத்தில் துவாரங்கள் ஏற்பட்டு அதன் மூலம் புவியிலுள்ள உயிர்க்கூறுகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சூரிய கதிர்கள் நேரடியாக புவியினை வந்தடைய வழி ஏற்படுகின்றது. இதனால் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு கட்காசம்தோற் புற்றுநோய் என்பன ஏற்படுகின்றன.

புவியியல் - உயிர்ப்புவி இரசாயன வட்டங்கள்

 உயிர்ப்புவி இரசாயன வட்டங்கள்

                                                எப்.எம்.நவாஸ்தீன்

பதார்த்தங்கள் வட்டமாகச் செல்லுதல் போசணை வட்டம் என்று அழைக்கப்படுகின்றது. உயிர் இரசாயன வட்டங்கள் சூழல் தொகுதியின் முக்கியமானதொரு செயற்பாடாகவுள்ளது. 

சூழற் தொகுதியிலுள்ள உயிர்க்கூறுகள் நிலைத்திருப்பதற்குப் பதார்த்தங்கள் அல்லது போசணைகள் தேவையாகவுள்ளன. இவை சூழலில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன. இதனால் உயிர்க்கூறுகள் நுகரும் போசணைகள் மீண்டும் சூழற் தொகுதிக்குள் வெளியிடப்பட்டு மீள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் போசணைகள் வட்டமாகச் செல்கின்றன. இப்போசணைகள் பொதுவாகப் பின்வரும் மூன்று மூலங்களிலிருந்து கிடைக்கப் பெறுகின்றன.

 (அ) வளிமண்டலம்: உ+ம்: நைதரசன், ஒட்சிசன், ...

 (ஆ) மண்ணிலுள்ள பாறைத்துண்டுகள்

 (இ) பிரிகையடைதல் - Decay

இம்மூலங்களிலிருந்து கிடைக்கப் பெறும் பதார்த்தங்கள் வட்டமாகச் செல்கின்றன. இவற்றுள் ஐந்து பிரதான வட்டங்கள் காணப்படுகின்றன.

01.    காபன் வட்டம்

02.    பொசுபரசு வட்டம்

03.    நைதரசன் வட்டம்

04.    சல்பர் அதாவது கந்தக வட்டம்

05.    ஒட்சிசன் வட்டம்

காபன் வட்டம்

சகல உயிர் வாழும் பொருட்களின் அத்தியாவசியமான அம்சமாக காபன் விளங்குகிறது. இது வளிமண்டலம், சமுத்திரங்கள், உயிர்ச்சுவட்டு எரிபொருட்களில் காபனீரொட்சைட்டு வடிவில் காணப்படுகிறது. காபன் வட்டமானது பின்வரும் பிரதான படிநிலைகளைக் கொண்டுள்ளது.

                                     Source: https://www.sciencefacts.net/carbon-cycle.html

  • வளிமண்டலத்தில் உள்ள காபனீரொட்சைட்டு தாவரங்களின் ஒளித்தொகுப்பிற்காக உள்ளெடுக்கப்பட்டு குளுக்கோசாக மாற்றப்படுகிறது.
  • தாவரங்களை உண்ணும் விலங்குகள் குளுக்கோசை உடையச் செய்வதுடன் காபனை வளிமண்டலத்திற்கும் சமுத்திங்களுக்கும், மண்ணுக்கும் வெளிவிடுகின்றன.
  • இறந்த தாவரங்கள், விலங்குகளை ஏனைய நுண் அங்கிகள் சிதைவடையச் செய்வதன் மூலம் உயிரற்ற கூறுகள் காணப்படும் சூழலிற்குள் காபனை செல்ல வைக்கின்றன.
  • காபன் வளிமண்டலத்துக்கும் சமுத்திரங்களுக்குமிடையில் பரிமாற்றப்படுகின்றது. சமுத்திரங்களில் உள்ள காபனீரொட்சைட்டின் அளவுமட்டம் அளவுக்கதிகமாகும்போது அது வளிமண்டலத்துக்கு அனுப்பப்பட்டு சமனிலைப்படுத்தப்படுகிறது.

 ஒட்சிசன் வட்டம்

Source: https://www.jagranjosh.com/articles/cbse-class-9-science-natural-resourceschapter-notes-1511431495-1

வளிமண்டலத்தில் ஏறத்தாழ 21% ஒட்சிசன் காணப்படுகிறது. இது நீர், காபனீரொட்சைட்டு, தாவரப் போசணைகள், சேதனக் கூறுகளை உருவாக்கும் வகையில் ஏனைய பல முக்கிய மூலகங்களுடன் இணைந்து தாக்கமுறுகின்றது. ஒட்சிசன் வட்டத்தின் படிநிலைகள் பின்வருமாறு காணப்படும்.

  • ஒளித்தொகுப்பின் மூலம் தாவரங்கள் ஒட்சிசனை வளிமண்டலத்துக்கு அனுப்புகின்றன.
  • விலங்குகள் ஒட்சிசனை சுவாசம் மூலம் உள்ளெடுக்கின்றன. உணவில் இருந்து கிடைக்கும் வெல்லத்தை உடைக்க இது பயன்படுத்தப்படுகிறது.
  • விலங்குகளால் வெளியிடப்படும் காபனீரொட்சைட்டு தாவரங்களால் ஒளித்தொகுப்புக்காக உள்ளெடுக்கப்படுகின்றது.
  • ஒட்சிசன் சமுத்திரங்களுக்கும் வளிமண்டலத்துக்குமிடையில் வட்டமாகச் செல்கின்றது. இதன் மூலம் ஒட்சிசன் சமனிலை பேணப்படுகின்றது.

காபன் வட்டம், ஒட்சிசன் வட்டம் என்பனவற்றுக்கிடையிலான தொடர்புகள்

காபன் வட்டம், ஒட்சிசன் வட்டம் என்பன இரு செயன்முறைகளில் தொடர்புகளைக் கொண்டுள்ளன. அவை ஒளித்தொகுப்பும், சுவாசமுமாகும். ஓளித்தொகுப்பினை பச்சைத் தாவரங்கள் மேற்கொள்கின்றன. காபனீரொட்சைட்டு, நீர் என்பன சூரிய சக்தியின் மூலம் குளுக்கோசாக மாற்றப்படுகின்றது. இக் குளுக்கோசே இழையங்களை உருவாக்குவதுடன் அங்கிகளினை வளரவும் மீள்பெருகவும் செய்கின்றது. சுவாசத் தொழிற்பாடு தாவரக் கலங்களாலும் விலங்குகளாலும் மேற்கொள்ளப்படுகின்றது. ஒளித்தொகுப்பினாலும், நுகர்வினாலும் கிடைக்கப் பெறும் குளுக்கோசு, சக்தியாக மாற்றப்படும் முறையே சுவாசச் செயற்பாடு எனப்படுகிறது. இதில் காபன், ஒட்சிசன் ஆகியனவே பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒளித்தொகுப்பின் மூலம் காபனீரொட்சைட்டு குளுக்கோசாகவும் ஒட்சிசனாகவும் மாற்றப்படுவதுடன் சுவாசத் தொழிற்பாட்டின் மூலமாக ஒட்சிசனும் குளுக்கோசும் மீண்டும் காபனீரொட்சைட்டாக்கத்துக்குட்பட்டு விடுகின்றன.

 காபன், ஒட்சிசன் வட்டங்கள் மனிதனால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது?

  • மனிதர்களாகிய நாம், சுவாசத்தின் மூலம் ஒட்சிசனை உள்ளெடுத்து காபனீரொட்சைட்டை வெளிவிடுகின்றோம்.
  • உயிர்ச்சுவட்டு எரிபொருட்களை எரிப்பதனால் ஒட்சிசனின் அளவுமட்டம் குறைவடைவதுடன் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டு அதிகரிக்கிறது.
  • போதுமான மீள்நடுகையின்றி, காடுகள் அழிக்கப்படுகிறது. இது காபனீரொட்சைட்டை உள்ளெடுத்து ஒட்சிசனை வெளியிடும் தாவரங்களை இல்லாதாக்குகின்றது.
  • எமது சமுத்திரங்கள் மாசுபடுத்தப்படுவதனால் தாவரப் பிளாந்தன்கள் அழிக்கப்படுகின்றன. இதன் மூலமாகவும் ஒட்சிசன் அளவு குறைவடைவதற்கும் காபனீரொட்சைட்டை அதிகரிப்பதற்கும் இது வழிகோலுகிறது.

 நைதரசன் வட்டம்

Source:https://www.sciencefacts.net/nitrogen-cycle.html

உயிர்களுக்கு நைதரசன் மிக அவசியமானதாகும். உயிர்க்கூறுகள் புரதங்களையும் னுNயு யையும் ஆக்குவதற்குத் தேவையானதாக உள்ளது. நைதரசன் வளிமண்டலத்தில் 78மூ மான அளவில் காணப்படுகிறது. வளிமண்டலத்தில் காணப்படும் இந்நைதரசன் அதே நிலையில் இருக்கும் நிலையில் உயிர்க்கூறுகளுக்கு எவ்விதப் பயனுமற்றதாக உள்ளது. இந்நைதரசனானது புரதங்களாகவும் கருவாக்கப் பொருள்களாகவும் (னுNயு) மாற்றமடைவதற்கும் மீண்டும் நைதரசன் வாயுவாக மாறவதற்குமான வட்டச் செயன்முறை மூன்று முக்கிய படிகளைக் கொண்டு காணப்படுகின்றது.

  1. பற்றீரியா போன்ற சில வகை அங்கிகள் நைதரசன் வாயுவினை நீரினுள் கரையக்கூடிய கூறுகளாக மாற்றுகின்றன. இவ்வாறு நீரில் கரைந்து காணப்படும் நைதரசன் தாவர வேர்களால் உறிஞ்சப்படுகின்றது. இச்செயன்முறையே நைதரசன் பதிக்கப்படல் (Nitrogen Fixation) எனப்படுகின்றது.
  2. தாவரங்கள் உள்ளெடுத்த நைதரசன் கூறுகளை புரதங்களாகவும் கருவாக்கப்பொருள்களாகவும் (DNA) மாற்றுகின்றன. விலங்குகள் தமக்குத் தேவையான நைதரசனை தாவரங்களையும் ஏனைய விலங்குகளையும் உண்பதால் பெற்றுக் கொள்கின்றன.
  3. தாவரங்களும் விலங்குகளும் இறந்து பொருட்களாக மாறுகின்றன. இவற்றில் இருந்து மீண்டும் நைதரசனை பற்றீரியாக்கள் வாயுவாக மாற்றி நைதரசன் வட்டத்தைப் பூர்த்தி செய்கின்றன.

 நைதரசன் வட்டத்தை மனிதன் பாதிக்கும் மூன்று வழிகள்

நைதரசன் வட்டத்தை மனிதன் பின்வரும் மூன்று வழிகளில் பாதித்து வருகின்றான்.

  1. உயிர்ச்சுவட்டு எரிபொருட்களை எரித்தல்: இதனால் வளிமண்டலத்தில் நைதரசன் கூறுகள் வெளிவிடப்படுகிறது. இது நைத்திரேற்று அமிலங்களாக மாறுகின்றது. இது அமில மழைக்கு வழிகோலுகிறது.
  2.  நாம் வயல்களுக்கும் ஏனைய பயிர் நிலங்களுக்கும் பசளை இடுகின்றோம். நைதரசனைக் கொண்டுள்ள பசளைகள் விவசாயப் பொருட்களின் உற்பத்தித் திறனுக்கு மிகவும் தேவையானவையாகும். இவை தரைக்கீழ் நீர், ஏனைய நீர்நிலைகளில் கலந்து விடுகின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் மிகையான நைதரசன், நீர் நிலைகளில் உள்ள அல்காக்களை விரைவாகப் பெருகச் செய்கிறது. இதனால் நீர்நிலை சூழற்றொகுதிகள் பாதிப்படைகின்றன.
  3. குறிப்பிட்ட அறுவடைச் செயற்பாடுகளின் மூலம் மண்ணில் இருந்து கிடைக்கப் பெறும் நைதரசன் கூறுகளை நாம் அழிவுறச் செய்கிறோம்.

 பொசுபரசு வட்டம்

Source:https://www.sciencefacts.net/phosphorus-cycle.html

தாவரங்கள், விலங்குகளுக்குத் தேவையான ஒரு போசணைப் பொருளே பொசுபரசாகும். இது னுNயு எனும் பரம்பரை அலகுகளின் ஒரு பகுதியாக விளங்குவதுடன் என்புகள், பற்களிலும் சேமிக்கப்பட்டிருக்கும். இது குறிப்பிட்ட சில பாறைகளில் இருந்து உருவாகுவதுடன் மிகச் சிறிய அளவிலேயே காணப்படுகின்றது. ஆகவே பொசுபரசு பல தரைசார் மற்றும் நீர்சார் சூழற்தொகுதிகளில் தாவரங்களின் வளர்ச்சியை வரையறுக்கும் ஒரு காரணியாகப் பொசுபரசு விளங்குகிறது. பொசுபரசு வட்டத்தின் பிரதான படிகள் பின்வருமாறு:

  • பொசுபரசைக் கொண்டுள்ள பாறைகள் வானியாழிதலுக்குட்படுவதனால் பொசுபரசு விடுவிக்கப்படுகிறது.
  •  மண்ணில் அல்லது நீரில் இருந்து தாவரங்கள் பொசுபரசைப் பெறுகின்றன. தாவரங்களையும், பிற விலங்குகளையும் உண்பதனால் விலங்குகள் தமக்குத் தேவையான பொசுபரசைப் பெற்றுக் கொள்கின்றன.
  •  தாவரங்களும் விலங்குகளும் பிரிந்தழிவதனால் மண், நீர் ஆகியவற்றுக்கு பொசுபரசு வெளிவிடப்படுகிறது.

பொசுபரசு வட்டத்தை மனிதன் பாதிக்கும் இரு பிரதான வழிகள்:

  1. வர்த்தக நோக்கில் அசேதனப் பசளையை உற்பத்தி செய்வதற்காக, பொசுபரசைக் கொண்டுள்ள பாறைகளை அதிகளவில் நாம் அகழ்ந்தெடுக்கிறோம்.
  2. விலங்குக் கழிவுகள், பயிர் நிலங்களில் இருந்து வழிந்தோடும் செயற்கைப் பசளைகள், நகரக் கழிவுகள் போன்றவற்றின் மூலம் மிகைப்பட்ட அளவில் பொசுபரசை நாம் சூழலுக்கு வெளிவிடுகின்றோம். நைதரசன் கூறுகளைப் போன்றே இதுவும் நீர்நிலைகளில் மிக அதிகளவிலான அளவில் அல்காக்களையும் நீர்வாழ் தாவரங்களையும் வளர்ச்சியடையச் செய்கின்றன. இதனால் நீர் சூழல் தொகுதிகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுகின்றது.

இவ்வட்டங்கள் எவ்வாறு ஒன்றுடனொன்று இடைத்தாக்கம் புரிகின்றன?

சகல போசணை வட்டங்களும் பல்வேறுபட்ட அளவில் பௌதீகச் சூழலுடன் இடைத்தொடர்புறுகின்றன. ஒளித்தொகுப்பு, சுவாசம் ஆகியவற்றின் மூலம் காபனும், ஒட்சிசனும் பின்னிப் பிணைந்த செயன்முறைகளைக் கொண்டுள்ளன. நைதரசன் வட்டமானது இழந்த சேதனப் பொருட்களை மீள உருவாக்கவும் காபன், ஒட்சிசனை பேணும் வட்டமாகச் செல்லும் வகையிலும் வெளிவிடுகின்றது. பொசுபரசு வட்டம் ஏனைய வட்டங்களது உயிரியல் கூறுகளுக்குப் போசணைப் பெறுமதியை வழங்குகிறது. நீரியல் வட்டம் இறுதியாக இம்மூலக்கூறுகள் தொகுதிகளுக்கிடையில் செல்லும் வகையில் உதவுவதாக உள்ளது. இம்மூலக்கூறுகளினதும் வட்டங்களினதும் இடைவினைகளே எமது உயிர்க் கோளத்தை உருவாக்குகின்றன.

 இப்போசணைகள் பின்வரும் மூலங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

   (அ)   உயிர்த்திணிவு – Biomass

                   உ+ம்: அயன மழைக்காடுகள்

 (ஆ)   மண் - Soil

                   உ+ம்: புல்வெளிகள்

 (இ)   குப்பை – Litter

                   உ+ம்: ஊசியிலைக்காடுகள்

இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் போசணைகள் ஓர் வட்ட அடிப்படையில் சென்ற வண்ணமிருக்கும். 

 சூழற்தொகுதியில் மனிதனின் தாக்கங்கள்

இன்று எமது நடவடிக்கைகளின் காரணமாக சூழற் தொகுதி உட்பட முழு புவித் தொகுதியும் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றது. எமது நடவடிக்கைகளினால் நாம் இன்று எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் ஏராளமாகும். அவற்றுள்;     

        நற்போசனையாக்கம் (Eutropism)

        திரட்சியடைதல் (Accumulation)

        பச்சை வீட்டு விளைவு (Green House Effect)

        பூகோளம் வெப்பமடைதல் (Global Warming)

        அமில மழை (Acid Rain)

        காடுகள் அழிப்பு (Deforestation)

        ஓசோன் படல அழிவு (Depletion of Ozone Layer)

        உயிர்ப் பல்வகைமை அழிவு (Loss of Bio diversity)

போன்றவை முக்கியம் பெறுகின்றன.

சூழற் தொகுதியில் ஏற்படும் தாக்கங்கள்

 சூழற்தொகுதி பல்வேறு வழிகளில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இவற்றுள்,

(1)     நற்போசணையாக்கம்

(2)     திரட்சியடைதல்

ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும்.

(1)     நற்போசணையாக்கம்

விவாசாயப் பயிர்ச்செய்கைகளுக்கு இடப்படும் பசளைகள், வளமாக்கிகள் நீரினால் கழுவப்பட்டு நீர்நிலைகளை அடையும் போது அங்கு காணப்படும் உயிரினங்கள், கழுவப்பட்டு வந்த போசணைப் பொருட்களினால் நற்போசணையாக்கத்திற்கு உள்ளாகின்றன. இதன் காரணமாக சூழல் தொகுதியில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படுகின்றன. உ10ம்: சல்வீனியா தாவரத்தின் பெருக்கம். இத்தகைய நற்போசணையாக்கம் மனிதர்களிடத்தும் காணப்படுகிறது.

(2)     திரட்சியடைதல்Accumulation

நச்சுப் பொருட்கள் சூழற் தொகுதியின் போசணை மட்டங்களுக்கிடையில் செறிவடைந்த வகையில் அதிகரித்துச் செல்லும் போக்கு திரட்சியடைதல் எனப்படும்.

மனிதர்களால் சூழற்தொகுதிக்கு வெளிவிடப்படும் பல நச்சுப் பொருட்கள் (உ+ம்: DTT) இலகுவில் பிரிகையடையாது காணப்படும். இவை மற்றொரு போசணை மட்டத்துக்கு கடத்தப்படும்போது அதன் செறிவுத் தன்மை அதிகரிக்கும். இவ்வாறு அதிகரித்துச் செல்வதனால் உணவுச் சங்கிலிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

திரட்சியடைதலுக்கு குறிப்பிடத்தக்க உதாரணமாகப் பின்வரும் சம்பவத்தைக் கூறலாம்.

யப்பானிலுள்ள மினாமாட்டா குடா 'ஷெல்பிஷ்' மீனினங்களுக்குப் பிரசித்தம் வாய்ந்த இடமாகும். இக்குடாவினை அண்டி ஒரு இரசாயனத் தொழிற்சாலை காணப்பட்டது. 1950 களில் இக்குடாப் பகுதியில் வசித்த பாலூட்டிகள் அசாதாரண போக்குகளைக் காட்டின. அதேபோன்று மனிதர்களும் தலைபிடி 'பார்வை இழப்பு' பேச முடியாது போதல் போன்றவற்றிற்கு ஆளாகினர். 45 பேர் வலிப்பினால் இறந்து போயினர். இதற்கான காரணத்தை தேடிக் கண்டுபிடித்த போது திடுக்கிடும் உண்மை வெளிப்பட்டது. அதாவது இக்குடாவின் அருகே அமைக்கப்பட்டிருந்த இரசாயனத் தொழிற்சாலையிலிருந்து இரசம் என்ற இரசாயனப்பொருள் நீர்நிலைகளில் கலந்துவிட்டது தான் எனத் தெரிய வந்தது. இது 'மினமட்டா' நோய் எனப்பட்டது. இந்நோயினால் 35000 பேர் பாதிக்கப்பட்டனர். இதேபோன்று எண்ணெய்க்கசிவுகள், கப்பல்கள் விபத்துக்குள்ளாகுதல் போன்றவற்றினாலும் திரட்சியடைதல் ஏற்படுகின்றது.

பச்சை வீட்டு விளைவும் புவி வெப்பமடைதலும்

Soure:https://www.pinterest.com/pin/54887689184097710/

உவப்பற்ற காலநிலையில் தாவரங்களை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற கூடாரத்தை பச்சை வீடு என்று அழைப்பர். இப்பச்சை வீட்டின் சிறப்பம்சம், உரிய தாவரத்துக்குரிய வெப்பத்தினை பேணுவதாகும். இதே போன்றதொரு தொழிற்பாட்டினை எமது வளிமண்டலமும் ஆற்றுகின்றது.

சூரியனிலிருந்து சிற்றலைக் கதிர்களாக புவியினை நோக்கி வரும் கதிர்வீசலில் புவிக்குத் தேவையான வெப்பத்தினை வளிமண்டலம் உட்புக விடுகின்றது. இவ்வாறு புவியை வந்தடைகின்ற வெப்பம் இரவில் நெட்டலைக் கதிர்வீசலாக வீசப்படும்போது வளிமண்டலமானது அதனைத் தடுத்து புவி வளிமண்டலத்திற்குத் தேவையான வெப்பத்தை பேண உதவும். வளிமண்டலத்தில் காணப்படும் காபனீரொட்சைட்டு, நீராவி போன்றன வெப்பத்தை உறிஞ்சி வைத்துக் கொள்ள உதவுகின்றன. இதனையே பச்சை வீட்டு விளைவு என்பர். இது உண்மையிலேயே புவியியற் செயற்பாட்டுக்கு மிக இன்றியமையாததாக உள்ளது. ஆயினும் இத்தகைய செயற்பாடானது அண்மைக்கால மனித நடவடிக்கைகளின் மூலமாக அபாயகரமாக மாறியுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.

மனித நடவடிக்கைகளின் மூலமாக வளிமண்டலத்தில் காணப்படுகின்ற பச்சை வீட்டு வாயுக்கள் (காபனீரொட்சைட்டு, மீதேன், நைதரசு ஒக்சைட்டு, அலோ-காபன்கள், தாழ் மண்டல ஓசோன் வாயு) அதிகரிக்கின்றன. இதன் காரணமாக வளிமண்டலத்தினால் தங்க வைக்கப்படும் வெப்பத்தின் அளவும் கூடுகின்றது. இதன் மூலம் வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரிக்கப்படும்போது புவியின் வெப்பநிலையும் அதிகரித்து புவியின் உயிர்வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்றது.

இவ்வாறு வெப்பம் அதிகரிப்பதன் காரணமாக உலகில் பல விரும்பத்தகாத அழிவுகள் ஏற்படத் தொடங்குகின்றன. புவியின் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்து வரல், அதன் காரணமாக துருவப் பனிமலைகள் உருகுதல், கடல்மட்டம் உயருதல், பல நாடுகளின் பெரும்பாலான பிரதேசங்கள் கடலில் மூழ்குதல். அத்துடன் புவி வெப்பமடைவதனால் காலநிலையில் ஏற்படும் ஒழுங்கீனங்கள் அதன் மூலம் ஏற்படுகின்ற வறட்சி, வெள்ளம், பாலைவனமாதல் போன்ற பாரிய அச்சுறுத்தல்களை நாம் இன்று எதிர்நோக்கி வருகின்றோம்.

 பச்சை வீட்டு வாயுக்கள்

காபனீரொட்சைட்டு (Co2) மீதேன், நைதரசு ஒட்சைட்டு, அலோ-காபன்கள், தாழ் மண்டல ஓசோன் ஆகியவையாகும். இவை தவிர நீராவியும் பச்சை வீட்டு விளைவில் முக்கிய பங்காற்றும் ஒரு காரணியாகும்.

Co2: Coவாயுவானது பிரதானமாக தாவர சுவாசம், விலங்குகளின் வாழ்வு, ஆகியவற்றில் இருந்தும்  உயிர்ச்சுவட்டு எரிபொருட்களையும் மழைக்காடுகளை எரிப்பதன் மூலமாகவும், காடுகளை அழிப்பதன் மூலமாகவும் தோற்றுவிக்கப்படுகிறது. பச்சை வீட்டு வாயுக்களில் இது முக்கிய வாயுவாகக் காணப்படுவதுடன் அண்மைக்காலமாக உயிர்ச்சுவட்டு எரிபொருட்கள் பாவனையின் தீவிரமான அதிகரிப்பு, காடுகள் அழிக்கப்படல் ஆகியவற்றின் காரணமாக Co2வின் அளவு மிக வேகமாக வளிமண்டலத்தில் அதிகரித்து வருகின்றது. பச்சை வீட்டு வாயுக்களில் நீராவியைப் பேணல் கனவளவு கொண்ட வாயுவில் இரண்டாம் இடம் வகிக்கின்றது.

மீதேன் (CH4): வளிமண்டலத்தில் ஊழு2 விட மீதேன் குறைவாக இருந்தபோதிலும் பச்சை வீட்டு வாயுக்களில் அதிக தாக்கமிக்கது. மீதேன் வாயுவானது நெற்செய்கை வயல் நிலங்களின் மூலமாகவும், விலங்குகள், மாடுகளின் மூலமாகவும் தோற்றுவிக்கப்படுகின்றது. மிகச் செறிந்த கைத்தொழில் நிலங்களும் ஈர நிலங்களும் இம்மீதேன் வாயுவை உருவாக்குகின்றன. அண்மைக் காலமாக பல நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட கைத்தொழில் அபிவிருத்தியின் காரணமாக கால்நடை வளர்ப்பின் மூலமாகவும் இம்மீதேன் வாயுவின் அளவு வளிமண்டலத்தில் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பச்சை வீட்டு விளைவில் பங்கேற்கின்ற மீதேனின் அளவு புவி வெப்பமடைவதற்கு பல்வேறு முறையில் காரணமாக அமைகின்றது.

 நைதரசு ஒட்சைட்டு: நைதரசு ஒட்சைட்டுக்கள் மண்ணும் சமுத்திரங்களும் மற்றும் மனித செயற்பாடுகளான விவசாயம், பசளையிடல், நைலோன் தயாரிப்பு, சேதனப்பொருள் தகனம், எரிபொருள் தகனம், வாகனப்புகை ஆகியவற்றில் இருந்து தோற்றுவிக்கப்படுகின்றன. பச்சை வீட்டு வாயுக்களில் முக்கியமான வாயுவாகும். இவ்வகை வாயுக்கள் வாகனங்கள் வெளியேற்றும் புகைகளில் காணப்படுகின்றன. இருந்தபோதிலும் இவை மின்நிலையங்களிலும் மிக செறிவான விவசாய நடவடிக்கைகளிலும் மிக அதிகமாகத் தோற்றுவிக்கப்படுகின்றன. இவ்வகை வாயுக்கள் புவி வெப்பமடைவதில் 6மூ அளவு பங்களிப்புச் செய்கின்றது.

தாழ் ஓசோன் வாயு: தாழ்மண்டல ஓசோனும் முக்கியமானது. இவ்வகை வாயு வாகனங்களினால் வெளியேற்றப்படும் புகைகளிலுள்ள ஆவிப்பறப்புள்ள சேர்வைகள் சூரிய ஒளியுள்ள போது நைதரசு ஒட்சைட்டுடன் சேரும்போது உருவாக்கப்படுகின்றன. இந்த தாழ்நிலை ஓசோன் மரங்களுக்கும் மிருகங்களுக்கும் மிகவும் தீமையை உண்டுபண்ணுவதுடன் புவி வெப்பமடைவதிலும் பிரதான பங்காற்றுகின்றது.

அலோ-காபன்கள் (Halocarbons): மனித செயற்பாடுகளால் இவை உருவாக்கப்படுகின்றன. புரோமின், குளோரின், புளோரின் போன்ற வாயுக்களைக் கொண்ட அலசன் குடும்ப (halogen family) வாயுக்கள் மற்றும் காபன்களை இவை கொண்டுள்ளன. இவையனைத்தும் வலிமைமிக்க பச்சை வீட்டு வாயுக்களாகும். அனேகமான கைத்தொழில்சாலைகள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து CFC எனும் குளோரோ புளோரோ காபன் விடுவிக்கப்படுகின்றது. பச்சை வீட்டு வாயுக்களில் குளோரோ புளோரோ காபன்களும் முக்கிய பங்காற்றும் ஒன்றாக காணப்படுகின்றது. இவை வாசனைக் கொள்கலன்களிலும், குளிரூட்டிகளிலும் உபயோகிக்கப்படுகின்றன. இது இரு அபாயகரமான பச்சை வீட்டு வாயுவாகும். CFC மூலக்கூறானது ஒரு காபனீரொட்சைட்டு மூலக்கூறினை விட 100 மடங்கு வெப்பத்தினை அதிகமாக உறிஞ்சி வைத்துக் கொள்ளக்கூடிய தன்மை வாய்ந்ததாகும்.

நீராவி (Water Vapor): நீராவியும் பச்சை வீட்டு விளைவை உண்டாக்கும் ஒன்றாகும். இது இயற்கையாகவும் மனிதனாலும், சுவாசம், ஆவியாக்கம் ஆவியுயிர்ப்பு மூலம் உருவாகின்றது. ஆவியாக்கத்தின் மூலம் அதிக நீராவி வெளியிடப்படும்போது புவிமேற்பரப்பு வெப்பம் அதிகரிக்கிறது.

கடந்த வருடங்களில் எந்தளவு பச்சை வீட்ட வாயுக்கள் அதிகரித்துள்ளன என நோக்குவது முக்கியமாகின்றது. கடந்த 200 வருடங்களில் மீதேனின் செறிவு இரட்டிப்பாகியுள்ளது. ஊழு2 வின் செறிவானது கடந்த 160000 வருடங்களிலும் பார்க்க இன்று 20மூ க்கும் மேல் காணப்படுகிறது. சில அலோ காபன்கள் வளிமண்டலத்தில் கடந்த 100 வருடத்திற்குள்ளாக அதிகரித்துச் செல்லுவதாக உள்ளது.

பூகோளம் வெப்பமாதல்

கைத்தொழில் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட நிகழ்வுகளினால் பச்சை வீட்டு வாயுக்கள் அதிகரித்தே  வந்துள்ளன. புவி வெப்பமடைவது பச்சை வீட்டு விளைவின் நேரடித் தாக்கமாகும் அதிகரித்த பச்சை வீட்டு விளைவின் காரணமாக புவியின் முழு வெப்பமும் அதிகரிக்கின்றது. இச்செயற்பாடு புவி வெப்பமடைதல் அல்லது பூகோளம் வெப்பமாதல் எனப்படும். இது காலநிலை மாற்றத்தைக் குறிப்பதன்று. புவி வெப்பமடைவதால் ஏற்படும் பல பாதிப்புகளில் காலநிலை மாற்றமும் ஒன்றாகும்.

ஏற்கனவே கூறப்பட்டது போன்று புவி வெப்பமடைதலுக்கு பச்சை வீட்டு வாயுக்களே காரணமாகின்றன. இப்பச்சை வீட்டு வாயுக்கள் இயற்கைச் செயற்பாடுகளின் மூலமாகவும் மனித நடவடிக்கைகள் மூலமாகவும் வளிமண்டலத்தில் அதிகரித்து வருகின்றன.

காபனீரொட்சைட்டு, மீதேன், அலோ காபன்கள், கந்தகவீரொட்சைட்டு, காபனோரொட்சைட்டு, நைதரசவீரொட்சைட்டு, தாழ்வளி ஓசோன் ஆகியன புவி வெப்பமடைதலுக்கு பங்களிக்கின்ற மூலகங்களாக விளங்குகின்றன.

 புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகள்

  • புவியின் சராசரி வருடாந்த வெப்பநிலை 3 பாகை பரனைட்டில் இலிருந்து பாகை பரனைட் வரை உயர்ந்து வருகின்றது. இந்த வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக உருகுகின்ற பனிக்கட்டிகள் அபாயகரமான தாக்கத்தை விவசாயத்திலும் இறுதியாக கடல் மட்டத்திலும் உருவாக்க முடியும். வெப்பநிலையின் உயர்ச்சி துருவப் பனிக்கட்டிகளை உருகச் செய்வதனால் அதிகளவு நீரை வெளியேற்றி சமுத்திர மட்டம் உயர்வதற்கு காரணமாக அமையும். அண்மையில் கங்கை நதியின் ஆரம்ப இடமான பனிமலைப்பகுதியில் பனிக்கட்டிகள் விரைவாக உருகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  •  நிலப்பகுதியிலிருந்து அதிகளவு நீராவியாதல் ஏற்படும். இதன் காரணமாக நீரியல் வட்டம், கடல் சூழற் தொகுதியின் உப்புத்தன்மை, நன்னீர் தொகுதி போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். அத்துடன் மீன்களின் முட்டை உற்பத்தியும் பாதிக்கப்படும்.
  •  சமுத்திர நீரோட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
  •  வாழும் அங்கியின் நொதியத் தொழிற்பாட்டில் பாதிப்பு ஏற்படும். இதனால் சுவாசமும் ஒளித்தொகுப்பும் பாதிக்கப்படும்.
  •  பாலைவனமாதல் தீவிரமடையும்.

இவைபோன்ற பாதிப்புக்கள் பூகோள வெப்பமடைவதால் ஏற்படும் என அஞ்சப்படுகின்றது.

இவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பான பேரழிவுகள் தற்பொழுது உலகில் அரங்கேறி வருகின்றன. இனியும் தாமதிக்காது இதனை தடுத்து நிறுத்துவதற்கான செயற்பாடுகளில் நாமும் அரசாங்கமும் ஈடுபட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. இதற்காக தனிமனிதன் என்ற வகையிலும் நாம் இப்புவியில் வாழுகின்ற பிரஜை என்ற வகையிலும் சூழலைப் பாதுகாக்க வேண்டிய செயற்பாடுகளை ஆற்ற வேண்டியுள்ளோம். முடியுமான அளவு தாவரங்களை அழிக்காதிருத்தல், மரம் நடுகையில் ஈடுபடுதல், பச்சை வீட்டு வாயுக்களை வெளியிடும் பொருட்களை உபயோகிக்காது இருத்தல் சிறிய சிறிய தேவைகளுக்கு மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்தல், துவிச்சக்கரவண்டியின் பாவனைகளை அதிகரித்தல் போன்ற இன்னோரன்ன நடவடிக்கைகளில் எம்மை ஈடுபடுத்துவது புண்பட்டுப் போயிருக்கும். எம் பூமித்தாய்க்கு நாம் மேற்கொள்கின்ற ஆறுதலான விடயங்கள் எனலாம்.

அரசாங்கம் என்ற வகையில் பச்சை வீட்டு விளைவுகளை அதிகரிக்கும் வாயுக்களை வெளியிடும் பொருட்கள் தொழில் நடவடிக்கைகளை தடுத்தல், காடழிப்பினைத் தடுத்தல், மீள்காடாக்கம் செய்தல், மக்களை விழிப்புணர்வுக்கு உள்ளாக்குதல், சர்வதேச ஒப்பந்தங்களை மதித்து நடத்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

 அமில மழை 

அண்மைக்காலமாக, அமிலமழையின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. கைத்தொழில் புரட்சியின் பின் புவியில் ஏற்பட்ட சூழல் அனர்த்தங்களில் அமில மழையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கைத்தொழில் சாலைகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றதும், வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்றதுமான கந்தகவீரொட்சைட்டு, நைதரசன் ஓரொட்சைட்டு, நைதரசனீரொட்சைட்டு ஆகியன வளிமண்டலத்திலும், வளிமண்டல நீர் நிலைகளிலும் கலக்கப்படுகின்றன. இவற்றின் மூலமாக தோற்றுவிக்கப்படும் படிவு வீழ்ச்சி அல்லது அமிலப்படிவுகளுடன் பெய்வதாக காணப்படும். இதனையே அமில மழை என்கிறோம். இத்தகைய அமில மழை உலகில் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது பொழிவதை நாம் கேட்டும், பார்த்தும், அறிந்தும் வருகின்றோம். உதாரணமாக 1979 இல் கனடாவில் டொரான்டோ, அமெரிக்காவின் லொஸ்ஏன்ஜல்ஸ் (1981), மற்றும் நோர்வே போன்ற நாடுகளில் இத்தகைய அமில மழை பொழிந்துள்ளது.

 அமில மழைக்குக் காரணமாகின்ற கந்தகவீரொட்சைட்டு,

  • கந்தகம் அதிகமாகவுள்ள எரிபொருளை பயன்படுத்தும் பாரிய கைத்தொழிற்சாலைகளிலுமிருந்தும்,
  •  உயிர்ச்சுவட்டு எரிபொருட்களை எரிப்பதன் மூலமாகவும்,
  •  எரிமலைக் கற்குகைகள் மூலமாகவும், தோற்றுவிக்கப்படுகின்றன.
  •  அமில மழைக்குக் காரணமாகின்ற நைதரசன் ஓரொட்சைட்டு, நைதரசன் ஈரொட்சைட்டு என்பன,
  •  நைதரசன் அதிகமாகவுள்ள உயிர்ச்சுவட்டு எரிபொருட்களை எரிப்பதன் மூலமாகவும்,
  •  வாகனங்கள் வெளியேற்றும் புகைகளின் மூலமாகவும்,
  •  கைத்தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் அமிலத் துளிகள் மூலமாகவும்,
  •   எரிமலைக் கற்குகைகள் மற்றும் மின்னலின் மூலமாகவும்,

                               தோற்றுவிக்கப்படுகின்றன.

  • அமில மழையின் காரணமாக மண்ணில் அமிலத் தன்மை அதிகரிக்கும். இதன் மூலமாக மண்ணில் காணப்படும் உலோக மூலகங்களின் அளவு அதிகரிக்கும்.

உ+ம்: அமில மழையினால் மண்ணில் அலுமினியத்தின் அளவு அதிகரிக்கும். அவை தாவரங்களுக்கு நச்சுத்தன்மையாக மாறும்.

  • அமில மழையின் காரணமாக மண்ணில் உள்ள போசணைக் கூறுகள் அல்லது வளரும் தாவரங்களுக்கு கிடைக்காமல் போகும். அத்துடன் மண்ணிலுள்ள நுண்ணங்கிகளும் ஏனைய அங்கிகளும் கொல்லப்படுவதால் அதன் மூலமாக ஆற்றப்படுகின்ற உக்கல் செயற்பாடுகள் தடுக்கப்படும்.
  •  பசுமையான மரங்களின் இலைகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
  •  நீர்நிலைகள் அமிலத்தன்மையுடையதாக மாறுவதால் உணவுச் சங்கிலிகள் மற்றும் சூழற்தொகுதியின் தொழிற்சாலைகள் பாதிப்படையும்.
  •  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் மாசுபடுவதற்கும் அழிவுறுவதற்கும் காரணமாகின்றது.

உ+ம்: தாஜ்மகால்

மேற்கண்ட எடுத்துக்காட்டுக்கள் அமில மழையினால் புவியில் தோற்றுவிக்கப்படும் சில பிரச்சினைகளை மட்டுமே விளக்கியுள்ளன. இத்தகைய அனர்த்தங்களை தவிர்ப்பதற்காக நாம் பல்வேறு மாற்று வழிகளைத் தேட வேண்டியுள்ளது.

 ஓசோன் படலத்தின் பாதிப்பு

ஓசோன், ஒட்சிசனினால் ஆக்கப்படும் ஒரு மூலக்கூறாகும். மூன்று ஒட்சிசன் மூலக்கூறுகளால் ஓசோன் (O3) உருவாக்கப்படுகிறது. வளிமண்டலத்தில் ஓசோன் படலத்தின் செயற்பாடு மிக முக்கியமானதாகவுள்ளது. புவியின் வளிமண்டலப் பகுதியில் படைமண்டலத்தில் கீழ்ப்பகுதிகளில் இந்த ஓசோன் படலத்தை நாம் காணலாம். ஓசோன் நிறமற்ற வாயுவாகும். தாழ்மண்டல ஓசோன் பச்சை வீட்டு வாயுவாக விளங்க படைமண்ட ஓசோனே புவியைப் பாதுகாக்கும் கவசமாகத் தொழிற்படுகிறது.

சூரியனிலிருந்து வெளிவரும் சூரியக் கதிர்வீச்சானது மிகச் செறிவான கழிஊதாக் கதிர்களை கொண்டுள்ளது. இக்கதிர்கள் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பயங்கரமான தீங்குகளை விளைவிக்கக்கூடியது. இத்தகைய கதிர்களை வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலமானது தடுத்து நிறுத்துகின்றது.

இத்தகைய பெரும் பங்களிப்பினை ஆற்றுகின்ற ஓசோன் படலமானது அண்மைக் காலமாக அழித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனையே ஓசோன் படை ஓட்டை என்று கூறுகின்றனர்.

நாம் பயன்படுத்துகின்ற மிகை குளிரூட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் ஆகியவற்றில் இருந்தும் ஊகுஊ வாயுக்களும் நெற்செய்கை நிலங்களிலிருந்து சதுர்ப்பு நிலங்களிலிருந்தும் உற்பத்தியாக்கப்படுகின்ற மீதேன் வாயு, வாகனங்கள், சக்தி நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படுகின்ற நைதரசன் ஒட்சைட்டு ஆகியன ஓசோன் மூலக்கூறுகளைத் தனித்தனி ஒட்சிசன் மூலக்கூறுகளாக பிரிகையடையச் செய்கின்றன. இதனால் ஓசோன் படலம் இல்லாமலாக்கப்படுகின்றது. இதன் மூலமாக ஓசோன் படலத்தில் துவாரங்கள் ஏற்பட்டு அதன் மூலம் புவியிலுள்ள உயிர்க்கூறுகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சூரிய கதிர்கள் நேரடியாக புவியினை வந்தடைய வழி ஏற்படுகின்றது. இதனால் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு கட்காசம், தோற் புற்றுநோய் என்பன ஏற்படுகின்றன.

விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...