யா அல்லாஹ்!



கலாநிதி அய்தல் கர்னி எழுதிய  லா தஹ்சன் எனும் பிரபல்யம் பெற்ற  அரபு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Do not be sad! இன்  யா அல்லாஹ் என்ற தலைப்பில்  (முதல் இரு பக்கங்களில்) உள்ளவற்றை தமிழில் மொழிபெயர்த்து இங்கு தந்துள்ளேன்.  
தமிழில்: கலாநிதி ப.மு.நவாஸ்தீன்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு...

யா அல்லாஹ்!

வானங்களிலும் பூமியிலுமுள்ளோர் அனைவரும் (தங்களுக்கு வேண்டிவற்றை) அவனிடமே கேட்கின்றனர். ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான் (அதாவது சிலரை கௌரவித்தும் மற்றும் சிலரை  கேவலப்படுத்தியும், சிலருக்கு வாழ்வளித்தல் (உயிர் அளித்தும்) சிலரை மரணிக்கச் செய்தல் போன்ற இன்னோரன்ன காரியங்கள்) (அல் குர்ஆன் 55:29)

கடும் புயற்காற்று வீசிடும் போது, கடல் கொந்தளிக்கும் போது படகில் உள்ளோர் “யா அல்லாஹ்” என உரக்க அழைக்கின்றனர்.
ஒட்டகத்தில் செல்லும் பயணி மற்றும் வணிகக்கூட்டம் பாலைவனத்தில் வழிதவறி தவிக்கும் போது அவர்கள் உரக்க அழைப்பது “ யா அல்லாஹ்” என்றே.

அனர்த்தம் அல்லது பேராபத்தொன்று நிகழும்போது பாதிக்கப்படும் மக்கள் அழைப்பதும்  “ யாஅல்லாஹ்” என்றே!

அவர்கள்  நுழைவதற்கு முன் நுழைவாயில்கள் அடைக்கப்படும் போதும்,  தேவையானவர்களுக்கு முன் தடைகள் வைக்கப்படும்போதும் அவர்கள்  “யா அல்லாஹ்” எனக் கதறுகின்றனர்.

சகல திட்டங்களும் தோல்வியில் முடியும் போதும் சகல நம்பிக்கைகளும் இழக்கப்படும்போதும், வழிகள்/ பாதைகள்  சுருங்கிப்போகும் போதும் “ யா அல்லாஹ்” என்று அழைக்கப்படுகின்றது.

சகல நல்ல வார்த்தைகள்,  நேர்மையான இரைஞ்சல்கள், அப்பாவிகளின் கண்ணீர் என்பன அல்லாஹ்விடம் மேலேறிச் செல்கின்றன. கஸ்டங்களும்,  துர்அதிஸ்டங்களும் வந்திடும் போது அவர்களின் கரங்களும் கண்களும் அல்லாஹ்வை நோக்கி நீளுகின்றன. நாவூ (திக்ருகளை) ஓதி அல்லாஹ்வை உரத்துக் கூப்பிடுகிறது. அவனது  பெயரை நினைவுபடுத்துகிறது.

இதயம் சாந்தியடைகின்றது. ஆன்மா அமைதி பெறுகிறது. நரம்புகள் தளர்வடைகின்றன. அறிவாற்றல் விழித்துக் கொள்கிறது. இவையனைத்தும் நாம் அல்லாஹ் சுப்ஹானஹுவ தாஅலா  (அவன் தூய்மையானவன், மேன்மைமிக்கவன்) என  நினைவு  கூறும்போது அடையப்பெறுகிறது.

அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்புமிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமைமிக்கவன்; (யாவரையம்) மிகைத்தவன். (அல்குர்ஆன் 42:19)

அல்லாஹ் : உண்மையான சொற்களினால் இணைந்த மிகப்பெறுமதி வாய்ந்த வார்த்தைகளிலான, பெயர்களில்  மிக அழகுமிக்க திருநாமம் ஆகும்.

(பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?  (அல்லாஹ்வூக்கு நிகரானவர் யாருமிலர், அவன் யாவற்றையும் செவியுறுபவனும் பார்ப்பவானாகவும் இருக்கிறான்) (அல்குர்ஆன் 19:65)

அல்லாஹ்: முழுமையான செழுமை, வலிமை, பெருமை, ஞானம் என்பன மனதில் நினைவுக்கு வரும்போது அவனே நினைவிற்கு வருகிறான்.

அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் - ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கேயாகும். (அல்குர்ஆன் 40:16)

அல்லாஹ்: அன்பு, பாதுகாப்பு, நிவாரணம், பாசம், கருணை என்பன நினைவிற்கு வரும்போது அவனே அவற்றுக்கு உரியவனாகின்றான்.

மேலும், எந்த நிஃமத் (பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும்; (அல்குர்ஆன் 16:53)

யா அல்லாஹ்: மாட்சிமை மிகுந்தவனே,  சிறப்புமிக்கவனே, வல்லமைஉடையவனே, கவலை வருமிடத்தில் ஆறுதலளித்து விடுவாயாக,  துயரத்தின் பின்னர் மகிழ்ச்சியடையச் செய்வாயாக,  பயமிருக்குமிடத்தில் பாதுகாப்பை உண்டாக்குவாயாக.

யா அல்லாஹ்: எரியும் இதயங்களை நம்பிக்கையெனும் மன அமைதியுடன் ஆற்றுவாயாக!

எங்கள் இறைவனே!   அமைதி இழந்தவர்களுக்கு  அமைதியான தூக்கத்தையும்,  நிம்மதி இழந்த ஆன்மாக்களுக்கு சாந்தத்தினையும் அளித்து விடுவாயாக.

எங்கள் இறைவனே!   குழம்பித் திரிபவர்களுக்கு   உனது ஒளியில்
வழிகாட்டுவாயாக மற்றும்  வழிகேட்டில் இருப்பவர்களுக்கு உனது வழிகாட்டலை வழங்குவாயாக.

எங்கள் இறைவனே!   எங்கள் இதயங்களில் இருந்து தீய எண்ணங்களை
நீக்கி விடுவாயாக. அவற்றை ஒளிமயமாக்கித் தருவாயாக. பொய்யை உண்மையைக் கொண்டும் ஷைத்தானின் தீய ஈர்ப்புக்களை உனது மலக்குகளின் படை கொண்டும் அழித்து விடுவாயாக.

யா அல்லாஹ்! கவலை, துன்பம், பதகளிப்புக்களை எங்களிடமிருந்து
நீக்கிவிடுவாயாக.

உன்னையன்றி  வேறு யாரிலும் தங்கியிருப்பதில் இருந்தும், உன்னைத் தவிர வேறு யாரிடத்திலும் முழுமையாக நம்பிக்கை வைப்பதில் இருந்தும், உன்னையின்றி வேறு யாரினையும் புகழ்வதில் இருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறோம்.. நீயே மிக்கமேலான பாதுகாவலன். மிகச் சிறந்த பாதுகாப்பாளன். 

(கலாநிதி அய்தல் கர்னி எழுதிய  லா தஹ்சன் எனும் பிரபல்யம் பெற்ற அரபு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Do not be sad! இலிருந்து.
தமிழில்: கலாநிதி ப.மு.நவாஸ்தீன்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள்- தொடர் - 1

       கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள் பேராசிரியர் எப்.எம்.நவாஸ்தீன்  கல்விப் பீடம்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆய்வுச் செயன்முறையில் தரவு சே...