TPACK க்கான வினவலுக்குத் தொடர்பான முறையில் வரிசைப்படுத்திய இடுகைகளைக் காண்பிக்கிறது. தேதி முறையில் வரிசைப்படுத்து எல்லா இடுகைகளையும் காண்பி
TPACK க்கான வினவலுக்குத் தொடர்பான முறையில் வரிசைப்படுத்திய இடுகைகளைக் காண்பிக்கிறது. தேதி முறையில் வரிசைப்படுத்து எல்லா இடுகைகளையும் காண்பி

ஆசிரியர் கல்வியில் ஆய்வு

ஆசிரியர் கல்வியில் ஆய்வு





அறிமுகம்

ஆசிரியர் கல்வியில் ஆய்வு  என்பது கற்பித்தல்–கற்றல் செயன் முறைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளவும், அவற்றை மேம்படுத்தவும் உதவும் ஒரு அறிவியல் வழிமுறை ஆகும். ஆசிரியர்கள் எவ்வாறு கற்பிக்கிறார்கள், மாணவர்கள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள், எந்தக் கற்பித்தல் அணுகுமுறைகள் சிறப்பாக செயற்படுகின்றன, தொழில்நுட்பம் மற்றும் உளவியல் கூறுகள் கற்றலை எவ்வாறு பாதிக்கின்றன என்பவற்றை முறையான ஆய்வுகளின் மூலம் கண்டறிதல் இதன் நோக்கம் ஆகும். முன் சேவை ஆசிரியர்கள்   (pre-service), சேவைக்கால  ஆசிரியர்கள்  (in-service), வாண்மை விருத்தி , வகுப்பறை நடைமுறைகள், கற்பித்தல் உத்திகள், மாணவர் ஈடுபாடு, மதிப்பீட்டு முறைகள், கல்வியில் உருவாகும் புதிய நுட்பங்கள் போன்றவை இத்துறையின் முக்கிய ஆய்வு திசைகளாகும்.இந்த கட்டுரையில் ஆசிரியர் கல்வியில் ஆய்வுகள் பற்றிய சில முக்கிய விடயங்கள் எடுத்து நோக்கப்படுகின்றன.

ஆசிரியர் கல்வி

ஆசிரியர் கல்வி என்பது, பாடசாலைகளிலும்  சமூகங்களிலும் தங்கள் பணிகளை திறம்படச் செய்வதற்குத் தேவையான அறிவு, திறன்கள், அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளுடன் வருங்கால மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை ஆயத்தப்படுத்துவதற்க்காக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஆகும். . இது ஒரு ஆசிரியரின் முழு வாழ்க்கையையும் உள்ளடக்கிய ஒரு தொடர்ச்சியான செயன் முறையாகும்.

ஆசிரியர் கல்வியின் முக்கிய கூறுகள்

ஆசிரியர் கல்வியின் வகைகள்

  • சேவைக்கு முந்தைய கல்வி: இது வருங்கால ஆசிரியர்களுக்கு வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன் வழங்கப்படும் ஆரம்பப் பயிற்சியாகும். இது பொதுவாக ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் நிகழ்கிறது மற்றும் கற்பிப்பதற்கான முறையான தகுதி மற்றும் சான்றிதழைப் பெற வழிவகுக்கிறது
  • சேவைக்கால கல்வி /தொடர் வாண்மைத்துவ  மேம்பாடு (CPD): இது பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கான தொடர்ச்சியான கல்வி மற்றும் பயிற்சியைக் குறிக்கிறது. இது அவர்களின் திறன்கள், அறிவைப் புதுப்பித்தல் மற்றும் புதிய முறைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 ஆசிரியர் கல்வியில் ஆய்வு ஏன் முக்கியமானது?

கற்பித்தலில் முன்னேற்றத்தையும் வாண்மைத்  திறனையும் இயக்கும் இயந்திரம் ஆய்வு ஆகும். ஆய்வுகள் ஆசிரியர்  பிரச்சினைகளுக்கு சான்றுமிக்க தீர்வுகளை வழங்குகிறது.

✔ஆசிரியர் கல்வி தொடர்பான கொள்கை மற்றும் நடைமுறையைத் தீர்மானிக்க உதவுகிறது: ஆசிரியர் கல்வி தொடர்பான கலைத்திட்டம் பாடத்திட்டம், மதிப்பீடு மற்றும் ஆசிரியர் தரநிலைகள் குறித்து முடிவெடுப்பவர்களுக்குத் தரவை வழங்குகிறது.

✔மாணவர் அடைவுகளை  மேம்படுத்துகிறது: சிறந்த மாணவர் கற்றல் மற்றும் ஈடுபாட்டிற்கு வழிவகுக்கும் கற்றல் கற்பித்தல் உத்திகளை அடையாளம் காட்டுகிறது.

✔ வாண்மைத்துவத்தை  மேம்படுத்துகிறது: மருத்துவம் அல்லது சட்டம் போன்ற போல கற்பித்தலையும்  ஒரு சான்று அடிப்படையிலான வாண்மையாக   நிறுவுகிறது.

✔ புதுமைகளை இயக்குகிறது: கல்வி சவால்களைத் தீர்க்க புதிய தொழில்நுட்பங்கள், கற்பித்தல் முறைகள் மற்றும் அணுகுமுறைகளை பரிசோதிக்கிறது.

ஆசிரியர் கல்வி தொடர்பான முக்கிய ஆய்வுப்  பகுதிகள்

உலகளவில், ஆசிரியர் கல்வியில் ஆய்வுகள் பல்வேறுபட்டவைகளாக  விளங்குகின்றன. ஆனால்அண்மைக்காலமாக பின்வரும் பகுதிகளில் ஆசியர் கல்வி தொடர்பான ஆய்வுகள் கவனத்தி ஈர்த்து வருகின்றன.  

  1. போதனா (கற்பித்தல்) உள்ளடக்க அறிவு (PCK) தொடர்பான ஆய்வுகள் (பாட உள்ளடக்கத்தையும், போதனை முறைகளையும் ஒருங்கிணைத்து மாணவர்களின் புரிதலை உயர்த்துவது எப்படி? PCK வளர்ச்சி ஆசிரியர் பயிற்சியில் எப்படி உள்வாங்கப்படுகிறது?  Practicum-இல் PCK மேம்பாட்டின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்.
  2. தொழில்நுட்பபோதனா (கற்பித்தல்) உள்ளடக்க அறிவு (TPCK/TPACK) தொடர்பான ஆய்வுகள்: (ஆசிரியர்கள் தொழில்நுட்பத்தை தமது  கற்பித்தலில்  அர்த்தமுள்ள வகையில் இணைக்க தேவையான திறன்கள். ஆன்லைன்/கலப்பு கற்றல் சூழலில் TPACK திறன்களின் மேம்பாடு. TPACK குறித்த பயிற்றுவிப்பு மாதிரிகள் (models) மற்றும் அவற்றின் பலன்கள்)
  3. சான்றுகள் சார்ந்த கல்வி (EBE) மற்றும் பயிற்றுவிப்பு உத்திகள் (Evidence-Based Education (EBE) and Instructional Strategies): இது தற்போது உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆய்வு துறை. இதில் கவனம் செலுத்தப்படும் முக்கிய உத்திகள்:
    • Active Learning – மாணவர் பங்கேற்பு அதிகரிக்கும் கற்றல் வடிவங்கள்
    •  Activating Prior Knowledge – முன் அறிவினை  செயற்படுத்துதல்
    • Data-informed Instruction – தகவல்/தரவு அடிப்படையில் கற்பித்தல்  போதனை முடிவுகள்
    • Formative Assessment – கற்றல் செயன்முறையின் தொடர்ச்சியான மதிப்பீடு
    • Inclusive Practices & Belongingness – மாணவர் உள்ளடக்கல் /சமத்துவம்
    •  Instructional Transparency – கற்பித்தல் வெளிப்படை. மாணவர்கள் ஏன், எவற்றை , எப்படிக் கற்றுக்கொள்வார்கள் என்பது குறித்து தெளிவான, திறந்த மற்றும் நேர்மையான தகவல்தொடர்பை கல்வியாளர்கள் வழங்கும் ஒரு சான்று  அடிப்படையிலான கற்பித்தல் அணுகுமுறை.
    •  Metacognition & Self-regulated Learning – பேரறிகை  மற்றும் சுயகற்றல்
    •  Peer Collaboration – சக பாடி ஒத்துழைப்பு
4. ஆசிரியர் வாண்மைசார்  அடையாளம் மற்றும் நல்வாழ்வு (Teacher Professional Identity and Well-being)

  • *     ஆசிரியர் அடையாள உருவாக்கத்தில் சமூக, கலாச்சார, நிறுவன காரணிகள்.
  • *     ஆசிரியர் சோர்வு, மன அழுத்தம், வேலை-வாழ்க்கை சமநிலை (Teacher burnout, stress, work–life balance).
  • *     நல்ல நல்வாழ்வு ஆசிரியர் செயற்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம்.
  • *     ஆசிரியர் தக்கவைப்பு (Teacher retention) மற்றும் வேலைத் திருப்தி பற்றிய ஆய்வுகள்.

 

5.     5. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அதனின் கல்விச் பயன்பாடு

  • *    Generative AI, Learning Analytics, AI-based assessments.
  • *     AI பயன்படுத்தும் போது ஏற்படும் நெறிமுறை (ethics), bias மற்றும் சமத்துவ ஏழுவினாக்கள்
  • *     AI-assisted teaching tools ஆசிரியர் கல்வியில் ஏற்படுத்தும் மாற்றங்கள்.
  • *     Pre-service ஆசிரியர்கள் AI literacy பெற வேண்டிய அவசியம். 

6.     6. டிஜிட்டல் கல்வி-முறை மற்றும் கலப்பு முறை (Hybrid)  கற்றல்

  • *     நிகழ்நிலை கற்பித்தல் திறன்கள் Online pedagogy
  • *      கலப்பு கற்றல் மாதிரிகள் Blended learning models (Flipped classroom, HyFlex).
  • *     நிகழ்நிலை கற்பித்தல் (Virtual practicum) மற்றும் அதன் சவால்கள்.
  • *     டிஜிட்டல் கற்பித்தல் தேர்ச்சிகள். Digital teaching competencies.

 

7.   7. உளவியல்-சமூக மற்றும் சுற்றுச்சூழல் கற்றல்  ஆராய்ச்சி Psycho-social and Learning Environment Research

  • *  தனிப்பயனாக்கப்பட்ட கற்றல்: ஒவ்வொரு மாணவரின் தனித்துவமான தேவைகள், பலங்கள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப கல்வியை வடிவமைத்தல் (Personalized Learning: Tailoring education to each student’s unique needs, strengths, and interests.)  
  • *     சமூக-மனவெழுச்சி  கற்றல் (SEL): வாழ்க்கை வெற்றிக்கு முக்கியமான சுய விழிப்புணர்வு, சுய முகாமை  மற்றும் ஆளிடை உறவுத் திறன்களை வளர்ப்பது.(Social-Emotional Learning (SEL): Developing the self-awareness, self-management, and relationship skills critical for life success)  
  • *     நரம்பியல் கல்வி: கற்றல் செயல்முறைகளை நன்கு புரிந்துகொள்ள கற்பித்தல் நடைமுறைகளில் நரம்பியல் நுண்ணறிவுகளை ஒருங்கிணைத்தல். Brain-based learning strategies. Memory, attention, cognitive load ஆகியவற்றின் தாக்கம் (Neuroeducation: Integrating neurological insights into teaching practices to better understand learning processes)  
  • *     நுண் கற்றல்: உள்ளடக்கத்தை சிறிய பகுதிகளாக அதிக  கவனம் செலுத்தும் வகையில் கற்பித்தல் (Microlearning: Gaining traction as a method for delivering content in short, focused bursts)  

இலங்கையின் ஆசிரியர் கல்வி ஆய்வுகள் தொடர்பான நோக்கு

இலங்கையில் ஆசிரியர் கல்வி தொடர்பான ஆய்வுகள்  கடந்த சில தசாப்தங்களாக முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இன்னும் பல சவால்களையும் மேம்பாட்டு தேவைகளையும் கொண்ட ஒரு துறையாகத் திகழ்கிறது. இந்தத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்  பெரும்பாலும் கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் (NIE), திறந்த பல்கலைக்கழகம் (OUSL) மற்றும் கொழும்பு பல்கலைக்கழக கல்விப் பீடங்கள், பிற பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வி பிரிவுகள்   மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் போன்ற நிறுவனக்ளின் மூலம் நடைபெறுகின்றன.

 முக்கிய ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனங்கள்


நிறுவனம்

முக்கிய ஆராய்ச்சி துறைகள் / செயல்பாடுகள்

பல்கலைக்கழகங்கள் (Education Faculties and Departments)

*     M.Ed., MAEd., MPhil, PhD நிலை ஆய்வுகள்

*     Peradeniya, Colombo, Jaffna, Eastern, , OUSL போன்றவை

*     அதிகமாக பண்பு நிலை  (Qualitative), கலப்பு (Mixed Methods), வகுப்பறை அடிப்படையிலான செயல்நிலை  ஆராய்ச்சி (Action Research)

தேசிய கல்வி நிறுவனம் (NIE)

*     பாடத்திட்டமாற்றம்

*     ஆசிரியர் பயிற்சி வடிவமைப்பு

*     பயிற்றுநர் திறன் மேம்பாடு

*     பாடசாலை மேம்பாட்டு திட்டங்கள் (SIP) தொடர்பான ஆய்வுகள்

கல்வி அமைச்சு – ஆய்வு பிரிவு

*     தேசிய மாணவர், ஆசிரியர் செயல்திறன் ஆய்வுகள்

*     கண்காணிப்பு & மீளாய்வு அறிக்கைகள்

திறந்த பல்கலைக்கழகம் (OUSL)

*     திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி (ODL)

*     ICT, LMS பயன்பாடு

*     Self-Regulated Learning

*     ஆசிரியர் தொழில்முறை மேம்பாடு ஆய்வுகள்

 

இலங்கையில் ஆசிரிய கல்வி சார்ந்து ஆய்வுகள்  மேற்கொள்ளப்படும் முக்கிய தலைப்புப் பகுதிகள்

1. ஆசிரியர் வாண்மைத்துவ  தேர்ச்சிகள்

TPACK readiness

Classroom management

Assessment literacy

Subject–pedagogy integration

 2. ஆசிரியர் கல்விக்கு ICT & Online Learning

LMS பயன்பாடு

Blended learning

E-assessment

Virtual classrooms

3. பயிற்சி கல்லூரி & டிப்ளோமா திட்டங்கள்

National Colleges of Education (NCOE)

Teaching practice quality

Practicum supervision challenges

 4.  கல்வித் தரம் மற்றும் மாணவர் கற்றல் பேறுகள் 

Pre-service vs in-service teacher competence

Teacher performance evaluation systems

 5. கொள்கை மற்றும் நிர்வாக ஆய்வுகள்

Teacher recruitment

Continuous professional development (CPD)

Teacher workload and retention

School-based teacher development


இலங்கையில் ஆசிரிய கல்வி ஆய்வுகள் தொடர்பாக நிலவும்  தற்போதைய சவால்கள்

கொள்கை-ஆராய்ச்சி இணைப்பு குறைவு: ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஆனால் அவை கொள்கை முடிவெடுப்பில் பயன்படுத்தப்படுவது குறைவு.

 தரமான கலப்பு  முறை ஆய்வுகள் மற்றும் பரிசோதனை ஆய்வுகள் குறைவாக உள்ளான் ( Mixed Methods & Experimental Studies). அதிகமான ஆய்வுகள் விவரண ஆய்வுகளாக  உள்ளன.

ஆசியர்களின் செயலாற்றுகை தொடர்பாக தேசிய அளவிலான தொடர்ச்சியான தரவுத்தொகுப்பு இல்லை (Lack of Teachers’ longitudinal performance data)

 கற்பித்தல் பயிற்சி  அடிப்பையிலான ஆய்வுகள் குறைவு Practicum-based research. கற்பித்தல் பயிற்சி மேற்பார்வை மற்றும் mentorship தொடர்பான ஆய்வுகள் குறைவாக உள்ளன. (Teaching practice supervision & mentorship related systematic studies)

ஆய்வுகளுக்கான  நிதி பற்றாக்குறை

முடிவுரை 

 
ஆசிரியர் கல்வியில் ஆய்வு என்பது தரமான கற்பித்தலையும் பயனுள்ள கற்றலையும் உருவாக்கும் முக்கிய அறிவியல் அடித்தளம் ஆகும். இது ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தி, வகுப்பறை நடைமுறைகளை வளப்படுத்தி, மாற்றமடைந்து வரும் கல்வி உலகின் தேவைகளை பூர்த்தி செய்ய வழிகாட்டுகிறது. தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் புதிய அறிவு உருவாகி, கல்வி அமைப்பின் மேம்பாடு நிலையானதாகிறது.



ஆசிரியர்களுக்கான தொழினுட்ப போதனாசார் உள்ளடக்க அறிவு (TPCK)


 ஆசிரியர்களுக்கான தொழினுட்ப போதனாசார் உள்ளடக்க அறிவு (TPCK)

கலாநிதி எப்.எம்.நவாஸ்தீன்
கல்விப்பீடம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

அறிமுகம்

“கற்பித்தல் என்பது உயர்வானதொரு வாண்மைத் தொழிலாகும். அது ஒரு தனி நபரின் குணவியல்புகள், திறமைகள் மற்றும் எதிர்காலத்தினை வடிவமைகின்றது. என்னை ஒரு சிறந்த ஆசிரியனாக மக்கள் நினைவில்வைத்துக் கொள்வாரெனில் அதுவே எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகும் - ஏ. பி. ஜே. அப்துல் கலாம்”

கற்பித்தலே ஆசிரியரின் மிகப் பிரதான பணியாகும். ஆசிரியரின் கற்பித்தல் வகிபங்கு பல்வேறு காலகட்டங்களினூடக நிலைமாற்றம் பெற்று வந்துள்ளது. பாடங்களை நெட்டுரு செய்து பாடவிடயங்களை  ஒப்புவிப்பது இன்று ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தற்காலத்தில் மாணவர்களை கற்றலுக்கு தயார்படுத்தும் வகையில் தமது கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளவே ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆசிரியர்கள் தம்மை பலவழிகளில் தயார் செய்து கொள்ள வேண்டியதாக உள்ளது. மாணவர்கள் மத்தியில் சிறந்த ஆசிரியராக தம்மை நிலைநிறுத்தி கொள்ளவதற்கு, கால மாற்றத்திற்கு ஏற்ப ஆசிரியர் பணியில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களை உள்வாங்கிக் கொள்வது மிக முக்கியமாக உள்ளது. இந்தவகையில் கற்றலை எளிதாக்குதலே இன்று ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான பணியாக உள்ளது. இதற்காக கற்றல் கற்பித்தல் செயன்முறையில் பல்வேறு அறிவு, திறன்களை ஒன்றிணைக்க வேண்டிய தேவை உடையவர்களாக உள்ளனர். அவற்றில் கல்வித் தொழினுட்பமும் ஒன்றாகும்.
ஆசிரியர்கள் தமது கற்றல் கற்பித்தல் செயன்முறையில் ஈடுபடும் போது அவர்கள்  அறிந்திருக்க வேண்டிய பல விடயங்கள் காணப்படுகின்றன. தொழினுட்பத்தினை ஒன்றிணைக்கும் போது அவர்கள் கொண்டிருக்க வேண்டிய முக்கியமானதோர் அறிவாகக் கருதப்படும் TPCK என ஆங்கிலத்தில் சுருக்கமாக அறியப்படும் தொழினுட்ப போதனாசார் உள்ளடக்க அறிவு தொடர்பாக இக்கட்டுரை விளக்குகின்றது.
ஆசிரியர்கள் தமது கற்பித்தல் தொடர்பாக சிக்கலானதும், பன்முகத்தன்மை கொண்டதும், வரையறுக்கப்பட்ட அறிவினை கொண்டுள்ளனர். இதில் பின்வரும் அறிவுகள் மிக முக்கியமாக ஆசிரியர்கள் கொண்டிருக்க தேவையுடையவர்களாக உள்ளனர்:

·         உள்ளடக்க அறிவு – Content Knowledge (CK)
·         போதனா அறிவு – Pedagogical Knowledge (PK)
·         தொழினுட்ப அறிவு – Technological Knowledge (TK)

மேற்கூறப்பட்ட மூன்று வகையான அறிவுகளையும் இணைத்த வகையில் கொண்டிருக்க வேண்டிய அறிவே TPCK எனப்படும் தொழினுட்ப போதனாசார் உள்ளடக்க அறிவு ஆகும். இவ்வறிவுகள் தனித்தும், ஒன்றோடு ஒன்று இணைந்தும் தொழிற்படுவதாக காணப்படும். உள்ளடக்க அறிவு (CK), போதனா அறிவு (PK), தொழினுட்ப அறிவு (TK) என்பன ஒன்றோடு ஒன்று இடைவினைப்படும் போது பின்வரும் புதிய அறிவுகள் தோற்றம் பெறுகின்றன:
·         போதனா உள்ளடக்க அறிவு (PCK)
·         தொழினுட்ப உள்ளடக்க அறிவு (TPK)
·         தொழினுட்ப போதனா அறிவு  (TCK)
·         தொழினுட்ப போதனா உள்ளடக்க அறிவு (TPCK)
இந்த அறிவுகளின் இடையே ஏற்படும் இடைத் தொடர்புகளும் அவற்றினால் உருவாக்கம் பெறும் அறிவுகளையும்  உரு1 விளக்கிக் காட்டுகிறது


உரு 1. தொழினுட்ப போதனா உள்ளடக்க அறிவு
1. தொழினுட்ப அறிவு: ஆசிரியர்கள் தமது கற்பித்தல் செயன்முறையினை வினைத்திறனை அதிகரிக்கவும், தாம் எடுத்து கூற விரும்பும் செய்திகளை இலகுவாக மாணவர்களிடம் கொண்டு செல்ல பல்வேறு கற்பித்தல்  நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டி உள்ளனர். இதனை கற்பித்தல் அல்லது கல்வி தொழினுட்பம் என்கிறோம். ஆசிரியர்கள் வகுப்பறையில் காணப்படும் கரும்பலகை, வெண்கட்டி, பாடநூல் போன்ற ஆகத்குறைந்த  மட்டத்திலான கற்பித்தல் தொழினுட்பங்கள் தொட்டு, இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயன்பாட்டில் உள்ள இணையம், டிஜிட்டல் காணொளிகள்,  ஊடாடும் வெள்ளைப் பலகைகள், பல்வேறு மென் பொருட்கள், திறன் செல்லிடத் தொலைபேசியில் பயன்படுத்தக் கூடிய பல்வேறு Apps எனப்படும் செயலிகள் வரையிலான நவீன தொழினுட்பங்கள் பற்றிய அறிவினையே தொழினுட்ப அறிவு என இங்கு அடையாளப்படுத்தப்படுகிறது. ஆசிரியர்கள் , தமது கற்றல் கற்பித்தலில் சிறந்து விளங்க இந்த தொழினுட்ப அறிவினைப் பெற்றவர்களாவும், பொருத்தமான சந்தர்ப்பங்களில் அவற்றைப் பிரயோகிக்கும் ஆற்றல்களை பெற்றிருப்பதும் முக்கியமாகின்றது. ஆனால் விரைந்து மாறி வரும் உலகில் வகுப்பறையில் பயன்படுத்தக் கூடிய இக்கற்பித்தல் தொழினுட்பங்களும் விரைந்து மாற்றம் கண்டு வருகின்றது. இன்று அதிகமாக திறன் வகுப்பறைகள்  நாட்டின் நாலா புறங்களிலும் அமைக்கப்பட்டு வருவதும், ஆசிரியர்கள் தமது கற்றல் -கற்பித்தல் நடவடிக்கைகளுக்கான நவீன தொழினுட்பங்கள் பற்றிய அறிவும், அவற்றை கையாளும் திறன்களையும் பெற்றிருப்பது காலத்தின் தேவையாக உள்ளது.

2. உள்ளடக்க அறிவு: ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் பாடத்தில் அல்லது பாடங்களில் போதிய அறிவினைப் பெற்று இருப்பது உள்ளடக்க அறிவு என கூறப்படுகிறது. ஆசிரியர் தாம் கற்பிக்கப் போகும் பாட அலகில் உள்ள மையக் கருத்துக்கள், பல்வேறு எண்ணக்கருக்கள், கோட்பாடுகள், குறித்த பாட அலகுடன் தொடர்பான பல்வேறு செயன்முறைகள் பற்றி   போதிய அறிவினை கொண்டிராமல் சிறந்த முறையில் கற்பித்தலை மேற்கொள்ள முடியாது. இதன் காரணமாவே, ஆசிரியர் தொடர்பான முன் சேவை பயிற்சிகளில் உள்ளடக்க அறிவுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. போதிய உள்ளடக்க அறிவு இல்லாத ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் பாடங்களினை தவறான எண்ணக்கரு விளக்கம் ஏற்படும் வகையில் கற்பித்து விடும் அபாயம் உள்ளது.

3. போதனா அறிவு (PK): ஆசிரியர்கள் தமது வாண்மையில் சிறந்து விளங்க போதிய போதனா அறிவினையும் பெற்றவர்களாவும் இருத்தல் வேண்டுமாகிறது. பல்வேறு கற்றல் கற்பித்தல் முறைகள், வகுப்பறை முகாமைத்துவம், கணிப்பீடும் மதிப்பீடும், பாடவேளை திட்டமிடல், மாணவர் எவ்வாறு கற்கின்றனர் என்பது போன்ற இன்னோரன்ன விடயங்களில் அறிவு கொண்டிருப்பது போதனா அறிவு  எனப்படுகிறது.

4. போதனா உள்ளடக்க அறிவு: (PCK): போதனா அறிவும், உள்ளடக்க அறிவும் ஒருங்கிணையும் போது உருவாக்கம் பெறுகின்ற அறிவே போதனா உள்ளடக்க அறிவாகும். ஆசிரியர் தான் கற்பிக்க போகும் பாட விடயத்தை கற்பித்தல்  செயலொழுங்குடன் இணைக்க போதனா உள்ளடக்க அறிவு அவசியமாகின்றது. ஒருவர் கற்பிக்கப் போகும் பாடஉள்ளடக்கங்களில் மாத்திரம் போதிய அறிவை பெற்றிருப்பது போதாது. அவற்றை, எங்கே, எப்போது, எப்படி, எந்தளவு, யாருக்கு கற்பிக்க வேண்டும் என்ற அறிவும் இருத்தல் அவசியமாகின்றது. இந்த PCK எனப்படும் எண்ணக்கருவை சுல்மன் (Shulman, 1986) என்பவரே அறிமுகப்படுத்தினார். சிறந்த போதனா அறிவையும் உள்ளடக்க அறிவினையும் கொண்டுள்ள ஆசிரியர்கள் தமது கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் சிறந்து விளங்குகின்றனர்.

5. தொழினுட்ப உள்ளடக்க அறிவு: (TCK): பாட விடயத்தில் போதிய விளக்கங்களை கொண்டுள்ள ஒருவர், அதனை கற்பிப்பதற்கு தொழினுட்பத்தை நாட வேண்டியுள்ளது. ஏனெனனில், கற்பித்தல் எனபது ஒரு வகையில் ஒரு தொடர்பாடல் செயன்முயாகும். தொடர்பாடல் செயன்முறையில் செய்தி அனுப்புவர் மற்றும் செய்தியை பெறுபவர் என இரு தரப்பினர் காணப்படுவர். இங்கு செய்தியை வினைத்திறன் மிக்க வகையில் அனுப்புவதற்கு பொருத்தமான தொடர்பாடல் ஊடகம் தேவையாகின்றது. தொடர்பாடலினை ஒந்த செயன்முறையாக கற்றல் கற்பித்தல் செயன்முறையும் காணப்படுகின்றது. வகுப்பறையில் ஆசிரியர் தகவல் அனுப்புவராக காணப்பட மாணவர்கள் தகவல்களை பெறுபவர்களாக காணப்படுகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தனது பாட விடயம் என்னும் தகவலை சிறந்த முறையில் மாணவர்களிடம் வழங்க பல்வேறு தொழினுட்ப சாதனங்களை கற்பித்தல் ஊடகங்களாக பயன்படுத்த வேண்டி இருக்கும். எனே, பாட விடயம், கற்கும் மாணவர்களின் பண்புகள், வகுப்பறை சூழமைவுகள் எனப் பலவற்றை கவனத்தில் கொண்டு தொழினுட்ப தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும். தனது பாடஅலகினை பொருத்தமான தொழினுட்பத்துடன் இணைக்கும் அறிவு தொழினுட்ப உள்ளடக்க அறிவு எனப்படுகின்றது.

6. தொழினுட்ப போதனாசார் அறிவு (TPK): தொழினுட்ப உள்ளடக்க அறிவினை ஆசிரியர்கள் கொண்டிருப்பது மட்டுமன்றி தொழினுட்ப போதனா சார் அறிவினையும் கொண்டிருப்பது அவசியமாகும். பல்வேறு தொழினுட்பங்களை எவ்வாறு கற்பித்தலில் பயன்படுத்த முடியும் என்ற அறிவே இதுவாகும். வெறுமனே கற்பித்தலில் பயன்படுத்தப்படும் பல்வேறு தொழினுட்பங்கள் பற்றிய அறிவினை மாத்திரம் கொண்டிராமல் அவற்றை சிறந்த முறையில் கையாளும் திறங்களையும் இணைத்தே இந்த அறிவு நோக்கப்படுகிறது.

7.தொழினுட்ப போதனாசார் உள்ளடக்க அறிவு (TPCK): மேலே எடுத்துக்கூறப்பட்ட உள்ளடக்க அறிவு, போதனா அறிவு, தொழினுட்ப அறிவு, போதனா உள்ளடக்க அறிவு, தொழினுட்ப உள்ளடக்க அறிவு, தொழினுட்ப போதனா அறிவு ஆகிய ஆறு வகையான அறிவுகளையும் ஒன்றிணைத்த வகையில், ஆசிரியர்கள் தற்காலத்தில் அவசியம் கொண்டிருக்கவேண்டிய அறிவாக தொழினுட்ப போதனாசார் உள்ளடக்க அறிவு கருத்தில் கொள்ளப்படுகிறது. தற்காலத்தில் ஆசிரியர்களின் வகிபங்கு முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. தற்போது இருபத்தியோராம் நூற்றாண்டிற்கு தேவையான சமூக மனவெழுச்சி திறன்களை மாணவர்களிடம் விருத்தி செய்ய வேண்டிய நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர். அதேவளை, இன்றைய மாணவர்களின் கற்றல் தேவைகளும், கற்றல் மீதான விருப்புக்களிலும் பெரிய மாற்றங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இத்தைய பின்னணியில்  கற்றல் கற்பித்தல் என்பதுமுன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு சவால்மிக்க விடயமாகவே உள்ளது.   ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலில் இன்னமும் மரபு ரீதியான வழிவகைகளை பின்பற்றாது,மாறி வரும் தேவைகளை விளங்கிக்கொண்டவர்களாக புதிய கற்பித்தல் பணிகளில் விரைவாக வளர்ந்துவரும் தொழினுட்பங்களையும் ஒருங்கிணைத்து கற்பிக்க வேண்டியவர்களாக உள்ளனர். இவ்வாறு நவீன தொழினுட்பங்களை கற்றல் கற்பித்தலில் ஒன்றிணைக்கும் வகையில் வலியுறுத்தப்படும் ஒரு விடயமே இந்த TPCK அல்லது TPACK எனும் தொழினுட்ப போதனாசார் உள்ளடக்க அறிவாகும். ஏற்கனவே கூறியது போல் சுல்மன் என்பவரது போதனா சார் உள்ளடக்க அறிவு எனும் கோட்பாட்டு எண்ணக்கருவில்  இருந்து இந்த தொழினுட்ப போதனாசார் உள்ளடக்க அறிவு உருவாக்கம் பெற்றுள்ளது. கல்வியியல் ஆய்வுகளில் இவற்றை  மாதிரி சட்டகங்களாகக் அல்லது மாதிரியுருக்களாக  கொண்டு  பல ஆய்வுகளும் வெளிவந்தமுள்ளன.

முடிவுரை 
தற்காலத்தில், எமது பாடசாலை வகுப்பறைகள் படிப்படியாக திறன் வகுப்பறைகளாக மாறி வருகின்றன. எமது நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து வளர்ச்சிபெற்ற நாடுகளில் வாழும் மக்கள், தாம் கல்வி பயின்ற பாடசாலைகளின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொள்கின்றனர். இதன் காரணமாக, பல பாடசாலைகளின் வகுப்பறைகள் நவீன பல  தொழினுட்ப சாதனங்களினை கொண்டதாக மாறியுள்ளன. அதேபோன்று அரசும். படிப்படியாக திறன்பாடசாலைகளை நோக்கி நகர்கின்றது. அதேவளை மாணவர்களின் கற்றல் பாணிகளிலும் மாற்றங்கள் பல நிகழ்ந்தேறுகின்றன. முன்னர் புத்தக வாசிப்பில் ஆர்வம் காட்டிய மாணவர்கள் நவீன தொழினுட்ப சாதனங்களின் பால் வெகுவாக ஈர்க்கப்பட்டு உள்ளனர். இச்சூழமைவில் ஆசிரியர்கள் தம் கற்றல் கற்பித்தல் செயன்முறையில் நவீன தொழினுட்ப சாதனங்களை ஒன்றிணைக்க வேண்டிய தேவையில் உள்ளனர். எனவே மேற்கூறிய ஆறு வகையான அறிவுகளையும் ஒன்றிணைத்த வகையில் TPCK எனும் தொழினுட்ப போதனாசார் உள்ளடக்க அறிவினை தம்மிடம் கொண்டிருப்பது காலத்தின் தேவையாக உள்ளது.


உசாத்துணை

Kleickmann, Thilo & Richter, Dirk & Kunter, Mareike & Elsner, Juergen &
Besser, Michael & Krauss, Stefan & Baumert, Jürgen. (2012). Teachers'
Content Knowledge and Pedagogical Content Knowledge: The Role of
Structural Differences in Teacher Education. Journal of Teacher Education.
64. 90-106. 10.1177/0022487112460398.
Halim, L., & Meraah, S. M. (2002). Science trainee teachers’ pedagogical content knowledge and
its influence on physics teaching. Research in Science & Technological Education, 20,
215-225. doi:10.1080/0263514022000030462
Santrock (2018) Educational Psychology: Theory and Application to Fitness and
Performance, Sixth Edition, McGraw-Hill Education
Shulman, L. S. (1986). Those who understand: Knowledge growth in teaching. Educational
Researcher, 15(2), 4-14. doi:10.3102/0013189X015002004
Shulman, L. S. (1987). Knowledge and teaching: Foundations of the new reform. Harvard
Educational Review, 57(1), 1-22.

குறிப்பு: வீரகேசரி குழும நாளிதழான விடிவெள்ளி யில் 19.04,2019 ஆம் திகதி பக்கம் 11 இல் வெளிவந்த எனது கட்டுரையாகும்   

கல்வியியல் ஆய்வு அடிப்படைகள்

  கல்வியியல் ஆய்வின் அடிப்படைகள்: வரைவிலக்கணம், தன்மைகள் , ஆய்வு செயன்முறை மற்றும் ஆய்வு அணுகுமுறைகள் Foundations of Educational Research: D...