Professional
Development for Teachers
...................................................................................
...................................................................................
19/12/2015 அன்று Insight Institute of Management & Technology யினால் ஒழுங்குசெய்யப்பட்ட ஆசிரியர் வலுவூட்டல் செயலமர்வில் என்னால் நிகழ்த்தப்பட்ட விரிவுரை. இடம்: ஜாமியா நாளிமியவின் ADRT
நேரம்:9.30 - 10.30
............................................................................................................................
1.0 அறிமுகம்
(Introduction)
இந்த அமர்வினை மேற்கண்ட கூற்றுடன் ஆரம்பிக்க விரும்புகிறேன். சிறந்த ஆசிரியர்கள் எப்போதும்
கற்பிக்கும் போது எதிர்காலத்தை தொடுவதாகவே உணர்வார்கள். ஏனெனில் நீங்கள்
கற்பிக்கும் பிள்ளைகளே எந்தவொரு சமூகத்தினதும் எதிர்காலமாக திகழ்கின்றனர்.
இதனால்தான் ஒரு சமூகத்தின்/பிரதேசத்தின்/நாட்டின் எதிர்காலம் அல்லது தலைவிதி ஒவ்வொரு
வகுப்பறைகளிலும் தீர்மானிக்கப்படுவதாகக் கருதுகின்றனர். ஆசிரியர் பணியானது ஒரு
தொண்டாகக் காணப்படுவதுடன் ஒரு வாண்மைத் (உயர்) தொழிலாகவும் விளங்குகிறது. பிள்ளைகள்
தமது நேரத்தினை பெற்றோருடனிருப்பதை விடவும் அதிக நேரத்தை ஆசிரியர்களுடன் செலவிடுகின்றனர்.
இதனால்தான் ஆசிரியர்களை இரண்டாவது
பெற்றோர் என்கிறோம். இத்தகைய ஆசிரியர்களிடம் மகத்தான பொறுப்பு
ஒப்படைக்கப்படுள்ளது: பிள்ளைகளை நற்பிரஜைகளாகவும் சமூகத்துக்கு பயன்மிக்கவர்களாகவும்
மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் ஆசிரியர்களைச் சார்ந்துள்ளது. இந்தியா இலங்கை
போன்ற நாடுகளில் ஆசிரியர்களை குரு என்று அழைப்பதுண்டு. குரு என்ற பதத்தின் கருத்து
(GU = Darkness, RU = Light) அறியாமை எனும் இருள் அகற்றி மாணவர்
வாழ்வில் ஒளி ஏற்றுபவர்கள் என்பதாகும் (A person who takes you out of the
darkness in order to see light).
உங்கள் வளர்ச்சிக்கு எதோ ஒரு விதத்தில் காரணமானவர்களை
அல்லது நீங்கள் இந்தளவிற்கு உயர்வு பெற்றமைக்கு
உதவிய நபர்களைப் ஒரு கணம் கண்மூடி சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாக ஒரு
சில ஆசிரியர்கள் உங்கள் மனக்கண் முன் வந்து போவதைக் காண்பீர்கள். ஓர் ஆசிரியர்
அவர் கூறிய வார்த்தைக்காக, அவருடைய பண்புக்காக, நடத்தைக்காக, கற்றுத்தந்த முறைக்காக
நீங்கள் உங்கள் வாழ்வில் பல நேரங்களில் நினைத்துப் பார்ப்பதுண்டு,இத்தகைய ஆசிரியர்களையே
சிறந்த நல் ஆசான்கள் எனப் போற்றுகிறோம். நாம் கற்பிக்கும் மாணவர்களும் எம்மை சிறந்த
ஆசிரியர்களாக அல்லது நல்லாசான்களாக மதிக்க வேண்டுமாயின் நாமும் எம்மிடைய பல
திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமாகிறது. இதற்கு ஆசிரியர்கள் தமது வாண்மையினை
விருத்தி செய்து கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
2.0 வாண்மை விருத்தி
என்றால் என்ன? (What is Professional Development?)
- மாணவர்களுக்கான கல்விசார் அடைவு மட்டங்களை (பெறுபேறுகளை) வெற்றிகரமான வகையில் உருவாக்கத் தேவைப்படுகின்ற திறன்கள் , தேர்ச்சிகளை மேம்படுத்திக் கொள்ளும் செயன்முறையே ஆசிரிய வாண்மை விருத்தி எனப்படும் (Hassesl-1999). (The process of improving staff skills and competencies needed to produce outstanding educational results for students- (Hassesl 1999)).
- ஆசிரியர்கள் தாம் மாற்றல் முகவர்
எனும் வகையில், தமது கடமை பொறுப்புக்களை மீள் சிந்தனை செய்யவும்,
புதுப்பிக்கவும், நிறைவேற்றவும் உதவுகின்ற செயன்முறையே வாண்மை
விருத்தியாகும். இதன் மூலம் மாணவர்களுக்கு கற்பிப்பதற்குத் தேவையான அறிவு,
திறன்கள் ஆகியவற்றை ஆசிரியர்கள் பெற்றுக் கொள்கின்றனர் (Day
1999)
3.0 வாண்மை விருத்தி
ஏன் ஆசிரியர்களுக்கு தேவை? (Why do
teachers require professional development?)
- மேற்கண்ட வரைவிலக்கணங்கள் வாண்மை
விருத்தி ஏன் ஆசிரியர்களுக்கு தேவை
என்பதை தெளிவாக உணர்த்தி நிற்கின்றன.
- இன்றைய கல்வித் தேவைகளை நிறைவேற்றிக்
கொள்ள ஆசிரியர்களின் வாண்மை விருத்தி அவசியமாக உள்ளது.
- மாணவர்களுக்கு சிறந்த முறையில்
கற்பிப்பதற்குத் தேவையான திறன்களையும் தேர்ச்சிகளையும் வளர்த்துக்கொள்ள
(விரிவாக்கிக் கொள்ள) வாண்மை விருத்தி தேவையாகின்றது.
- ஆசிரியர்கள் தமது கற்பித்தல் தரத்தினை பேணிக் கொள்ள
- மிக விரைவாக மாறி வரும் உலகிற்கு
ஏற்ப தம்மை இற்றைப்படுத்திக் கொள்ள
- ஆசிரியர்களின் வாண்மை
விருத்திக்கும் மாணவர்களது கற்றலுக்கும் நேர இடைத்தொடர்பு இருப்பதாக ஆய்வுகள்
சுட்டிக் காட்டுகின்றன,.
- உரிய வேளைகளில் தமக்கான பதவி
உயர்வுகளையும் சம்பள படிகளையும் பெற்றுக் கொள்ள
4.0 ஆசிரியர் வாண்மை
விருத்தி வகைகள்
வாண்மை விருத்தி
இரு வகைப்படுகின்றன:
அ. முறைசார் வாண்மை
விருத்தி (Formal Professional Development)
ஆ. முறைசாரா
வாண்மை விருத்தி (Informal Professional Development)
ஒரு நாட்டின் கல்வியுடன் நேரடியாகத் தொடர்புடைய அமைச்சுக்கள், நிறுவனங்கள்,
பல்கலைக்கழகங்கள், அரசு சார அமைப்புக்கள் போன்றவற்றினால் ஒழுங்கு செய்யப்படும்
கருத்தரங்குகள், மாநாடுகள், செயலமர்வுகள்
போன்றவற்றில் பங்குகொள்வது, பல்வேறு கற்கை நெறிகளைப் பயில்வது முறைசார் வாண்மை
விருத்தி ஆகும்.
மாறாக, எமது வாண்மையுடன் தொடர்புபட்ட வகையில் தனிப்பட்ட
ரீதியாக நாம் மேற்கொள்ளும் வாசிப்புக்கள் (readings), எமது சகபாடிகளுடன், அனுபவமிக்கவர்களுடன்
கலந்துரையாடல்களில் ஈடுபடல், அவர்களது கற்பித்தல் முறைகளை அவதானித்தல் போன்றனவும் எம்மில்
வாண்மை விருத்தியை ஏற்படுத்தும். இது முறைசாரா வாண்மை விருத்தி எனப்படும்.
முறைசார் வாண்மை விருத்திகளை அவற்றின் கால அடிப்படையில்
குறுங்கால, நீண்டகாலப் பயிற்சிகள் என வகைப்படுத்தலாம்.
4.1 குறுங்காலப்
பயிற்சிகள்
கல்வியமைச்சு,தேசிய கல்வி நிறுவகம், மாகாண கல்வித் திணைக்களம்,
வலயக் கல்விப் பணிமனை, கோட்டக் கல்விக் காரியாலயம் என்பன ஆசிரியர்களின்
திறன்கள், தேர்ச்சிகளை மேம்படுதிகொள்ளும் வகையில் ஒழுங்கு செய்யும் சேவைக் காலப்
பயிற்சிகள் இதனுள் அடங்கும்.இவை தவிர பல்கலைக்கழக கல்விப் பீடங்கள், அரச சார
தொண்டு நிறுவனங்கள் நடாத்தும் குறுங்கால பயிற்சிகளும் இதனுள் அடங்கும்.
4.2 நீண்ட காலப்
பயிற்சிகள்
ஆசிரியர்களுக்குத் தேவையான தேர்ச்சிகளையும் திறன்களையும் மேம்படுத்திக்
கொள்ள நாட்டில் உள்ள பல்கலைகழகங்கள், தேசிய கல்வி நிறுவகம் என்பன பல்வேறு
சான்றிதழ், டிப்ளோமா, பட்டப்படிப்பு, பட்டப் பின் கல்வி டிப்ளோமா, கல்வி முதுமாணி,
தத்துவமாணி,கலாநிதிப் பாடநெறிகளை ஒழுங்கு செய்து நடாத்துகின்றன. இவை நீண்ட காலப்
பயற்சிகள் எனலாம்.
5.0 இலங்கையில் வாண்மை
விருத்திக்கான வாய்ப்புக்கள்? (Opportunities of
professional development for teachers in Sri Lanka)
இலங்கையில் உள்ள அனைத்துப் பாடநெறிகளும் தற்போது ஓர்
ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரப்ப்டுள்ளன. கற்றலில் ஈடுபடும் ஒருவர் மட்டம் 12 வரை செல்லும் வகையில் மாதிரிச் சட்டகமொன்று உருவாக்கப்
பட்டுள்ளது. இங்கு தரப்படுள்ள படத்தை நன்கு கவனியுங்கள். நீங்கள் தற்போதுள்ள
மட்டம் என்ன? அதன் பின்னர் செல்ல முடியுமான மட்டங்கள் எவை? என்பதை உங்களுக்கு புரிந்து
கொள்ளக் கூடியதாக இருக்கும்.
5.1 இலங்கையின்
ஆசிரியர் தகைமைகள்
ஆசிரியர் தொகை 2010
|
212683
ஆண்கள்
= 63123
பெண்கள் = 163860
|
ஆசிரியர் தொகை 2014
|
246230
|
Grauates
|
74218
|
Trained
|
127382
|
Untrained
(absorbed)
|
7322
|
Untrained (not
absorbed)
|
2659
|
Phd holder
|
11
|
Mphil
|
95
|
M.Ed
|
1662
|
M.A in Edu
|
960
|
M.Sc in Edu Mgt
|
121
|
PGDE
|
47224
|
PGD in Mgt
|
1482
|
PGD in English
|
770
|
Dip in English
|
739
|
Teacher
training certificate (In-Service)
|
47402
|
Teacher
training certificate (Distance)
|
40503
|
National
Diploma in Teaching
|
40562
|
Not professionally
qualified
|
40344
|
6.0 ஆசிரியர்களுக்கு
வாண்மை விருத்திக்கான உள்நாட்டு வாய்ப்புக்கள்.
இலங்கையில் தேசிய
கல்வி நிறுவகம், கொழும்பு, பேராதனை, திறந்த, யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்கள்
தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல கல்வியுடன் தொடர்பான் குறுங்கால, நீண்ட கால கற்கைகளை
வழங்குகின்றன.
தேசிய கல்வி
நிறுவகம் (http://nie.lk/)
தேசிய கல்வி நிருவகத்தில் பின்வரும் கற்கை நெறிகள் உள்ளன:
- Master of Education
- Master of Education Management
- Post Graduate Diploma in Education (Sinhala/ Tamil)
- Post Graduate Diploma in Education Management
- Post Graduate Diploma in School Counselling
- Bachelor of Education Degree
- Diploma in Teaching English as a Second Language
- Diploma in School Management
- Diploma in School Management - for overseas students
(on request) - Diploma in Special Education
- Diploma in Sign Language
- Additional Language Improvement Course
- Certificate Course for Pre-School Teachers of Hearing Impaired Children
- Diploma in Early Childhood and Primary Education
- Diploma in Teaching Japanese as a foreign language
- Short Term Thematic Workshops in Education Management
திறந்த பல்கலைக்கழகமானது ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் முன்னிலை வகிக்கிறது. நாடாளாவிய ரீதியில், கொண்டுள்ள வலையமைப்புக்கள் இதற்கு நன்கு உதவுகின்றது. இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் குறிப்பாக கல்விப்பீடத்தில் பின்வரும் கற்கை நெறிகள் காணப்படுகின்றன. இவை தவிர இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான பீடத்தில் B.A. E.L.T என்ற பாடநெறியும் , PGIE யிலும் சில கற்கைகள் உள்ளன.
கொழும்பு பல்கலைக்கழகம்
7.0 ஆசிரியர் பதவி உயர்வு
ஆசிரியர் தொழிலைப் பெற்றவுடன் தொழிலொன்று கிடைத்து விட்டது என்று வாளாவிருந்து விடாமல் தமது தொழிற்தமைமைகளை தொடர்ச்சியாக விருத்தி செய்து கொள்வது இன்றியமையாததாகும்.ஆசிரியர் தொழிலில் உள்ள பதவி உயர்வுப் படிநிலைகள் கீழே தரப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவர் தனது கல்வி மற்றும் வாண்மைதகுதிகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் பின்வரும் ஆசிரிய சேவை, அதிபர் சேவை , கல்வி நிருவாக சேவை மட்டுமன்றி கல்வியியலாளர் சேவைகளில் தம்மை இணைத்துக்கொள்ள அல்லது உண்ணாட்டு , வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர்களாக இணைந்து கொள்ள வாய்ப்புக்களைப் பெறுவர்.
ஆசிரியர் தொழிலைப் பெற்றவுடன் தொழிலொன்று கிடைத்து விட்டது என்று வாளாவிருந்து விடாமல் தமது தொழிற்தமைமைகளை தொடர்ச்சியாக விருத்தி செய்து கொள்வது இன்றியமையாததாகும்.ஆசிரியர் தொழிலில் உள்ள பதவி உயர்வுப் படிநிலைகள் கீழே தரப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவர் தனது கல்வி மற்றும் வாண்மைதகுதிகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் பின்வரும் ஆசிரிய சேவை, அதிபர் சேவை , கல்வி நிருவாக சேவை மட்டுமன்றி கல்வியியலாளர் சேவைகளில் தம்மை இணைத்துக்கொள்ள அல்லது உண்ணாட்டு , வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர்களாக இணைந்து கொள்ள வாய்ப்புக்களைப் பெறுவர்.
இலங்கயைப் பொறுத்தவரையில் ஆசிரியத் தொழிலில்
ஆண்களை விட பெண்களின் தொகையே அதிகமாகக் காணப்படுகிறது (ஆண்கள் = 63123 பெண்கள் = 163860). தமிழ் மொழி ஆசிரியர்களிலும் பெண்களின் பங்களிப்பே அதிகமாக
உள்ளது. இது பதவி உயர்வில் செல்லுவதில் ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது
எனலாம்.ஆசிரிய சேவையில் பின்வரும் வகையில்
பதவி உயர்வு கட்டமைப்பு தற்போது அறிமுகப்படுத்தப்படுள்ளது (23/10/2014 அதி விசேட
வர்த்தமானி).
மூலம்: அன்பு ஜவகர்சா
·
மேற்கண்ட பதவி உயர்வு விதிமுறைகள் 2008/07/01
இலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.
·
இதற்கான நிலுவைகள்
2011/01/01 தொடக்கம் வழங்கப்படும்.
·
2017/10/22 தொடக்கம்
இப்பதவி உயர்வுகளுக்காக வினைத்திறன் தடைதாண்டல் பரிட்சைகள் அறிமுகம் செய்யப்படும்.
·
மூன்று
வினைத்திறன் பரீட்சைகள் உள்ளன.
·
1 ஆம் வினைத்திறன்
பரிட்சை, 2 ஆம் வினைத்திறன் பரிட்சை , 3ஆம் வினைத்திறன் பரிட்சைகள்.
·
எனினும் 2017/10/22
ஆம் திகதி வரை பதவி உயர்விற்கு இந்த முதலாம் வினைத்திறன் தடை தாண்டல் பரிட்சையில்
சித்தியடைவது கட்டாயமன்று. விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
·
எனினும்,
இக்காலத்துக்குள் பதவி உயர்வு பெற்றோர் 2 ஆம் வகுப்பு II ஆம் தரத்தில் நியமனம்
கிடைத்த மூன்று வருட காலப் பகுதிக்குள் முதலாம் வினைத்திறன் தடை தாண்டல்
பரிட்சையில் சித்தியடைவதுடன் மேலதிகமாக 2 ஆம் வகுப்பு II ஆம் தரத்திற்கு
உயர்த்தபட்ட நாளில் இருந்து நான்கு வருடத்துக்குள் 2 ஆம் வினைத்திறன் பரிட்சையில் சித்தி அடைவது
கட்டயாமாகும்.
2017/10/23 ம் திகதிக்குப் பின்னர் ஆசிரிய
சேவையின் பதவி உயர்வுக்கு உழைத்துக் கொள்ள வேண்டியவை
உள்ள வகுப்பு
|
பதவி உயர்வு
|
ஆசிரியர் வகை
|
சேவைக்காலம்
|
வினைத்திறன் தடைதாண்டல்
|
3-1 ஆ
|
2-11 தரம்
உயர்த்தல்
|
trained
|
05
|
1 வது வினைத்திறன் பரிட்சை
|
3-1 அ
|
2-11 தரம்
உயர்த்தல்
|
graduate
|
03
|
1 வது வினைத்திறன் பரிட்சை
|
2-11
|
2-1 தரம்
உயர்த்தல்
|
trained
graduate
|
09
|
2 வது வினைத்திறன் பரிட்சை
|
2-11
|
2-1 தரம்
உயர்த்தல்
|
gradaute +
training/PGDE
|
07
|
2 வது வினைத்திறன் பரிட்சை
|
2-11
|
2-1 தரம்
உயர்த்தல்
|
Graduate+PGDE+M.Ed
|
05
|
2 வது வினைத்திறன் பரிட்சை
|
2-1
|
1 தரம்
உயர்த்தல்
|
ALL
|
06
|
3 வது வினைத்திறன் பரிட்சை
|
தகவல்: அன்பு ஜவகர்ஷா
·
வினைத்திறன்
தடைதாண்டல் பரிட்சைக்காக 20 மொடியூல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
·
1 வது வினைத்திறன்
பரிட்சைக்கு 07 மொடியூல்கள்
·
2 வது வினைத்திறன்
பரிட்சைக்கு 07 மொடியூல்கள்
·
3 வது வினைத்திறன்
பரிட்சைக்கு 06 மொடியூல்கள்
2017/10/23 ம் திகதிக்குப் பின்னர் ஆசிரிய சேவையில்
உள்ளீர்ப்பு செய்யப்படும் விதம்.
·
பாடசாலை
வெற்றிடங்களுக்கு ஏற்ப 18-35 வயது பிரிவினரிடமிருந்து
விண்ணப்பங்கள் கோரப்படும்
·
பரீட்சை ( 40 புள்ளிகளுக்கு குறையாமல் பெற வேண்டும்)
·
பரிட்சையில் சித்திபெற்ற
ஐந்து பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்
·
அவர்களுள் 3 பேர்
செய்முறைப் பரிட்சைக்கு அழைக்கப்படுவர்
·
செய்முறைப்
பரிட்சையில் 25 புள்ளிகளில் 10 புள்ளிகளையாவது/கூடிய புள்ளிகளைப் பெறுபவர் நியமனம் செய்யப்படுவார்.
மேற்கண்ட புதிய விதிமுறைகள்
ஆசிரியர்கள் முன்னரைப் போல் அல்லாமல் தமது பதவி உயர்வுக்காக வேண்டி தொடர்ச்சியான
கற்றலில் ஈடுபட வேண்டி இருக்கும் எனலாம். ஆசிரியர்கள் தமது சேவை தொடர்பான புதிய
விதிமுறைகளை, சுற்று நிருபங்களை பின்வரும் கல்வி அமைச்சின் இணைய இணைப்பினை
அடிக்கடி பார்வைஇடுவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
8.0 ஆசிரியர் தாமாக
வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் (Other
Skills required to the Teachers)
தற்காலத்தில் ஆசிரிய பணியானது பெரும் சவால்மிக்கதாக மாறி
வருகிறது. மிகவிரைவாக அறிவு மற்றும் தகவல்
தொழிநுட்பம் என்பன மாற்றம் அடைந்து வருவதால் ஆசிரியர்களாகிய நாமும் எம்மைத் டயர்
செய்ய வேண்டி உள்ளது. ஆசிரியர்கள் ஆங்கில மொழியில் போதுமான அறிவைக் கொண்டிருத்தல்,
மட்டுமன்றி தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்திலும் போதுமான அறிவை, திறன்களை
வளர்த்துக் கொள்வது கட்டாயமாக உள்ளது.
பின்வரும் விடயங்களை iv விரிவுரைக்காக வேண்டி அன்பு ஜவகர்சா அவர்கள் எனக்கு அனுப்பி வைத்தார்கள். அவற்றை அவருக்கு நன்றி கூறி இங்கு பிரசுரிக்கிறேன்.
காலத்திற்குவையான ஆக்கம்
பதிலளிநீக்குகாலத்திற்குவையான ஆக்கம்
பதிலளிநீக்குuseful
பதிலளிநீக்குநல்ல விடயம் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசகல ஆசிரியர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஆக்கம் தம்மைத்தாமே வளர்த்து ஆளாக்கி ஆளுமையாக்கிக்கொள்ள அருமையான வழிகாட்டல் நன்றி
பதிலளிநீக்குஆசிரியர்களுக்கு தேவையான விடயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி. வினை திறன் தடை தாண்டல் குறித்த விளக்கங்களை (படங்களை) தெளிவாக பிரசுரிக்க முடியுமா?
பதிலளிநீக்குகாலத்துக்கு ஏற்றதும் அவசியமானதுமான ஆக்கம் நன்றி
பதிலளிநீக்குஆசிரியர் கல்வி வழங்கலில் எதிர்கொள்ளம் சவால்களையும் குறிப்பிடுங்கள் நன்றி
பதிலளிநீக்குgood work
பதிலளிநீக்குசிறந்த தேடல் பக்கம் சேர்
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள ஆக்கம் sir. மிக்க நன்றி sir.
பதிலளிநீக்குமிகவும் நன்மையானது
பதிலளிநீக்கு