திறந்த கல்வி வளங்கள்

 


திறந்த கல்வி வளங்கள் 

அறிமுகம் 

கல்வித்துறையில் அண்மைக்காலமாக திறந்த கல்வி வளங்கள் (OPEN EDUCATIONAL RESOURCES-OER), திறந்த கல்வி நடைமுறைகள் (OPEN EDUCATIONAL PRACTICES) எனும் பதங்கள் பிரபலயமாகி வருகின்றன. குறிப்பாக கல்வித் தொழினுட்பம் சார்ந்த விடயங்களில் இவை பேசு பொருளாகி உள்ளன.  என்ன திறந்த கல்வி வளமா? அப்படி என்றால் என்ன? என யோசனை செய்கிறிர்களா? கவலை வேண்டாம்! இந்த கட்டுரையில் திறந்த கல்வி வளங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

திறந்த கல்வி வளங்கள் என்றால் என்ன?

வெற்றிகரமான வகுப்பறைக் கற்றல்-கற்பித்தலை ஒழுங்கமைப்பதே ஆசிரியர்களின் பிரதான வகிபங்காக உள்ளது. வினைத்திறனானகற்றல்-கற்பித்தலை ஒழுங்கமைக்க ஆசிரியர்கள் பல்வேறு கற்றல் சாதனங்களை வேண்டியவர்களாக இருப்பர். இணைய சேவைகள் பட்டி தொட்டி எங்கும் பரவியதன் காரணமாக, ஆசிரியர்கள் தமது கற்றல் கற்பித்தலுக்கு தேவையான பல்வேறு சாதனங்களை இணையத்தளங்களில் இருந்து பெற்று தமது கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துகின்றனர். 

கற்பித்தலுக்கு தேவையான நூல்கள், கட்டுரைகள், மேலதிக வாசிப்புகள்,  பயிற்சி வினா வினா-விடைகள், உருக்கள், கார்ட்டூன் படங்கள், வரிப்படங்கள், மாதிரி உருக்கள், ஒலித் துணுக்குகள், காணொளிகள், நிகழ்நிலை செய்து காட்டல் விளக்கங்கள், உருவகப்படுத்துதல் (Simulation), இயங்குபடங்கள் (Animation) போன்றவற்றை பயன்படுத்த முனைகின்றனர்.

இவற்றுள் பல இலவசமாக கிடைப்பதில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவை பதிப்புரிமை/உரிமம் (Copyrights) கொண்டவையாக இருக்கின்றன. மீள பயன்படுத்தவோ, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாதவையாக இருக்கும். 

சிலவேளைகளில், அவற்றை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டியும் இருக்கும். பதிப்புரிமை கொண்ட கற்றல்-கற்பித்தல் சாதனங்களை அனுமதியின்றி பயன்படுத்தும்போது, சிலவேளைகளில் சட்ட சிக்கலுக்குள் அவை எம்மை சிக்க வைத்து விடும். இந்த தடைகளை குறைப்பதற்காக அறிமுகம் பெற்றதே திறந்த கல்வி வளங்கள் ஆகும். இதனை சுருக்கமாக OER என்று அழைப்பர். 

திறந்த கல்வி வளங்கள் - வரைவிலக்கணம்

"திறந்த கல்வி வளம்(கள்)" (OER) என்பது கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளில் நாம் பயன்படுத்துகின்ற பல்வேறு கற்றல் வளங்களை குறிப்பிட்டு நிற்கிறது. 2002 ஆண்டில் முதன் முறையாக யுனேஸ்கோ திறந்த கல்வி வளம் என்ற எண்ணக்கருவினை அறிமுகம் செய்தது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் திறந்த பாடநிரல் சாதனங்கள் ( Open courseware in developing countries) தொடர்பான மாநாட்டில் இந்த பதம் பயன்படுத்தப்பட்டது.  

நீங்கள் ஆசிரியராக இருந்தாலும் அல்லது மாணவராக  இருந்தாலும் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கக் கூடிய  கற்றல்-கற்பித்தல் சாதனங்கள் அனைத்தும் திறந்த கல்வி வளங்கள்  (OER) எனப்படுகின்றது. 

திறந்த கல்வி வளங்களுக்கு  எந்தவொரு உரிமக் கட்டணமும் அல்லது பதிப்புரிமை கட்டணங்கள்  செலுத்தத் தேவையில்லை. இவை இலவசமாக பயன்படுத்தக் கூடியனவாகும்.  இவற்றை, மீளவும் பயன்படுத்தலாம். மாற்றி அமைக்கலாம். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 

இந்த திறந்த கல்வி வளங்களை மட்டும் பயன்படுத்தி முன்னெடுக்கப்படுகின்ற கல்வி நடவடிக்கைகளை திறந்த கல்வி நடைமுறைகள் (OEP) என்கிறோம்.

பொதுத் தளத்தில் அல்லது திறந்த பதிப்புரிமையின் கீழ் எந்தவொரு மொழியிலும், எண்ணிம அல்லது வேறுவகையில் வெளியிடப்பட்ட   கற்றல்-கற்பித்தல் மற்றும் ஆய்வு சாதனங்கள் திறந்த கல்வி வளம் எனலாம். 

இத்தகைய வளங்கள் ஏனையவர்களினால்  இலவசமாக பெறக் கூடியதாக, எந்த வித வரையறைகளுமின்றி  மாற்றி அமைக்கக் கூடியதனவையாக, மீள  விநியோகிக்கக் கூடியவையாக காணப்படும். (யுனெஸ்கோ). 

இத்திறந்த கல்வி வளங்களை 5R வடிவங்களில் நாம் பயன்படுத்த முடியும். அவையாவன:

  • Retaining- வளங்களை தக்கவைத்தல்
  • Remixing -  ரீமிக்ஸ் செய்தல் எமது கற்றல்-கற்பித்தல், ஆய்வு தேவைகளுக்கு ஏற்ப திறந்த கல்வி வளங்கள் பலவற்றை கலப்பு செய்தல்  
  • Revising, திருத்தி அமைத்தல்
  • Reusing மீள்பயன்பாடு செய்தல் மற்றும்
  • Redistributing மறுபகிர்வு செய்தல்

திறந்த கல்வி வளங்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது?

திறந்த கல்வி வளங்களாக வெளியிடப்படும்  சாதனங்கள் CREATIVE COMMONS LICENCE களை கொண்டிருக்கும். அதாவது மேலே கூறப்பட்ட 5R செயற்பாடுகளில் ஒன்றினையோ அல்லது பலவற்றையோ அனுமதிக்கும் வகையில் அதன் பதிப்புரிமைகள்/உரிமங்கள்  அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும்.

Attribution-NoDerivs
CC BY-ND

வணிகரீதியாக உட்பட எந்த நோக்கத்திற்காகவும் குறிப்பிட்ட சாதனைத்தை மீண்டும் பயன்படுத்த இந்த உரிமம் உங்களை  அனுமதிக்கிறது; இருப்பினும், அதை மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது, இது பெறப்பட்ட மூலம் கட்டாயமாக குறிப்பிடப்பட வேண்டுமாகிறது.

Attribution-NonCommercial
CC BY-NC

 

வணிகநோக்கில் அல்லாத வகையில், இந்த உரிமம் மற்றவர்களை ரீமிக்ஸ் செய்யவும், மாற்றியமைக்கவும், உங்கள் சாதனங்களை  உருவாக்கவும் உதவுகிறது, மேலும் உங்களின்  புதிய படைப்புகள்  வணிக ரீதியற்றதாக இருக்க வேண்டும் அத்துடன் பெறப்பட்ட மூலமும் குறிப்பிட்டுக் காட்டப்படல் வேண்டும். இருந்தபோதிலும், மூல சாதனம் கொண்டிருந்த அதே விதிமுறைகளில் உங்கள் புதிய  படைப்புகளுக்கு உரிமம் வழங்க வேண்டியதில்லை.

 

Attribution-NonCommercial-ShareAlike
CC BY-NC-SA

 

வணிகநோக்கமற்ற வகையில் நீங்கள் உருவாகும் கற்றல் சாதனங்களில் இந்த உரிமம் கொண்ட சாதனங்களை மேல்-கலப்பு செய்யவும், மாற்றியமைக்கவும், அனுமதி அளிக்கிறது. ஆனால், உங்கள் புதிய சாதனத்தில் மூல சாதனத்தினை எங்கிருந்து பெற்றீர்கள் என்பதை குறிப்பிடுவதுடன், மூல சாதனத்தின் அதே உரிமை வகை, புதிய படைப்புகளிலும் பேணப்படல் வேண்டும்.



                                       Attribution-NonCommercial-NoDerivs
CC BY-NC-ND

 

இந்த உரிமம்  திறந்த கல்வி வளங்கள் சம்பந்தமான உரிமங்களில் மிகவும் கட்டுப்பாடுகளைக் கொண்டது. அதாவது இந்த உரிமம் உடைய கற்றல்-கற்பித்தல், ஆய்வு தொடர்பான சாதனங்களை பதிவிறக்கி பயன்படுத்த அனுமதிக்கும். அவ்வாறு பயன்படுத்துகையில் குறித்த சாதனம் பெற்றுக் கொள்ளப்பட்ட மூலம் குறிப்பிட்டுக் காட்டபடல் வேண்டும். ஆனால், இவற்றை  எந்த வகையிலும் மாற்றவோ அல்லது வணிக ரீதியாகப் பயன்படுத்தவோ முடியாது




                                            CC0  “No Rights Reserved”
இந்த உரிமம் கொண்டவை எந்தவித பதிப்புரிமைகளுமற்ற வகையில் பிரசுரமாகி இருக்கும். இவற்றை எந்த வித தங்கு தடைகளும் இன்றி பயன்படுத்தலாம்.

திறந்த கல்வி வளங்களின் நன்மைகள் 

திறந்த கல்வி வளங்களின் பயன்பாடு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இவற்றை பயனபடுதுவதால் பாலா நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன. அவற்றுள் சில வருமாறு: 
  • கற்றலுக்கான அணுகல் விரிவடைந்துள்ளது. உலகில் எங்கும் உள்ள மாணவர்கள் எந்த நேரத்திலும் OERகளை பெற்றுக் கொள்ள முடியுமாக உள்ளது.
  • OERகள் குறைந்த செலவுடன்  அல்லது செலவு இல்லாமல் பரவலாக விநியோகிக்கக் கூடியவை.
  • மேலதிக கற்றலுக்கு,  பாடப்புத்தகங்கள் மற்றும் விரிவுரைகளுக்குத் துணையாக OERகள் காணப்படுகின்றன. இதன் மூலம் பரந்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.  
  • வழக்கமான கற்றல்-கற்பித்தல் செயன்முறையை மேலும் மேம்படுத்துவதற்கு OER கள் உதவுகின்றன. . உதாரணமாக, கற்பித்தலின் பொது பல்வேறு காணொளிகள், பல்லூடக சாதனங்களை இலகுவாக இணைத்து கற்பிக்கும் வசதிகள் இதனால் இலகுவாக கிடைக்கப் பெறுகின்றன. இதனால் மாணவர் கற்றல் மேம்படும்.
  • திறந்த கல்வி வளங்கள் விரைவான சுழற்சி கொண்டவை ஆகும். ஆதாவது தகவல்களை விரைவாக கொண்டு செல்லக் கூடியதாக இருக்கின்றன.
  • திறந்த கல்வி வளங்கள் புத்தாக்கங்களை, திறமைகளை மேலும் விருத்தி செய்கின்றன.




விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...