சிந்தித்து நன்றியுடன் இருக்க...


சிந்தித்து நன்றியுடன் இருக்க...

(கலாநிதி அய்தல் கர்ணி எழுதிய லா-தஹ்சன் எனும் நூலின் ஆங்கிலப் பெயர்ப்பான Dont Be Sad இலிருந்து) தமிழில் : கலாநிதி எப்.எம். நவாஸ்தீன்)

உங்கள் மீது அல்லாஹ் தந்துள்ள  கிருபைகளை யும் எவ்வாறு அவை மேலும் கீழுமாக- உண்மையில்  சகல திசைகளிலும்  உங்களை சூழ்ந்துள்ளன என்பதையும் நினைத்துப் பார்ப்போமாக.

(அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடிக்க முடியாது! அல்-குர்ஆன்14:34)

ஆரோக்கியம், பாதுகாப்பு, உணவளிப்பு, கற்று, மற்றும் நீர்-  இவையனைத்தும் உலகில் உங்களுக்காக இருக்கின்றன. ஆனால் நீங்கள் அதனை இன்னமும் உணராமல் உள்ளீர்கள். நீங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தையும் கொண்டிருந்தும், இன்னமும் அறியாமையில் உள்ளீர்கள்.

இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும் (அதாவது, ஓரிறைவனை வணங்குதல், ஆரோக்கியம், நல்ல கண் பார்வை உட்பட இவ்வுலகின் நியாயமான சந்தோசங்கள் போன்ற ) அகத்திலும் (அதாவது: அல்லாஹ்வின் மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை, ஸாலிஹான நற்செயல்களைச் செய்வதற்கான வழிகாட்டல், மற்றும் மறுவுலகின் சுவர்க்கத்தில் உள்ள இன்பம் மற்றும் மனமகிழ்ச்சி போன்ற ) நிரம்பச் செய்திருக்கிறான் (அல்-குர்ஆன் 31:20).

நீங்கள் உங்கள் வசம் இரண்டு கண்கள், ஒரு நாவு, உதடுகள், இரு கைகள், மற்றும் இரு கால்களை கொண்டுள்ளீர்கள்.

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய மனிதர்கள் மற்றும் ஜின்களுடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (அல்-குர்ஆன் 55:13)


இந்நூலை மொழிபெயர்க்கும் பொது, இந்நூல் ஏற்கனவே கவலைப்படாதே எனும் தலைப்பில் சென்னையில் வெளிவந்துள்ளதாக அறியமுடிந்தது.    அதன் விபரம்:
                                                     நூல்: கவலைப்படாதே
ஆசிரியர்:
டாக்டர் ஆயிழ் அல்கர்னீ
தமிழில்
டாக்டர் அ.ஜாகிர் ஹுசைன் பாகவி எம்.ஏ.,பி.ஹெச்.டி
அரபு மொழி உதவிப் பேராசிரியர், சென்னை பல்கலைக்கழகம்.
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138,பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை -600012

விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...