வினைத்திறன்மிகு
கற்பித்தலும் ஷுல்மானின் ஆசிரியர்களுக்கான
போதனா சார் உள்ளடக்க அறிவு எண்ணக்கருவும்
கலாநிதி எப்.எம்.நவாஸ்தீன்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
அறிமுகம்
“ஒரு
காலத்தில் ஆசிரியர்கள் அறிவின் களஞ்சியசாலைகளாக கருதப்பட்டனர். ஆனால் தற்காலத்தில்
அவ்வாறன்று. ஒரு மிகச் சிறந்த ஆசிரியர், மாணவர்களது அறிவினை மேலும் பெருகச் செய்பவராக
இருப்பதுடன், மாணவர்களுக்கு எங்கிருந்தாலும் உதவி செய்பவராகவும் காணப்படுவார்.(சிவ்நாடார்
எனும் இந்தியரின் பிரபலமான கூற்று)”
இன்றைய
பின்நவீனத்துவ காலத்தில், ஆசிரியர் கொண்டிருக்க வேண்டிய வகிபாகங்களில் பல மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளன. ஆசிரியர் தனது கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக்கி
கொள்வதற்கு விரைந்து மாறி வரும் கல்வி உலகிற்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக் கொள்வது
இன்றியமையாதது. மாணவரது கற்றலை மேலும்
விருத்தி செய்யும் வகையில் ஓர் இலகுபடுத்துபவராக அல்லது சாத்தியப்படுத்துபராகவே தற்கால
ஆசிரியர்கள் நோக்கப்படுகின்றனர். இதன்
பொருட்டு, ஆசிரியர்கள் தம் பணியான கற்றல் கற்பித்தல் செயன்முறையில் சிறந்து விளங்க
அவர்கள் பல்வேறு அறிவுகள், திறன்களை கொண்டிருக்க வேண்டியுள்ளது. அந்தவகையில் வினைத்திறன்
மிகுந்த கற்றல் கற்பித்தலில் ஆசிரியர் கொண்டிருக்க வேண்டிய பல்வேறு அறிவுகள்
பற்றியும், சிறந்த கற்றல் கற்பித்தலில் சுல்மான் என்பவரது போதனா சார் உள்ளடக்க அறிவு எண்ணக்கருவின்
செல்வாக்கு பற்றியும் இக்கட்டுரையில் எடுத்து நோக்கப்படுகிறது.
வினைத்திறன்
மிகு கற்றல் கற்பித்தல்
கற்பித்தல்
என்பது ஒரு சிக்கலான அறிகைசார் செயன்முறையாகும்.
ஏனெனில், வகுப்பறையில் உள்ள சகல
மாணவர்களுக்கும் ஒரே விதமாக கற்பித்து விட்டு செல்ல முடியாது. வகுப்பறையில் உள்ள மாணவர்கள் அனைவரையும் ஒரே
நோக்கில் நோக்கவும் முடிவதில்லை. அவர்கள் எண்ணிக்கையில் மட்டுமன்றி அவர்களது கற்றல்
தேவைகளிலும் பல்வகைப்பட்டவ்ர்கள். இதனால் வகுப்பில் உள்ள அனைவருக்கும் ஒரே விதமான
கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள் செல்லுபடியாகுவதில்லை. மாணவர்களது பல்வேறு கற்றல் தேவைகளை அறிந்து,
அவற்றுக்கேற்ற பல்வேறு கற்றல் கற்பித்தல் உத்திகள், நுட்பங்களை ஒருங்கிணைத்து
கற்பிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு கற்பிக்கும் போதே வினைத்திறன் மிகு
கற்பித்தலுக்கான பாதை அங்கு திறக்கப்படுகின்றது. ஆசிரியர்கள் தமது கற்றல் கற்பித்தலினை
வினைத்திறன் மிக்கதாக்கி கொள்வதற்கு பின்வரும் பிரதான விடயங்களில் தேர்ச்சி
பெற்றவர்களாக இருக்க வேண்டும் என Sandrook (2017) கருதுகிறார்:
- வாண்மைசார் அறிவு மற்றும் திறன்கள்
- அர்ப்பணிப்பு,
ஊக்கல், பராமரிப்பு, பாதுகாப்பு
மேலும்,
ஆசிரியர்கள், தமது பணியை வினைத்திறன்மிக்கதாக்கி கொள்வதற்கு பின்வரும் ஆசிரிய வாண்மைசார் அறிவு மற்றும் திறன்களினை
பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் Sandrook (2017) சுட்டிக்காட்டுகிறார்:
· - பாட விடயம் தொடர்பான
தேர்ச்சி
· - கற்பித்தல் உத்திகள்
தொடர்பான அறிவும் திறன்களும்
· - இலக்கு
நிர்ணயிப்பும் கற்பித்தல் திட்டமிடலும்
· - பிள்ளை விருத்தி
மட்டங்களுக்கு பொருத்தமான வகையில் கற்பித்தல் பிரயோகங்கள்
· - வகுப்பறை முகாமைத்துத்
திறன்கள்
· = ஊக்கல் திறன்கள்
· - தொடர்பாடல்
திறன்கள்
· - மாணவரது தனியாள்
வேறுபாடுகள் தொடர்பான அக்கறை
· - பல்கலாசார பின்னணி
கொண்ட வகுப்பறையில் மாணவர்களை சிறந்த முறையில் கையாளுதல்
· - கணிப்பீடு தொடர்பான
அறிவும் திறன்களும்
· - தொழினுட்பத் திறன்கள்
இதே
போன்றதொரு விடயத்தை ஷுல்மான் (1987),
என்பவரும் குறிப்பிட்டுள்ளதை காணமுடியுகின்றது. அதாவது வினைத்திறமிக்க
ஆசிரியர் பின்வரும் ஏழு அறிவுப்
பகுப்புக்களை களைக் கொண்டிருக்க வேண்டும் என சுல்மான் குறிப்பிட்டுள்ளார்.
·
(பாட) உள்ளடக்க
அறிவு
·
பொதுக் கற்பித்தல்
அறிவு
·
கலைத்திட்டம்
தொடர்பான அறிவு
·
போதனைசார் (கற்பித்தல்)
உள்ளடக்க அறிவு
·
மாணவர்கள் மற்றும்
அவர்களது குணவியல்புகள் பற்றிய அறிவு
·
கல்விச் சூழமைவுகள்
பற்றிய அறிவு
·
கல்வியின் இறுதி பேறுகள்
(முடிவு நிலை) தொடர்பான அறிவு
மேற்கண்ட
இருவரது கருத்துக்களை தொகுத்து நோக்கும் போது,
ஆசிரியர்கள் தமது கற்பித்தல் பணியில் சிறந்து விளங்க கற்பிக்கப் போகும் பாட
விடயத்தில் ஆழமான புரிதலை கொண்டிருப்பது மட்டுமன்றி அவற்றை மாணவர்களுக்கு எங்கு, எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பது தொடர்பான அறிவுகளை கொண்டிருப்பது
அவசியம் என புலனாகின்றது.
நிபுணத்துவ
அறிவும் போதனைசார் (கற்பித்தல்) உள்ளடக்க அறிவும்
சிறந்த
ஆசிரியர் தாம் கற்பிக்கும் பாட விடயம் தொடர்பாக்க கொண்டுள்ள அறிவு நிபுணத்துவ
அறிவு எனப்படுகிறது. அதாவது விஞ்ஞானம் அல்லது தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர் அப்பாடவிடயத்தின்
உள்ளடக்கங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவினை கொண்டிருப்பது நிபுணத்துவ அறிவு
எனப்படுகிறது. ஒருவர் தான் கற்பிக்கப் போகும் பாட உள்ளடக்கங்களைக் குறிப்பாக
அவற்றின் மைய எண்ணக்கருக்களை விளங்கிக்
கொள்ளாது மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது. ஆயினும் பாட விடய உள்ளடக்க அறிவு
மாத்திரம் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பிக்க துணை போவதில்லை. மாறாக அப்பட
விடயங்களை பொருத்தமான கற்றல் கற்பித்தல் முறைகள், நுட்பங்களின் உதவியுடன் கற்பிக்க
வேண்டிய தேவை ஆசிரியர்களுக்கு உண்டு. இதனையே
சுல்மன் பாட விடய உள்ளடக்க அறிவு என அடையாளப்படுத்துகிறார்.
ஷுல்மானின்
போதனாசார் உள்ளடக்க அறிவு எண்ணக்கரு
ஆசிரியர்கள்
கற்பிக்கும் பாடங்கள் பற்றிய அறிவு,
அவற்றை கற்பிக்கும் முறைகள் பற்றிய அறிவு ஆகியவற்றை ஒன்றிணைத்த வகையில் சுல்மான் ஓர் எண்ணக்கருவை முன்வைத்து இருந்தார். அதுவே போதனாசார் உள்ளடக்க அறிவு
எனப்படுகிறது. ஆசிரியர்கள் பாடங்களை கற்பிக்கும் பொது அப்பாடங்களுடன் தொடர்பு பட்ட
வகையில் ஆசிரியர்களிடம் உள்ள குணவியல்புகள், கற்பித்தல்
முறைகள் என்பன ஆசிரியர்கல்வி தொடர்பான ஆய்வுகளில் தவறவிடப்பட்டுள்ளதாக சுல்மான்
கருதியதன் விளைவாக ஆசிரியரிகளிடம்
காணப்பட வேண்டிய பாட உள்ளடக்க
அறிவு. போதனாசார் உள்ளடக்க அறிவு ஆகிய எண்ணக்கருக்கள் பற்றிய விளக்கங்கள் வெளிவரத்
தொடங்கின.
போதனாசார்
உள்ளடக்க அறிவு இரண்டு விதமான அறிவுகள் ஒன்றினையும் போது உருவாகும் அறிவாக உள்ளது.
பாட உள்ளடக்க அறிவு மற்றும் போதனா அறிவு அல்லது கற்பித்தல் தொடர்பான அறிவு என்பனவே
அவைகள் ஆகும்.
உள்ளடக்க
அறிவு என்பது, ஆசிரியர் கற்பிக்கும்
பாடத்தினைப் பற்றிய அவரது ஆழமான புரிதலை குறித்துக் காட்டுகின்றது. இதில் ஒரு பாட
விடயத்தை அது எத்தகையது என்று அறிந்து இருப்பதுடன் அது ஏன் அவ்வாறு காணப்படுகிறது
என்பதான ஓர் ஆழமான விளக்கத்தினை இது குறித்து நிற்கின்றது.
போதனா
அறிவு அல்லது கற்பித்தல் அறிவு:
போதனா அறிவு பல்வேறு
கற்றல் கற்பித்தல் முறைகள், வகுப்பறை
முகாமைத்துவம், கணிப்பீடும் மதிப்பீடும், பாடவேளை திட்டமிடல், மாணவர் எவ்வாறு கற்கின்றனர் என்பது போன்ற இன்னோரன்ன
விடயங்களில் அறிவு கொண்டிருப்பதனைக் குறிகின்றது.
இவ்விரு
அறிவுகளும் ஆசிரியர்களுக்கு முக்கியமாகின்றது. அதாவது போதனா உள்ளடக்க அறிவு
வினைத்திறன் மிக்க ஆசிரியர்களுக்கு மிகவும் தேவையான அறிவாக விளங்குகின்றது.
மூலம்:சுல்மான் (1986)
வினைத்திறன் மிக்க ஆசிரியர்களாக திகழ வேண்டுமெனில், முக்கியமான
பல அறிவுகளையும் திறன்களையும் ஆசிரியர்கள் கொண்டிருப்பது அவசியம். அவற்றில்
போதனாசார் உள்ளடக்க அறிவும் ஒன்றாக உள்ளது. ஆசிரியர் தான் கற்பிக்கும் பாட
விடயங்களைப் பற்றிய ஆழமான புரிதல்களை கொண்டிருப்பதுடன் அவற்றை எங்கு எவ்வாறு கற்பிப்பது
என்ற விடயங்களிலும் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இதற்க்காக ஆசிரியர்கள்
தொடர்ச்சியான கற்றலிலும் பயிற்சிகளிலும் ஈடுபடுவது முக்கியமாகின்றது.
Shulman (1986) குறிப்பிடுவதற்கமைய போதனைசார்
உள்ளடக்க அறிவு என்பது மிக உயர்வாகக் கட்டமைக்கப்பட்ட வகுப்பறை ஒழுங்கமைப்பில்
தமது செயற்பாடுகளை வழிப்படுத்திக் கொள்வதற்காக ஆசிரியர்களால்; பயன்படுத்தப்படும் ஒருவகையான செயற்பாட்டு ரீதியான அறிவு ஆகும். இவ்வகை அறிவு
மேலும் சில விடயங்களுடன் தொடர்புபடுகிறது
- மாணவர்களுக்கு
நேரடியாகக் கற்பிப்பதற்காகப் பாட உள்ளடக்கத்தைக் கட்டமைத்துக் கொள்வது எவ்வாறு
என்பது பற்றிய அறிவு
· - குறித்த
பாட உள்ளடக்கத்தைக் கற்கும் போது மாணவர்கள் மத்தியில் எழக்கூடிய பொதுவான மற்றும்
தவறான எண்ணக்கருக்களும் பிரச்சினைகளும் எவ்வாறானவை என்பது பற்றிய அறிவு.
· - குறித்த
வகுப்பறைக் கவின்நிலைக்கமைய மாணவரது கற்றல் தேவைக்கேற்ப எவ்வகையான கற்பித்தல்
உத்திகளைப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய அறிவு.
இவ்வாறு நோக்குகையில் போதனைசார் உள்ளடக்க அறிவு எனும் சொல்லானது எவ்வாறு கற்பிப்பது? எதனைக் கற்பிப்பது? எப்படிக்
கற்பிப்பது? போன்ற விடயங்களை உள்ளடக்கியிருப்பதைக் காணலாம்.
இது ஆசிரியர் கல்வியில் தனி;த்துவமான ஒரு ஆட்சிப் புலத்தைப்
(domain) பிரதிநித்துவம் செய்கிறது. போதனைசார் உள்ளடக்க அறிவு
என்பது, “ தன்னால் கற்பிக்கப்படும் ஒரு பாடவிடயத்திலுள்ள அம்சங்களை மாணவர்கள் சிறப்பாக
உள்வாங்கிக் கொள்ளலை ஊக்குவிக்கும் விதத்தில், மாணவர்கள் குறித்த பாடம் தொடர்பாக எவ்வறான ஒரு
கிரகித்தலைப் பெற்றுக்கொள்வார்கள் என்பது பற்றிய அறிவுடன், தன்னால் கையாளப்படும்
கற்பித்தல் உத்திகள் மற்றும் தொழிநுட்பங்களுக்கு அப்பால் ஓர் ஆசிரியர், தனது கற்பித்தல்
தொடர்பாகச் சிந்தனை செய்யும் விதமாகும்” என அடையாளப்படுத்தலாம்.
சுல்மானின் கற்கையைத் தொடர்ந்து Grossman,(1990); Magnusson (1999) ஆகியோரும் போதனைசார் உள்ளடக்க அறிவூ தொடர்பாக பல்வேறு விளக்கங்களை முன்வைத்துள்ளனர்.
முடிவுரை
வினைத்திறன் மிக்க ஆசிரியர்களாக திகழ வேண்டுமெனில், முக்கியமான
பல அறிவுகளையும் திறன்களையும் ஆசிரியர்கள் கொண்டிருப்பது அவசியம். அவற்றில்
போதனாசார் உள்ளடக்க அறிவும் ஒன்றாக உள்ளது. ஆசிரியர் தான் கற்பிக்கும் பாட
விடயங்களைப் பற்றிய ஆழமான புரிதல்களை கொண்டிருப்பதுடன் அவற்றை எங்கு எவ்வாறு கற்பிப்பது
என்ற விடயங்களிலும் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இதற்க்காக ஆசிரியர்கள்
தொடர்ச்சியான கற்றலிலும் பயிற்சிகளிலும் ஈடுபடுவது முக்கியமாகின்றது.
உசாத்துணைகள்
Kleickmann, Thilo & Richter, Dirk
& Kunter, Mareike & Elsner, Juergen &
Besser, Michael &
Krauss, Stefan & Baumert, Jürgen. (2012). Teachers'
Content Knowledge and
Pedagogical Content Knowledge: The Role of
Structural Differences in
Teacher Education. Journal of Teacher Education.
64. 90-106.
10.1177/0022487112460398.
Halim, L., & Meraah, S. M. (2002).
Science trainee teachers’ pedagogical content knowledge and
its influence on physics teaching.
Research in Science & Technological Education, 20,
215-225.
doi:10.1080/0263514022000030462
Santrock (2018) Educational Psychology:
Theory and Application to Fitness and
Performance, Sixth
Edition, McGraw-Hill Education
Shulman, L. S. (1986). Those who
understand: Knowledge growth in teaching. Educational
Researcher, 15(2), 4-14.
doi:10.3102/0013189X015002004
Shulman, L. S. (1987). Knowledge and
teaching: Foundations of the new reform. Harvard
Educational Review,
57(1), 1-22.
Citation for this article:
நவாஸ்தீன்.
ப.மு. (2019), வினைத்திறன்மிகு கற்பித்தலும் சுல்மானின்
ஆசிரியர்களுக்கான போதனா சார் உள்ளடக்க அறிவு எண்ணக்கருவும்,
கடல்-கல்வியியல் உளவியல் சமூகவியல் ஏடு, இதழ் 22, பக்கம் 30-32,
ஆசிரியர்களுக்கான போதனா சார் உள்ளடக்க அறிவு எண்ணக்கருவும்,
கடல்-கல்வியியல் உளவியல் சமூகவியல் ஏடு, இதழ் 22, பக்கம் 30-32,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக