கல்விசார்
ஆய்வுகளும் மாதிரியெடுப்பு முறைகளும்
Educational
Researches and Sampling Methods
கலாநிதி ப.மு. நவாஸ்தீன்
இடைநிலை,மூன்றாம் நிலைக் கல்வித் துறை,
கல்விப்பீடம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
குறிப்பு: இக்கட்டுரை இலங்கை திறந்த பல்கலைகழக, கல்விப் பீடத்தினால் வெளியிடப்படும் பார்வை சஞ்சிகை 5 (2015) இல் வெளிவந்த கட்டுரை
அறிமுகம்
இன்று அனைத்துத்
துறைகளிலும் ஆய்வு என்பது முக்கியம் பெற்றும் பிரபல்யமடைந்தும் வருகிறது. 'ஆய்' எனும் வினைச்சொல்லில் இருந்து ஆய்வு எனும் பதம் மருவியது. ஒன்றை மீண்டும்
மீண்டும் தேடுவதையே நாம் ஆராய்ச்சி என்கிறோம் (சித்திரபுத்திரன் மற்றும் சண்முகம்
2005). ஆராய்ச்சியானது, பல துல்லியமான
விஞ்ஞானத் திறன்களை உள்ளடக்கியதொரு புலமைசார்ந்த விசாரணை என தங்கசாமி (2012)
ஆய்வுக்கு விளக்கம் தருகிறார். இதேபோன்று Cresswell (2011) சிறிய தர்க்கரீதியான (காரணகாரிய)
படிமுறைகளைக் கொண்ட ஒரு செயன்முறையினை ஆய்வு என்கிறார். இவர்கள் கூறுவது போன்று,
ஓர் ஆய்வானது, அது சிறியதாகவோ பெரியதாக இருப்பினும் பல்வேறு
ஒழுங்கு முறையான கட்டங்களையும் படிநிலைகளையும் கொண்டதாக விளங்குகிறது. ஆய்வுகளில்
ஈடுபடும் நபர்கள், இந்தப் பல்வேறான
கட்டங்களையும் படிநிலைகளையும் சரிவரப் புரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும்.
இந்தவகையில், கல்விப்புலத்தில்
உள்ளவர்களினைக் கருத்தில் கொண்டு ஆய்வு தொடர்பாக இரு வௌ;வேறான பகுதிகள் இக்கட்டுரையில் எடுத்து
நோக்கப்படுகிறது. முதலில், கல்விசார் ஆய்வு
பற்றிய அறிமுகத்தையும் அதனைத் தொடர்ந்து ஆய்வுகளில் மாதிரியெடுப்பு முறைகள்
மற்றும் நுட்பங்கள் பற்றியும் இக்கட்டுரையில் நோக்கப்படுகிறது.
கல்விசார் ஆய்வுகள் (Educational Researches)
ஒரு தலைப்பு
அல்லது எழுவினா தொடர்பாக எமது விளக்கங்களை அதிகரித்துக் கொள்வதற்காக தகவல்களை
சேகரித்து பகுப்பாய்வு செய்யும் ஒரு செயன்முறையை ஆய்வு என Cresswell (2011) பிறிதொரு இடத்தில் குறிப்பிடுகிறார்.
அந்தவகையில், கல்விப்புலத்தில்
நிலவுகின்ற பிரச்சினைகள் (Problems)> எழுவினக்கள் (Issues) தொடர்பாக கவனம்
செலுத்தி அவை தொடர்பாக மேலதிக விளக்கங்களைப் பெரும் பொருட்டு மேற்கொள்ளப்படும்
சகலவிதமான ஆய்வுகளும் கல்விசார் ஆய்வுகள் எனப்படும். மாணவர் கற்றல், நடத்தை, வகுப்பறை இயக்கச் செயற்பாடுகள், ஆசிரியர் கற்பித்தல், ஆசிரியர் பயிற்சி, கலைத்திட்டத் திட்டமிடல், கலைத்திட்ட விருத்தி, அமுலாக்கம், பாடசாலை அதிபர் தலைமைத்துவம், அதிபர் வகிபங்கு என கல்வியுடன் நேரடியாகவும்
மறைமுகமாகவும் தொடர்புடைய இன்னோரன்ன கல்வியுடன் சார்ந்ததாக மேற்கொள்ளப்படும்
ஆய்வுகள் கல்விசார் ஆய்வுகளில் அடங்குகின்றன. கல்விசார் அறிவு மற்றும் கற்றல்
செயன்முறைகளின் முன்னேற்றம், அதற்குத் தேவையான
கருவிகள், முறைகளைத்
விருத்தி செய்தல் போன்றவற்றினை நோக்காகக் கொண்டு மேற்;கொள்ளப்படும் விசாரணைத் துறையே கல்விசார் ஆய்வு
எனவும் விளக்கமளிக்கப்படுகிறது. கல்வி
ஆய்வாளர்கள், வாழ்க்கை வட்டம்
முழுவதிலும் எவ்வாறு கற்றல் இடம்பெறுகிறது, கல்வியின் முறையான, முறைசாரா
செயன்முறைகள் எங்கனம் கற்றல் அடைவுகளையும் தரமான வாழ்வினையும் பாதிக்கிறது
என விபரித்து விளக்கமளிப்பதனை நோக்கக் கொள்வதாகவும் கூறப்படுகிறது (பார்க்க: American Educational Research
Association). கல்விசார்
ஆய்வுகள் பல்வேறு நோக்கங்களின் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக
கல்விப்புலத்தில் காணப்படுகிற நடைமுறைகளை மேம்படுத்தல், அறிவில் காணப்படும் இடைவெளிகளை நிரப்புதல்,
அறிவினை விரிவாக்குதல்,
அறிவினை மீண்டும்
பரிசோதித்துப் பார்த்தல், அறிவுக்கு
தனிநபர்களின் பங்களிப்புக்களைச் சேர்த்தல், கொள்கை வகுப்பாளர்களுக்கு கண்டுபிடிப்புக்களை
அறிவித்தல் போன்றன இதன் சில நோக்கங்களாகும்.
கல்விசார் ஆய்வுக்கு Cresswell (2002) பின்வருமாறு விளக்கம் தருகிறார். 'ஓர் ஆய்வுப் பிரச்சினையை அல்லது எழுவினாவை
இனங்காண்பதில் இருந்து தொடங்கும் ஒரு சுழற்சி (வட்ட) படிநிலைகளைக் கொண்ட
செயன்முறையே கல்விசார் ஆய்வாகும். இது பின்னர், இலக்கிய மீளாய்வு, ஆய்வு நோக்கங்களை குறித்துரைத்தல், தரவுகளை சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், தரவு விளக்கமளித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு
பின்னர், தரவுப்
பெறுபேறுகளை கல்விச் சமூகம் பயன்படுத்தவும் மதிப்பிடவும் வேண்டி அவற்றை ஓர்
அறிக்கை வாயிலாக பரவலாக்கும் செயன்முறைகளை இது கொண்டிருக்கும்.' இந்த விளக்கத்தில் Cresswell (2002) ஆறு வகையான ஆய்வுப் படிமுறைகளை
சுட்டிக் காட்டுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அவையாவன:
- ஆய்வுப் பிரச்சினையை இனங்காணுதல் (Identifying a research problem)
- இலக்கிய மீளாய்வு செய்தல் (Reviewing the literature)
- ஆய்வு
நோக்கங்களை குறிப்பிடுதல் (Specifying a purpo
s e for research) - தரவுகளை சேகரித்தல் (Collecting data)
- தரவுகள் பகுப்பாய்வு செய்து அவற்றுக்கு விளக்கமளித்தல் (Data analysing and interpreting)
- ஆய்வினை அறிக்கைப்படுத்தலும் மதிப்பீடு செய்தலும் (Reporting and evaluating research)
இங்கு குறிப்பட்ட
ஆறு படிநிலைகளின் வட்டச் செயன்முறையை உரு 1 இல் காணலாம்.
உரு 1: ஆய்வுப்
படிமுறை வட்டம்
மூலம்: Cresswell (2011) இன் உருவினைத் தழுவியது
உரு 1 இல் காட்டப்பட்ட ஆறு படிகளும், ஓர் ஆய்வினை ஒழுங்குமுறையில் நகர்த்திச்
செல்வதற்கான தெளிவான விளக்கமொன்றைத் தருகிறது. பொதுவாக ஆய்வொன்றில் காணப்படும்
முக்கிய மூன்று கட்டங்களான: ஒரு வினாவினைத் தொடுத்தல், அவ்வினாவிற்கு விடை தேட தகவல்களைத் திரட்டல்,
சேகரித்த தரவுகளின்படி
விடையினை முன்வைத்தல் என்பனவற்றின் படிநிலைகளாக மேற்கண்ட ஆறும்
காணப்படுகின்றன.
ஆய்வு வகைகள் (Research Types)
பொதுவாக ஆய்வுகள்
தொகைசார் (அளவைசார்); ஆய்வுகள் (Quantitative Researches), பண்புசார் ஆய்வுகள் (Qualitative
Researches) கலப்பு முறை ஆய்வுகள் (Combined Researches) என மூன்று வகைகளாகப் பிரித்து நோக்கப்படுகிறது.
கல்விசார் ஆய்வுகளில் ஆய்வாளரின் நோக்கம், ஆய்வின் தன்மை, சூழமைவுக்
காரணிகள் ஆகியவற்றின் பொருட்டு ஆய்வின் வகை தீர்மானிக்கப்படுகிறது.
காணக்கூடிய நிகழ்வுகளினை புள்ளியல் ரீதியாகவோ
கணிதம் அல்லது எண் சார்ந்ததாகவோ கணக்கிடக்கூடிய நுட்பமாகவோ மேற்கொள்ளப்படும்
முறைசார்ந்த அனுபவவாத விசாரணைகள் தொகைசார் (அளவைசார); ஆய்வுகள் எனப்படுகின்றன. இத்தகைய ஆய்வுகளில் “What?” எனும் வினாக்களே காணப்படும். இந்த அளவைசார் ஆய்வுகளில் பின்வரும் முக்கிய
படிகள் காணப்படுவதாக Lodico
et al. (2010)
குறிப்பிடுகின்றனர்:
- இலக்கிய மீளாய்வு மற்றும் கோட்பாடுகள் ஆய்வு வினாவிற்கு இட்டுச் செல்லும்
- ஆய்வுக் கருதுகோள் அல்லது வினாவிற்கு விதிதரு காரணப்படுத்தல் இட்டுச் செல்லும்.
- எண் சார்ந்த தரவுகள் சேகரிக்கப்படும்.
- புள்ளியியல் பகுப்பாய்வு மேற்கொள்ளப்படும்
- புள்ளியியல் பகுப்பாய்வின்படி கருதுகோள் நிராகரிக்கப்படவோ ஏற்கப்படவோ கூடும் (அல்லது ஆய்வு வினாக்களுக்கு விடைகள் தர்க்க முறையில் முன்வைக்கப்படும்).
மனித நடத்தைகள்,
அவற்றுக்கான காரணங்களை
ஆழமாக விளங்கிக் கொள்ள பண்புசார் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வுகளில் why? how ? போன்ற ஆய்வு
வினாக்களுக்கே விடை தேடப்படும். மாறாக அளவை சார் மற்றும் பண்புசார் ஆய்வுகள்
இரண்டினையும் இணைத்த வகையிலும் ஆய்வுகள் செய்யப்படுவதுண்டு. இது இணைந்த (combined) அல்லது கலப்பு முறை ஆய்வுகள் எனப்படும்.
கல்விசார் ஆய்வுகளில் இத்தகைய ஆய்வுகள் அண்மைக்காலமாக பிரபல்யம் பெற்று வருகிறது. Cresswell (2011) இன் விளக்கத்திற்கேற்ப அளவைசார்,
பண்புசார் ஆய்வுகளின்
பிரதான பண்புகள் அட்டவணை 1 இல் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக