கவலைப்படாதே!
கவலைப்படாதே! நூல்
கலாநிதி அய்த் தல் கர்ணி எழுதிய லா தஹ்சன் நூலின் ஆங்கிலப் பெயர்ப்பான Don't be Sad இனை பொழுதுபோக்காக தமிழ்படுத்த முயன்றபோது, அது ஏற்கனவே தமிழில் வந்திருப்பது தெரியவந்தது. அதனை கலாநிதி அ. ஜாகிர் ஹுசைன் தமிழ்படுத்தி உள்ளார். இப் புத்தக விபரங்கள் வருமாறு:
நூல்: கவலைப்படாதே
கலாநிதி அய்த் தல் கர்ணி எழுதிய லா தஹ்சன் நூலின் ஆங்கிலப் பெயர்ப்பான Don't be Sad இனை பொழுதுபோக்காக தமிழ்படுத்த முயன்றபோது, அது ஏற்கனவே தமிழில் வந்திருப்பது தெரியவந்தது. அதனை கலாநிதி அ. ஜாகிர் ஹுசைன் தமிழ்படுத்தி உள்ளார். இப் புத்தக விபரங்கள் வருமாறு:
நூல்: கவலைப்படாதே
ஆசிரியர்:
டாக்டர் ஆயிழ் அல்கர்னீ
தமிழில்
டாக்டர் அ.ஜாகிர் ஹுசைன் பாகவி எம்.ஏ.,பி.ஹெச்.டி
அரபு மொழி உதவிப் பேராசிரியர், சென்னை பல்கலைக்கழகம்.
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138,பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை -600012
இலங்கையில் கிடைக்குமிடங்கள் தெரிந்தால் இங்கு பதிவில் இடுங்கள்.
இந்நூலிருந்து ஒரு சில வரிகளை வலையுகம் பின்வருமாறு பதிவிட்டிருந்தது:
நன்றி வலையுகம் : http://valaiyukam.blogspot.com/2011/04/blog-post_24.html
உழைத்துக் கொண்டே இரு…!
வாழ்க்கையில் வேலயில்லாமல் சும்மா இருப்பவர்கள் தாம் பொய்களையும்,வதந்திகளையும்பரப்புகிறார்கள்.ஏனெனில்,அவர்களது சிந்தனை சிதறிக் கிடக்கிறது.
வேலையில்லாமல் இருப்பவனின் சிந்தனைதான் மிகவும் அபாயகரமானது.
அவனது சிந்தனை ஓட்டுநர் இல்லாமல் பள்ளத்தை நோக்கி வேகமாகச் செல்லும் வாகனத்தைப்போன்றது.அது வலப்பக்கமாகவும் சாயும்.இடப்பக்கமாகவும் சாயும்.
உனது வாழ்க்கையில் வேலை இல்லாத நாளை நீ சந்திக்க நேர்ந்தால் அன்றைய நாளில்கவலை,துக்கம்,துயரம் ஆகியவற்றை எதிர்கொள்ள நீ தயாராக இரு.ஏனெனில்,சோம்பல்,வாழ்க்கையின்இழுப்பறைகளிலிருந்து இறந்தகால,நிகழ்கால,வருங்காலக் கோப்புகளை மெதுவாக இழுத்து உனதுசிந்தனைக்குக் கொண்டு வரும்.
அது உன்னைக் குழப்பத்தில் அமிழ்த்தும்.எனவே,எனக்கும் உனக்கும் நான் கூறும் அறிவுரை இதுதான்:வேலையற்று இருப்பதற்குப் பதிலாக,பயன் தரும் வேலைகளில் ஈடுபடு.ஏனெனில்,வேலையில்லாமல்இருப்பது உன்னை நீயே கொஞ்சம் கொஞ்சமாகப் புதைக்கும் செயல்.மெல்ல மெல்ல சாகடிக்கும்மாத்திரையால் நீ தற்கொலை செய்து கொள்ளும் விபரீதம்.
களைப்பாறுதல் என்பது பிறரது உரிமையைப் புறக்கணித்தலாகும்.சோம்பல். என்பது கைதேர்ந்ததிருடன்.இந்த எண்ணப் போர்களில் சின்னாபின்னமாக்கப்பட்டு பலியாகப் போவது உனது அறிவுதான்.
எனவே இப்போதே எழு! தொழு,அல்லதுஓது,அல்லது இறைவனைத் துதி,அல்லது நூல்களைப் படி,அல்லதுஎழுது,அல்லது உனது அலுவலகத்தை ஒழுங்குபடுத்து,அல்லது வீட்டை அழகுபடுத்து,அல்லது பிறருக்குஉதவு.இப்படி ஏதாவது ஒரு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே இரு.
உழைப்பு எனும் கத்தியால் சோம்பலை அறுத்து விடு.நீ இத்தகையப் புத்துணர்ச்சி தரும் செயல்பாடுகளைநிறைவேற்றினாலே போதும்.உனது வாழ்வில் ஐம்பது சதவீத மகிழ்ச்சி ஏற்பட்டு விடும்.இது உலகமருத்துவர்கள் தரும் உத்தரவாதம்.
சுயசார்பற்று வாழாதே!
பிறரது பண்புகளை உனக்குள் புகுத்தாதே. மற்றவர்களில் நீ மறைந்து போகாதே. இது நிரந்தரவேதனை.பெரும்பாலானோர் மற்றவர்களைப் போல வாழ வேண்டும் என்பதற்காகத் தங்களையே மறந்துவிடுகிறார்கள். தங்களது குரல்களை,அசைவுகளை,வார்த்தைகளை,திறமைகளை,நல்ல பண்புகளை மறந்துவிடுகிறார்கள்.இறுதியில் தமது இருப்பையும் சுயசார்பையும் இழந்து போலித்தனமாகவாழ்கிறார்கள்;அதனால் அவதியுறுகிறார்கள்.
ஆதி மனிதர் ஆதம் முதல் கடைசி மனிதன் வரை,ஒரே வடிவில் இருவர் இருக்க மாட்டார்கள்.பிறகுஎப்படி அவர்களது குணங்களும் திறமைகளும் ஒரே மாதிரி இருக்க முடியும்?
நீ மற்றொருவன், உலகில் உன்னைப் போல் வேறு எவரும் பிறந்திருக்க முடியாது.இனி பிறக்கவும்முடியாது.
நீ இவனை விட முற்றிலும் மாறுபட்டவன்.எனவே கண்மூடித்தனமாக இவனைப் பின்பற்றவேண்டும்,அவனைப் போல வாழ வேண்டும் என உன்னை நீ வற்புறுத்தாதே.
நீ நீயாக வாழு.உனது இயல்பு எதுவோ அதன்படி வாழு.
நீ எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறாயோ அவ்வாறு வாழு.உனது குரலை,பேச்சு நடையை மாற்றாதே.உனதுநடை எதுவோ அவ்வாறே நட.அதற்கு மாறு செய்யாதே.வேத அறிவிப்புக்கு ஏற்ப உன்னை நீசெதுக்கு.ஆனால்,உனது இருப்பை வீணாக்கி விடாதே. உனது குணம் என நாங்களும் உன்னைப் புரிந்துவைத்திருக்கிறோம்.
உனக்கென ஒரு சுவை உண்டு.உனக்குரிய சுவையை சுவைத்து,நிறத்தை ரசித்து நீ வாழ வேண்டும்என்றே நாம் விரும்புகிறோம்.ஏனெனில்,நீ இவ்வாறே படைக்கப் பட்டிருக்கிறாய்.இதுதான் உனது குணம்என நாங்களும் உன்னைப் புரிந்து வைத்திருக்கிறோம்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் சுயசார்பற்றவராக இருக்க வேண்டாம்.(நூல்:திர்மிதி)
மனிதர்களின் பண்புகள் மரஞ் செடிகளின் உலகத்திற்கு ஒப்பானது.அவற்றில் சில இனிக்கும்.சிலபுளிக்கும்.சில உயரமாக இருக்கும்.சில குட்டையாக இருக்கும்.மனிதர்களின் பண்புகளும் இப்படித்தான்அமைந்துள்ளன.எனவே,நீ வாழைப் பழத்தைப் போன்றவனாக இருந்தால்,எட்டிகாயைப் போல மாறநினைக்காதே.
ஏனேனில்,உனது அழகும்,மதிப்பும் நீ வாழைப் பழமாக இருப்பதால் தான் கிடைக்கின்றன.நமதுநிறம்,மொழி,திறமை,ஆற்றல் ஆகியவை வேறுபட்டிருப்பது இறைவனது சான்றுகளில் ஒன்று.அவனதுசான்றை நீ மறுக்காதே.
சிந்தித்து நன்றியுடன் இருக்க...
சிந்தித்து
நன்றியுடன் இருக்க...
(கலாநிதி அய்தல் கர்ணி எழுதிய லா-தஹ்சன் எனும் நூலின்
ஆங்கிலப் பெயர்ப்பான Don’t Be Sad இலிருந்து) தமிழில் : கலாநிதி
எப்.எம். நவாஸ்தீன்)
உங்கள் மீது அல்லாஹ் தந்துள்ள கிருபைகளை யும் எவ்வாறு அவை மேலும் கீழுமாக- உண்மையில்
சகல திசைகளிலும் உங்களை சூழ்ந்துள்ளன என்பதையும் நினைத்துப் பார்ப்போமாக.
(அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள்
கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடிக்க முடியாது! அல்-குர்ஆன்14:34)
ஆரோக்கியம், பாதுகாப்பு, உணவளிப்பு, கற்று, மற்றும்
நீர்- இவையனைத்தும் உலகில் உங்களுக்காக இருக்கின்றன.
ஆனால் நீங்கள் அதனை இன்னமும் உணராமல் உள்ளீர்கள். நீங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தையும்
கொண்டிருந்தும், இன்னமும் அறியாமையில் உள்ளீர்கள்.
“இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும் (அதாவது,
ஓரிறைவனை வணங்குதல், ஆரோக்கியம், நல்ல கண் பார்வை உட்பட இவ்வுலகின் நியாயமான சந்தோசங்கள்
போன்ற ) அகத்திலும் (அதாவது: அல்லாஹ்வின் மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை,
ஸாலிஹான நற்செயல்களைச் செய்வதற்கான வழிகாட்டல், மற்றும் மறுவுலகின் சுவர்க்கத்தில்
உள்ள இன்பம் மற்றும் மனமகிழ்ச்சி போன்ற ) நிரம்பச் செய்திருக்கிறான்” (அல்-குர்ஆன் 31:20).
நீங்கள் உங்கள் வசம் இரண்டு கண்கள், ஒரு நாவு, உதடுகள்,
இரு கைகள், மற்றும் இரு கால்களை கொண்டுள்ளீர்கள்.
“ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய – மனிதர்கள் மற்றும் ஜின்களுடைய) இறைவனின் அருட்கொடைகளில்
எதைப் பொய்யாக்குவீர்கள்? (அல்-குர்ஆன் 55:13)”
இந்நூலை மொழிபெயர்க்கும் பொது, இந்நூல் ஏற்கனவே கவலைப்படாதே எனும் தலைப்பில் சென்னையில் வெளிவந்துள்ளதாக அறியமுடிந்தது. அதன் விபரம்:
நூல்: கவலைப்படாதே
நூல்: கவலைப்படாதே
ஆசிரியர்:
டாக்டர் ஆயிழ் அல்கர்னீ
தமிழில்
டாக்டர் அ.ஜாகிர் ஹுசைன் பாகவி எம்.ஏ.,பி.ஹெச்.டி
அரபு மொழி உதவிப் பேராசிரியர், சென்னை பல்கலைக்கழகம்.
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138,பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை -600012
யா அல்லாஹ்!
கலாநிதி அய்தல்
கர்னி எழுதிய லா தஹ்சன் எனும் பிரபல்யம்
பெற்ற அரபு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Do not be sad! இன் யா அல்லாஹ் என்ற தலைப்பில் (முதல் இரு பக்கங்களில்) உள்ளவற்றை தமிழில்
மொழிபெயர்த்து இங்கு தந்துள்ளேன்.
தமிழில்:
கலாநிதி ப.மு.நவாஸ்தீன்
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு...
யா அல்லாஹ்!
“வானங்களிலும்
பூமியிலுமுள்ளோர் அனைவரும் (தங்களுக்கு வேண்டிவற்றை) அவனிடமே கேட்கின்றனர்.
ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான் (அதாவது சிலரை கௌரவித்தும் மற்றும் சிலரை கேவலப்படுத்தியும், சிலருக்கு வாழ்வளித்தல்
(உயிர் அளித்தும்) சிலரை மரணிக்கச் செய்தல் போன்ற இன்னோரன்ன காரியங்கள்) (அல் குர்ஆன் 55:29)
கடும்
புயற்காற்று வீசிடும் போது, கடல் கொந்தளிக்கும் போது படகில் உள்ளோர் “யா அல்லாஹ்”
என உரக்க அழைக்கின்றனர்.
ஒட்டகத்தில்
செல்லும் பயணி மற்றும் வணிகக்கூட்டம் பாலைவனத்தில் வழிதவறி தவிக்கும் போது அவர்கள்
உரக்க அழைப்பது “ யா அல்லாஹ்” என்றே.
அனர்த்தம் அல்லது
பேராபத்தொன்று நிகழும்போது பாதிக்கப்படும் மக்கள் அழைப்பதும் “ யாஅல்லாஹ்” என்றே!
அவர்கள் நுழைவதற்கு முன் நுழைவாயில்கள் அடைக்கப்படும் போதும், தேவையானவர்களுக்கு முன் தடைகள்
வைக்கப்படும்போதும் அவர்கள் “யா அல்லாஹ்”
எனக் கதறுகின்றனர்.
சகல திட்டங்களும்
தோல்வியில் முடியும் போதும் சகல நம்பிக்கைகளும் இழக்கப்படும்போதும், வழிகள்/ பாதைகள்
சுருங்கிப்போகும் போதும் “ யா அல்லாஹ்”
என்று அழைக்கப்படுகின்றது.
சகல நல்ல
வார்த்தைகள், நேர்மையான இரைஞ்சல்கள்,
அப்பாவிகளின் கண்ணீர் என்பன அல்லாஹ்விடம் மேலேறிச் செல்கின்றன. கஸ்டங்களும், துர்அதிஸ்டங்களும் வந்திடும் போது அவர்களின் கரங்களும்
கண்களும் அல்லாஹ்வை நோக்கி நீளுகின்றன. நாவூ (திக்ருகளை) ஓதி அல்லாஹ்வை உரத்துக் கூப்பிடுகிறது. அவனது பெயரை நினைவுபடுத்துகிறது.
இதயம்
சாந்தியடைகின்றது. ஆன்மா அமைதி பெறுகிறது. நரம்புகள் தளர்வடைகின்றன. அறிவாற்றல்
விழித்துக் கொள்கிறது. இவையனைத்தும் நாம் அல்லாஹ் சுப்ஹானஹுவ தாஅலா (அவன் தூய்மையானவன், மேன்மைமிக்கவன்) என நினைவு கூறும்போது அடையப்பெறுகிறது.
அல்லாஹ் தன்
அடியார்கள் பால் அன்புமிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய)
உணவளிக்கிறான்; அவனே வலிமைமிக்கவன்; (யாவரையம்) மிகைத்தவன். (அல்குர்ஆன் 42:19)
அல்லாஹ் : உண்மையான சொற்களினால் இணைந்த மிகப்பெறுமதி வாய்ந்த வார்த்தைகளிலான, பெயர்களில் மிக அழகுமிக்க திருநாமம் ஆகும்.
(பெயரில், வல்லமையில், மற்றும்
தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா? (அல்லாஹ்வூக்கு நிகரானவர் யாருமிலர், அவன் யாவற்றையும் செவியுறுபவனும்
பார்ப்பவானாகவும் இருக்கிறான்) (அல்குர்ஆன் 19:65)
அல்லாஹ்: முழுமையான
செழுமை, வலிமை, பெருமை, ஞானம் என்பன மனதில் நினைவுக்கு வரும்போது அவனே நினைவிற்கு வருகிறான்.
அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் - ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கேயாகும். (அல்குர்ஆன் 40:16)
அல்லாஹ்: அன்பு, பாதுகாப்பு, நிவாரணம், பாசம், கருணை
என்பன நினைவிற்கு
வரும்போது அவனே அவற்றுக்கு உரியவனாகின்றான்.
மேலும், எந்த நிஃமத் (பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது
அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும்; (அல்குர்ஆன் 16:53)
யா அல்லாஹ்: மாட்சிமை மிகுந்தவனே, சிறப்புமிக்கவனே, வல்லமைஉடையவனே, கவலை வருமிடத்தில்
ஆறுதலளித்து விடுவாயாக, துயரத்தின் பின்னர் மகிழ்ச்சியடையச் செய்வாயாக, பயமிருக்குமிடத்தில் பாதுகாப்பை உண்டாக்குவாயாக.
யா அல்லாஹ்: எரியும் இதயங்களை நம்பிக்கையெனும்
மன அமைதியுடன் ஆற்றுவாயாக!
எங்கள் இறைவனே! அமைதி இழந்தவர்களுக்கு
அமைதியான தூக்கத்தையும், நிம்மதி இழந்த ஆன்மாக்களுக்கு சாந்தத்தினையும்
அளித்து விடுவாயாக.
எங்கள் இறைவனே! குழம்பித் திரிபவர்களுக்கு உனது ஒளியில்
வழிகாட்டுவாயாக மற்றும் வழிகேட்டில் இருப்பவர்களுக்கு உனது வழிகாட்டலை வழங்குவாயாக.
எங்கள் இறைவனே! எங்கள் இதயங்களில் இருந்து தீய எண்ணங்களை
நீக்கி விடுவாயாக. அவற்றை ஒளிமயமாக்கித் தருவாயாக. பொய்யை உண்மையைக் கொண்டும் ஷைத்தானின்
தீய ஈர்ப்புக்களை உனது மலக்குகளின் படை கொண்டும் அழித்து விடுவாயாக.
யா அல்லாஹ்! கவலை,
துன்பம், பதகளிப்புக்களை எங்களிடமிருந்து
நீக்கிவிடுவாயாக.
உன்னையன்றி வேறு யாரிலும் தங்கியிருப்பதில் இருந்தும், உன்னைத்
தவிர வேறு யாரிடத்திலும் முழுமையாக நம்பிக்கை வைப்பதில் இருந்தும், உன்னையின்றி
வேறு யாரினையும் புகழ்வதில் இருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறோம்.. நீயே
மிக்கமேலான பாதுகாவலன். மிகச் சிறந்த பாதுகாப்பாளன்.
(கலாநிதி அய்தல்
கர்னி எழுதிய லா தஹ்சன் எனும் பிரபல்யம்
பெற்ற அரபு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Do not be sad! இலிருந்து.
தமிழில்: கலாநிதி ப.மு.நவாஸ்தீன்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள்- தொடர் - 1
கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள் பேராசிரியர் எப்.எம்.நவாஸ்தீன் கல்விப் பீடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆய்வுச் செயன்முறையில் தரவு சே...
-
ஆய்வுப் பிரேரணை / ஆய்வு முன்மொழிவு தயாரித்தல் கலாநிதி. எப்.எம். நவாஸ்தீன் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ...
-
கலைத்திட்டம்: ஓர் அறிமுகம் An Introduction to Curriculum கலாநிதி எப்.எம்.நவாஸ்தீன் சிரேஸ்ட விரிவுரையாளர் இலங்கை திறந்த பல...
-
கல்வி ஆய்வியலில் மாதிரியெடுப்பு ( Sampling in E ducational Research ) பேராசிரியர் ( கலாநிதி) எப். எம். நவாஸ்தீன் இலங்கை திறந்த பல்க...