புவி, புவியின் வடிவம் மற்றும் புவியின் இயக்கங்கள்

 புவி, புவியின் வடிவம் மற்றும் புவியின் இயக்கங்கள்

புவி

ஞாயிற்று தொகுதியில் உள்ள கோள்களுள், உயிர்வாழும் அங்கிகளையும், தண்ணீரையும் கொண்ட ஒரே கோளாக, புவி விளங்கி வருகின்றது. புவியின் வடிவம் அதன் இயக்கம் பற்றி இங்கு சற்று எடுத்து நோக்குவோம்.

புவியின் வடிவம்



புவியானது கோள வடிவானது. ஆயினும் நாம் எண்ணுவது போன்று, புவியானது ஒரு சமச்சீரான கோள வடிவமானதல்ல. ஏனெனனில், புவியின் புவியச்சு விட்டமும், மத்திய கோட்டு விட்டமும் வேறுபட்ட அளவுகளில் அமைந்துள்ளன. புவியின் புவியச்சு விட்டம் 12,714km  ஆக உள்ளது . ஆனால், மத்திய கோட்டு விட்டமானது , 12,757 (12,756) km ஆக உள்ளது. புவியின் மத்திய கோட்டு விட்டமானது,, புவியச்சு விட்டத்தை விடவும் 43 km அதிகமாக உள்ளதே, புவி சமச்சீரற்ற கோளம் எனக் கூறக் காரணமாகும்.

புவியின் இயக்கங்கள்

புவி இடைவிடாது தன்னச்சில் சுற்றிக் கொண்டே உள்ளது. இதனேயே புவிச் சுழற்சி என்பர். புவி ஒரு தடவை தன்னை தானே சுற்றுவதற்கு சுமார் 24 மணி நேரம் அல்லது ஒரு நாளினை எடுத்து கொள்கிறது. புவியின் சுழற்சி காரணமாகவே, இரவு, பகல் தோன்றுகின்றன.



பூமி, தன்னச்சில் சுழன்று வருவது போல, சூரியனையும் நீள்வட்ட பாதையில்சுற்றிப் பயணம் செய்கிறது. இதனையே. புவி சுற்றுகை என்பர். புவிச் சுற்றுகையின் காரணமாக, புவியில் வேறுபட்ட பருவகாலங்கள் உருவாகுகின்றன.

பருவ காலங்கள் 

மார்ச் 21 : சம இராக்காலம் காணப்படும். புவிக்கு சூரிய உச்சம் முனைவுகளினூடாக கிடைக்கப்பெறுவதால், புவியெங்கிலும் சமமான இரவு, பகல் காணப்படும். இக்காலம் இலைதுளிர் காலம், வசந்த காலம், இளவேனில் காலம் எனப் பலவாறாக அழைக்கப்படும்.

ஜூன் 22: சூரியன், கடகக் கோட்டிக்கு உச்சம் கொடுக்கும் காலம். இதனால், புவியின் வட அரைகோளம், கோடையினை அனுபவிக்கும்.  புவியின் வட அரைகோளத்தில் நீண்ட பகல் வேளையும், தென் அரைகோளம், நீண்ட இராப் பொழுதுகளையும் கொண்டிருக்கும்.

செப்டம்பர் 23: இலையுதிர் காலம். சூரிய உச்சம் புவியின் முனைவினூடாக கிடக்கப்பெறுவதால், மீண்டும், புவியில் சம இராக்காலம் காணப்படும்.

டிசெம்பர் 22: மகரக் கோட்டில், சூரிய உச்சம் காணப்படும். இதன் காரணமாக, வட அரைக் கோளம், நீண்ட இரவுகளை கொண்டிருக்கும். தென் அரைகோளம், நீண்ட பகல் வேளைகளை அனுபவிக்கும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...