ஆசிரியர் கல்வியில் ஆய்வு

ஆசிரியர் கல்வியில் ஆய்வு





அறிமுகம்

ஆசிரியர் கல்வியில் ஆய்வு  என்பது கற்பித்தல்–கற்றல் செயன் முறைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளவும், அவற்றை மேம்படுத்தவும் உதவும் ஒரு அறிவியல் வழிமுறை ஆகும். ஆசிரியர்கள் எவ்வாறு கற்பிக்கிறார்கள், மாணவர்கள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள், எந்தக் கற்பித்தல் அணுகுமுறைகள் சிறப்பாக செயற்படுகின்றன, தொழில்நுட்பம் மற்றும் உளவியல் கூறுகள் கற்றலை எவ்வாறு பாதிக்கின்றன என்பவற்றை முறையான ஆய்வுகளின் மூலம் கண்டறிதல் இதன் நோக்கம் ஆகும். முன் சேவை ஆசிரியர்கள்   (pre-service), சேவைக்கால  ஆசிரியர்கள்  (in-service), வாண்மை விருத்தி , வகுப்பறை நடைமுறைகள், கற்பித்தல் உத்திகள், மாணவர் ஈடுபாடு, மதிப்பீட்டு முறைகள், கல்வியில் உருவாகும் புதிய நுட்பங்கள் போன்றவை இத்துறையின் முக்கிய ஆய்வு திசைகளாகும்.இந்த கட்டுரையில் ஆசிரியர் கல்வியில் ஆய்வுகள் பற்றிய சில முக்கிய விடயங்கள் எடுத்து நோக்கப்படுகின்றன.

ஆசிரியர் கல்வி

ஆசிரியர் கல்வி என்பது, பாடசாலைகளிலும்  சமூகங்களிலும் தங்கள் பணிகளை திறம்படச் செய்வதற்குத் தேவையான அறிவு, திறன்கள், அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளுடன் வருங்கால மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை ஆயத்தப்படுத்துவதற்க்காக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஆகும். . இது ஒரு ஆசிரியரின் முழு வாழ்க்கையையும் உள்ளடக்கிய ஒரு தொடர்ச்சியான செயன் முறையாகும்.

ஆசிரியர் கல்வியின் முக்கிய கூறுகள்

ஆசிரியர் கல்வியின் வகைகள்

  • சேவைக்கு முந்தைய கல்விஇது வருங்கால ஆசிரியர்களுக்கு வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன் வழங்கப்படும் ஆரம்பப் பயிற்சியாகும். இது பொதுவாக ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் நிகழ்கிறது மற்றும் கற்பிப்பதற்கான முறையான தகுதி மற்றும் சான்றிதழைப் பெற வழிவகுக்கிறது
  • சேவைக்கால கல்வி /தொடர் வாண்மைத்துவ  மேம்பாடு (CPD): இது பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கான தொடர்ச்சியான கல்வி மற்றும் பயிற்சியைக் குறிக்கிறது. இது அவர்களின் திறன்கள், அறிவைப் புதுப்பித்தல் மற்றும் புதிய முறைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 ஆசிரியர் கல்வியில் ஆய்வு ஏன் முக்கியமானது?

கற்பித்தலில் முன்னேற்றத்தையும் வாண்மைத்  திறனையும் இயக்கும் இயந்திரம் ஆய்வு ஆகும். ஆய்வுகள் ஆசிரியர்  பிரச்சினைகளுக்கு சான்றுமிக்க தீர்வுகளை வழங்குகிறது.

ஆசிரியர் கல்வி தொடர்பான கொள்கை மற்றும் நடைமுறையைத் தீர்மானிக்க உதவுகிறது: ஆசிரியர் கல்வி தொடர்பான கலைத்திட்டம் பாடத்திட்டம், மதிப்பீடு மற்றும் ஆசிரியர் தரநிலைகள் குறித்து முடிவெடுப்பவர்களுக்குத் தரவை வழங்குகிறது.

மாணவர் அடைவுகளை  மேம்படுத்துகிறது: சிறந்த மாணவர் கற்றல் மற்றும் ஈடுபாட்டிற்கு வழிவகுக்கும் கற்றல் கற்பித்தல் உத்திகளை அடையாளம் காட்டுகிறது.

வாண்மைத்துவத்தை  மேம்படுத்துகிறது: மருத்துவம் அல்லது சட்டம் போன்ற போல கற்பித்தலையும்  ஒரு சான்று அடிப்படையிலான வாண்மையாக   நிறுவுகிறது.

புதுமைகளை இயக்குகிறது: கல்வி சவால்களைத் தீர்க்க புதிய தொழில்நுட்பங்கள், கற்பித்தல் முறைகள் மற்றும் அணுகுமுறைகளை பரிசோதிக்கிறது.

ஆசிரியர் கல்வி தொடர்பான முக்கிய ஆய்வுப்  பகுதிகள்

உலகளவில், ஆசிரியர் கல்வியில் ஆய்வுகள் பல்வேறுபட்டவைகளாக  விளங்குகின்றன. ஆனால்அண்மைக்காலமாக பின்வரும் பகுதிகளில் ஆசியர் கல்வி தொடர்பான ஆய்வுகள் கவனத்தி ஈர்த்து வருகின்றன.  

  1. போதனா (கற்பித்தல்) உள்ளடக்க அறிவு (PCK) தொடர்பான ஆய்வுகள் (பாட உள்ளடக்கத்தையும், போதனை முறைகளையும் ஒருங்கிணைத்து மாணவர்களின் புரிதலை உயர்த்துவது எப்படி? PCK வளர்ச்சி ஆசிரியர் பயிற்சியில் எப்படி உள்வாங்கப்படுகிறது?  Practicum-இல் PCK மேம்பாட்டின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்.
  2. தொழில்நுட்பபோதனா (கற்பித்தல்) உள்ளடக்க அறிவு (TPCK/TPACK) தொடர்பான ஆய்வுகள்: (ஆசிரியர்கள் தொழில்நுட்பத்தை தமது  கற்பித்தலில்  அர்த்தமுள்ள வகையில் இணைக்க தேவையான திறன்கள். ஆன்லைன்/கலப்பு கற்றல் சூழலில் TPACK திறன்களின் மேம்பாடு. TPACK குறித்த பயிற்றுவிப்பு மாதிரிகள் (models) மற்றும் அவற்றின் பலன்கள்)
  3. சான்றுகள் சார்ந்த கல்வி (EBE) மற்றும் பயிற்றுவிப்பு உத்திகள் (Evidence-Based Education (EBE) and Instructional Strategies): இது தற்போது உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆய்வு துறை. இதில் கவனம் செலுத்தப்படும் முக்கிய உத்திகள்:
    • Active Learning – மாணவர் பங்கேற்பு அதிகரிக்கும் கற்றல் வடிவங்கள்
    •  Activating Prior Knowledge – முன் அறிவினை  செயற்படுத்துதல்
    • Data-informed Instruction – தகவல்/தரவு அடிப்படையில் கற்பித்தல்  போதனை முடிவுகள்
    • Formative Assessment – கற்றல் செயன்முறையின் தொடர்ச்சியான மதிப்பீடு
    • Inclusive Practices & Belongingness – மாணவர் உள்ளடக்கல் /சமத்துவம்
    •  Instructional Transparency – கற்பித்தல் வெளிப்படை. மாணவர்கள் ஏன், எவற்றை , எப்படிக் கற்றுக்கொள்வார்கள் என்பது குறித்து தெளிவான, திறந்த மற்றும் நேர்மையான தகவல்தொடர்பை கல்வியாளர்கள் வழங்கும் ஒரு சான்று  அடிப்படையிலான கற்பித்தல் அணுகுமுறை.
    •  Metacognition & Self-regulated Learning – பேரறிகை  மற்றும் சுயகற்றல்
    •  Peer Collaboration – சக பாடி ஒத்துழைப்பு
4. ஆசிரியர் வாண்மைசார்  அடையாளம் மற்றும் நல்வாழ்வு (Teacher Professional Identity and Well-being)

  • *     ஆசிரியர் அடையாள உருவாக்கத்தில் சமூக, கலாச்சார, நிறுவன காரணிகள்.
  • *     ஆசிரியர் சோர்வு, மன அழுத்தம், வேலை-வாழ்க்கை சமநிலை (Teacher burnout, stress, work–life balance).
  • *     நல்ல நல்வாழ்வு ஆசிரியர் செயற்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம்.
  • *     ஆசிரியர் தக்கவைப்பு (Teacher retention) மற்றும் வேலைத் திருப்தி பற்றிய ஆய்வுகள்.

 

5.     5. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அதனின் கல்விச் பயன்பாடு

  • *    Generative AI, Learning Analytics, AI-based assessments.
  • *     AI பயன்படுத்தும் போது ஏற்படும் நெறிமுறை (ethics), bias மற்றும் சமத்துவ ஏழுவினாக்கள்
  • *     AI-assisted teaching tools ஆசிரியர் கல்வியில் ஏற்படுத்தும் மாற்றங்கள்.
  • *     Pre-service ஆசிரியர்கள் AI literacy பெற வேண்டிய அவசியம். 

6.     6. டிஜிட்டல் கல்வி-முறை மற்றும் கலப்பு முறை (Hybrid)  கற்றல்

  • *     நிகழ்நிலை கற்பித்தல் திறன்கள் Online pedagogy
  • *      கலப்பு கற்றல் மாதிரிகள் Blended learning models (Flipped classroom, HyFlex).
  • *     நிகழ்நிலை கற்பித்தல் (Virtual practicum) மற்றும் அதன் சவால்கள்.
  • *     டிஜிட்டல் கற்பித்தல் தேர்ச்சிகள். Digital teaching competencies.

 

7.   7. உளவியல்-சமூக மற்றும் சுற்றுச்சூழல் கற்றல்  ஆராய்ச்சி Psycho-social and Learning Environment Research

  • *  தனிப்பயனாக்கப்பட்ட கற்றல்: ஒவ்வொரு மாணவரின் தனித்துவமான தேவைகள், பலங்கள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப கல்வியை வடிவமைத்தல் (Personalized Learning: Tailoring education to each student’s unique needs, strengths, and interests.)  
  • *     சமூக-மனவெழுச்சி  கற்றல் (SEL): வாழ்க்கை வெற்றிக்கு முக்கியமான சுய விழிப்புணர்வு, சுய முகாமை  மற்றும் ஆளிடை உறவுத் திறன்களை வளர்ப்பது.(Social-Emotional Learning (SEL): Developing the self-awareness, self-management, and relationship skills critical for life success)  
  • *     நரம்பியல் கல்வி: கற்றல் செயல்முறைகளை நன்கு புரிந்துகொள்ள கற்பித்தல் நடைமுறைகளில் நரம்பியல் நுண்ணறிவுகளை ஒருங்கிணைத்தல். Brain-based learning strategies. Memory, attention, cognitive load ஆகியவற்றின் தாக்கம் (Neuroeducation: Integrating neurological insights into teaching practices to better understand learning processes)  
  • *     நுண் கற்றல்: உள்ளடக்கத்தை சிறிய பகுதிகளாக அதிக  கவனம் செலுத்தும் வகையில் கற்பித்தல் (Microlearning: Gaining traction as a method for delivering content in short, focused bursts)  

இலங்கையின் ஆசிரியர் கல்வி ஆய்வுகள் தொடர்பான நோக்கு

இலங்கையில் ஆசிரியர் கல்வி தொடர்பான ஆய்வுகள்  கடந்த சில தசாப்தங்களாக முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இன்னும் பல சவால்களையும் மேம்பாட்டு தேவைகளையும் கொண்ட ஒரு துறையாகத் திகழ்கிறது. இந்தத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்  பெரும்பாலும் கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் (NIE), திறந்த பல்கலைக்கழகம் (OUSL) மற்றும் கொழும்பு பல்கலைக்கழக கல்விப் பீடங்கள், பிற பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வி பிரிவுகள்   மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் போன்ற நிறுவனக்ளின் மூலம் நடைபெறுகின்றன.

 முக்கிய ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனங்கள்


நிறுவனம்

முக்கிய ஆராய்ச்சி துறைகள் / செயல்பாடுகள்

பல்கலைக்கழகங்கள் (Education Faculties and Departments)

*     M.Ed., MAEd., MPhil, PhD நிலை ஆய்வுகள்

*     Peradeniya, Colombo, Jaffna, Eastern, , OUSL போன்றவை

*     அதிகமாக பண்பு நிலை  (Qualitative), கலப்பு (Mixed Methods), வகுப்பறை அடிப்படையிலான செயல்நிலை  ஆராய்ச்சி (Action Research)

தேசிய கல்வி நிறுவனம் (NIE)

*     பாடத்திட்டமாற்றம்

*     ஆசிரியர் பயிற்சி வடிவமைப்பு

*     பயிற்றுநர் திறன் மேம்பாடு

*     பாடசாலை மேம்பாட்டு திட்டங்கள் (SIP) தொடர்பான ஆய்வுகள்

கல்வி அமைச்சு – ஆய்வு பிரிவு

*     தேசிய மாணவர், ஆசிரியர் செயல்திறன் ஆய்வுகள்

*     கண்காணிப்பு & மீளாய்வு அறிக்கைகள்

திறந்த பல்கலைக்கழகம் (OUSL)

*     திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி (ODL)

*     ICT, LMS பயன்பாடு

*     Self-Regulated Learning

*     ஆசிரியர் தொழில்முறை மேம்பாடு ஆய்வுகள்

 

இலங்கையில் ஆசிரிய கல்வி சார்ந்து ஆய்வுகள்  மேற்கொள்ளப்படும் முக்கிய தலைப்புப் பகுதிகள்

1. ஆசிரியர் வாண்மைத்துவ  தேர்ச்சிகள்

TPACK readiness

Classroom management

Assessment literacy

Subject–pedagogy integration

 2. ஆசிரியர் கல்விக்கு ICT & Online Learning

LMS பயன்பாடு

Blended learning

E-assessment

Virtual classrooms

3. பயிற்சி கல்லூரி & டிப்ளோமா திட்டங்கள்

National Colleges of Education (NCOE)

Teaching practice quality

Practicum supervision challenges

 4.  கல்வித் தரம் மற்றும் மாணவர் கற்றல் பேறுகள் 

Pre-service vs in-service teacher competence

Teacher performance evaluation systems

 5. கொள்கை மற்றும் நிர்வாக ஆய்வுகள்

Teacher recruitment

Continuous professional development (CPD)

Teacher workload and retention

School-based teacher development


இலங்கையில் ஆசிரிய கல்வி ஆய்வுகள் தொடர்பாக நிலவும்  தற்போதைய சவால்கள்

கொள்கை-ஆராய்ச்சி இணைப்பு குறைவு: ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஆனால் அவை கொள்கை முடிவெடுப்பில் பயன்படுத்தப்படுவது குறைவு.

 தரமான கலப்பு  முறை ஆய்வுகள் மற்றும் பரிசோதனை ஆய்வுகள் குறைவாக உள்ளான் ( Mixed Methods & Experimental Studies). அதிகமான ஆய்வுகள் விவரண ஆய்வுகளாக  உள்ளன.

ஆசியர்களின் செயலாற்றுகை தொடர்பாக தேசிய அளவிலான தொடர்ச்சியான தரவுத்தொகுப்பு இல்லை (Lack of Teachers’ longitudinal performance data)

 கற்பித்தல் பயிற்சி  அடிப்பையிலான ஆய்வுகள் குறைவு Practicum-based research. கற்பித்தல் பயிற்சி மேற்பார்வை மற்றும் mentorship தொடர்பான ஆய்வுகள் குறைவாக உள்ளன. (Teaching practice supervision & mentorship related systematic studies)

ஆய்வுகளுக்கான  நிதி பற்றாக்குறை

முடிவுரை 

 
ஆசிரியர் கல்வியில் ஆய்வு என்பது தரமான கற்பித்தலையும் பயனுள்ள கற்றலையும் உருவாக்கும் முக்கிய அறிவியல் அடித்தளம் ஆகும். இது ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தி, வகுப்பறை நடைமுறைகளை வளப்படுத்தி, மாற்றமடைந்து வரும் கல்வி உலகின் தேவைகளை பூர்த்தி செய்ய வழிகாட்டுகிறது. தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் புதிய அறிவு உருவாகி, கல்வி அமைப்பின் மேம்பாடு நிலையானதாகிறது.



கல்வியியல் ஆய்வுகளில் ஆய்வுப் பிரச்சினை


 கல்வியியல் ஆய்வுகளில் ஆய்வுப் பிரச்சினையைத் தெரிவு செய்தல்

எப்.எம்.நவாஸ்தீன்

கல்விப் பீடம், 

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

அறிமுகம் 

தமது ஆய்வுக்கான ஆய்வுப் பிரச்சினையை தெளிவாக இனங்கண்டு, அதனை பொருத்தமான முறையில் முன்வைப்பதே இன்று ஆய்வுகளில் ஈடுபட முன்வரும் புதிய ஆய்வாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆய்வறிக்கையில் ஆய்வுப் பிரச்சினையை தெளிவாகவும் சான்றுகளுடனும் எடுத்துரைப்பது அவசியம். கல்வியியல் ஆய்வுகளில் ஈடுபட உள்ள புதிய ஆய்வாளர்கள், ஆய்வுப் பிரச்சினையைத் தெரிவு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் இங்கு எடுத்துரைக்கப்படுகின்றன.

1. உங்கள் ஆர்வத்துக்குரிய சிறப்புத் துறை எது என்பதைத் தீர்மானித்தல்

துறைசார்ந்த வகையில் ஆய்வுகளை மேற்கொள்ள விரும்புபவர்கள், முதலில் தமது பாடத்துறையில் எந்த கிளைத்துறையின் கீழ் ஆய்வை மேற்கொள்ள விரும்புகிறார்கள் என்பதை தெளிவாக இனங்கண்டுக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, கல்வியியலில் மேற்படிப்பு கற்கும் மாணவர்கள், கல்வியியலில் உள்ள பல்வேறு கிளைத்துறைகளில் எதாவது ஒன்றில் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். தமது சிறப்புத் துறையாக ஒரு கிளைத்துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ஒருவர் கொண்டுள்ள பாட அறிவு, ஆர்வம், அனுபவம் போன்ற காரணங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

கல்வியியலில் கல்வி உளவியல், கல்வி சமூகவியல், கல்வி முகாமைத்துவம், கல்வி நிர்வாகம், கல்வி தலைமைத்துவம், கலைத்திட்டம், கலைத்திட்டமும் போதனையும், கல்வித் தொழில்நுட்பம், நிகழ்நிலை கல்வி, தொலைக்கல்வி, கல்வி ஆலோசனையும் வழிகாட்டலும், ஆரம்பக் கல்வி, ஆசிரியர் கல்வி போன்ற ஏராளமான கிளைத்துறைகள் உள்ளன. இத்தகைய துறைகளில் ஒருவர் கொண்டுள்ள பாட அறிவு, ஆர்வம், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தனது சிறப்புத் துறையைத் தெரிவு செய்தல் மிக முக்கியமானது.

2. ஆய்வுப் பிரச்சினையைத் தெரிவு செய்யும் படிநிலைகள்

1. சார்பிலக்கிய மீளாய்வில் ஈடுபடல்

ஒருவர் தனது சிறப்புத்துறையைத் தேர்ந்தெடுத்த பின், அதனுடன் தொடர்புடைய வாசிப்பினை விரிவுபடுத்துவது முக்கியம். இதனை ஆய்வியியலில் சார்பிலக்கிய மீளாய்வு (Review of Related Literature) என குறிப்பிடுகின்றனர். இன்றைய பல புதிய ஆய்வாளர்கள் வாசிப்பில் குறைபாடுகள் உள்ளதால், ஆய்வுச் செயன்முறையில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

சிறப்புத்துறையைத் தெரிவுசெய்த பின், அதனுடன் தொடர்புடைய சமகால சவால்கள், எழுப்பப்பட்ட ஆய்வு வினாக்கள், மற்றும் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆழமாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்வதற்கு வாசிப்பு பெரிதும் உதவுகிறது. எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புத்துறையுடன் தொடர்புடைய சமீபத்திய ஆய்வுக் கட்டுரைகள், கலாநிதி ஆய்வுகள் (theses), புத்தகங்கள், மற்றும் மாநாட்டு ஆக்கங்களை வாசிப்பதை ஆரம்பிக்க வேண்டும்.

அந்தத் துறையில் ஏற்கனவே எதை ஆராய்ந்துள்ளனர், என்ன கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன, அவற்றில் உள்ள வரம்புகள் அல்லது குறைபாடுகள் என்ன என்பதனை அடையாளம் கண்டு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு வாசிப்பில் ஈடுபடும் போது, குறித்த துறையில் மீண்டும் மீண்டும் தோன்றும் கருப்பொருள்கள், தீர்க்கப்படாத பிரச்சினைகள், ஆய்வு வினாக்கள் அல்லது புதிதாக உருவாகும் போக்குகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளுதல் அவசியம். சார்பிலக்கிய மீளாய்வு தொடர்பாக விரிவான விளக்கங்களுக்கு எனது சார்பிலக்கிய மீளாய்வு தொடர்பான கட்டுரையினை வாசிக்க: https://nawasdeen.blogspot.com/search?q=literature+

2. ஆய்வு இடைவெளியை அடையாளம் காணல்

சார்பிலக்கிய மீளாய்வின் மூலம், ஏற்கனவே ஆராயப்பட்ட விடயங்களில் போதுமான அளவு கவனம் பெறாத பகுதிகளை அல்லது இதுவரை பதிலளிக்கப்படாத ஆய்வு வினாக்களை/ பிரச்சினைகளை தெளிவாகக் கண்டறிய வேண்டும். இவைதான் “ஆய்வு இடைவெளி” (Research Gap) எனப்படும்.

மேலும், குறித்த துறையில் உள்ள ஆய்வுகள், நடைமுறைச் செயற்பாடுகள், மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் அனுபவங்களில் காணப்படும் சவால்களை ஆராய்வது முக்கியம். ஒரு சிறந்த ஆய்வுப் பிரச்சினை பெரும்பாலும் கோட்பாடு மற்றும் நடைமுறை ஆகியவற்றுக்கிடையேயான இடைவெளியிலிருந்து உருவாகிறது.

எனவே, முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் வரம்புகள், தீர்க்கப்படாத பிரச்சினைகள், அல்லது புதிய தேவைகள் ஆகியவற்றை அடையாளம் காண்பது ஆய்வுப் பிரச்சினை தெரிவில்  முக்கியமான படியாகும்.

3. ஆய்வுக்கான பரப்பை / கவனத்தைச் சுருக்கல்

ஆய்வுப் பிரச்சினைத் தெரிவில், ஒரு பொதுவான பரப்பிலிருந்து குறிப்பிட்ட ஆய்வுப் பிரச்சினையை உருவாக்குவதற்கு, உங்கள் ஆய்வுக் கவனத்தையும் பரப்பையும் படிப்படியாகச் சுருக்க வேண்டும்.

உதாரணமாக, உங்கள் சிறப்புத் துறை ஆசிரியர் கல்வி எனக் கொள்க. “ஆசிரியர் கல்வி” என்பது மிக விரிவான பாடப் பரப்பு ஆகும். இதில் உங்கள் வாசிப்பின் அடிப்படையிலும் இலக்கிய விமர்சனத்தின் வெளிப்பாடுகளையும் பொருத்தமாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட, தெளிவான தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.

உதாரணம்: முன் சேவை ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவதில் பிரதிபலிப்பு குறிப்பேடுகளின் பயன்பாடு.

மிக விரிவான அல்லது தெளிவற்ற தலைப்புகளைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவற்றை ஒரே ஆய்வில் கையாளுவது கடினமாக இருக்கும். சிறப்புத் துறையின் உள்ளடக்கத்தை நுணுக்கமாக ஆராய்ந்து, அதில் தமக்குப் பெரும் ஆர்வமுள்ள மற்றும் நடைமுறையில் சாத்தியமான ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

இச்செயன்முறை ஆய்வின் பரப்பளவைத் துல்லியமாக வரையறுத்து, ஆய்வின் வடிவத்தையும் நோக்கத்தையும் தெளிவாக அமைக்க உதவுகிறது.

4. ஆய்வுப் பிரச்சினையைத் தெளிவாக வரையறுத்தல்

ஆய்வுப் பிரச்சினையை உருவாக்கிய பின், அதனை தெளிவாகவும், ஆராயக்கூடிய வகையிலும் வரையறுப்பது மிகவும் முக்கியம். ஒரு நல்ல ஆய்வுப் பிரச்சினை யார் (Who), என்ன (What), எப்போது (When), எங்கே (Where) போன்ற அடிப்படை அம்சங்களை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும்.

ஆய்வுப் பிரச்சினை வினா வடிவில் (question form) எழுதப்படுவது சிறந்தது, ஏனெனில் அது ஆய்வின் திசையையும் வரம்பையும் தெளிவாகக் காட்டுகிறது.

உதாரணமாக:

“பிரதிபலிப்பு குறிப்பேடு செயற்பாடுகள் ஆசிரிய மாணவர் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமானது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்விமானி கற்கும் ஆசிரிய -மாணவர்களின் சுயநெறிப்படுத்தப்பட்ட  கற்றலுக்கு பிரதிபலிப்பு குறிப்பேடு செயற்பாடுகள் எவ்வாறு தாக்கம் செய்கின்றன?

ஆய்வுப் பிரச்சினையை வரையறுக்கும் போது பின்வரும் அம்சங்களை கவனிக்க வேண்டும்:

  • பிரச்சினை தெளிவாகவும் குறிப்பிட்டதாகவும் இருக்க வேண்டும்.
  • அளவிடக்கூடிய அல்லது விளக்கக்கூடிய மாறிகள் அடங்கியிருக்க வேண்டும்.
  • நடைமுறையில் சாத்தியமான மற்றும் ஆராய்ச்சிக்குத் தகுந்த பரிமாணம் கொண்டதாக இருக்க வேண்டும்.

இந்த முறையில் பிரச்சினையை வரையறுப்பது, அடுத்த ஆய்வுக் கட்டமான ஆய்வு வினாக்கள் , குறிக்கோள்கள், மற்றும் கருதுகோள்கள் (hypotheses) உருவாக்கத்திற்கான அடித்தளத்தை அமைக்க உதவுகிறது.

5. தெரிவு  செய்யப்பட்ட ஆய்வுப் பிரச்சினையின் நடைமுறை சாத்தியத்தன்மையை மதிப்பாய்வு செய்தல்

ஒரு ஆய்வுப் பிரச்சினை சாத்தியமுள்ளதா என்பதை ஆராய்வது, ஆய்வின் வெற்றிக்கு மிக முக்கியமான படி ஆகும். இதற்காக பின்வரும் அம்சங்களை கவனிக்க வேண்டும்:

  • தரவு மற்றும் பங்கேற்பாளர்கள்: தேவையான தரவைப் பெறுவதற்கும், ஆய்வில் பங்கேற்கத் தயாரான நபர்களை அணுகுவதற்கும் வாய்ப்பு இருக்கிறதா என்பதை மதிப்பிட வேண்டும்.
  • வளங்கள் மற்றும் வசதிகள்: ஆய்வை முடிக்க தேவையான பொருட்கள், உபகரணங்கள், நிதி, மற்றும் ஆதரவு வளங்கள் கிடைக்கிறதா என பரிசீலிக்க வேண்டும்.
  • நேர வரையறை: ஆய்வை கொடுக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க முடியுமா என்பதை மதிப்பிட வேண்டும்.
  • நெறிமுறைப் பிரச்சினைகள் (Ethical considerations): ஆய்வில் பங்கேற்பாளர்களின் தனியுரிமை மற்றும் ஒழுங்கு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
  • ஆய்வாளர் திறன் மற்றும் அனுபவம்: துறை சார்ந்த அறிவு, ஆராய்ச்சி அனுபவம், மற்றும் திறன் ஆகியவை ஆய்வை நடைமுறையில் சிறப்பாகச் செய்ய உதவுமா என்பதையும் பரிசீலிக்க வேண்டும்.
ஒரு சாத்தியமுள்ள ஆய்வுப் பிரச்சினை என்பது யதார்த்தமானதும், வழங்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கக்கூடியதும், மற்றும் ஆராய்ச்சிக்குத் தகுதியானதாக இருக்க வேண்டும்.

6. தெரிவு செய்த ஆய்வுப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை நியாயப்படுத்தல்

ஆய்வுப் பிரச்சினையை தெரிவு செய்தபின், அதன் முக்கியத்துவத்தை தெளிவாகக் கூறுதல் அவசியம். இது ஆய்வின் பயனையும், கல்வியியல் துறைக்கு எவ்வாறு பங்களிக்கிறது  என்றும் வெளிப்படுத்துகிறது.

இதற்கா பின்வரும் அம்சங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். 

  • அறிவியல் பங்களிப்பு: இந்த ஆய்வு தற்போதைய அறிவுத் தரவுகளுக்கு, கோட்பாடுகளுக்கு, மற்றும் கோட்பாடுகள் மற்றும் நடைமுறை இடையேயான இடைவெளியை நிரப்புவதில் எவ்வாறு பங்களிக்கிறது என்பதை விளக்க வேண்டும்.
  • நடைமுறை பயன்பாடு: ஆய்வின் முடிவுகள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விக் கொள்கை வடிவமைப்பாளர்களுக்கு உதவும் வகையில் இருக்கிறதா என்பதை மதிப்பிட வேண்டும்.
  • சமூகப் பயன்: ஆய்வின் முடிவுகள் சமூக தேவைகள் மற்றும் கல்வி சூழலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஒரு சிறந்த ஆய்வுப் பிரச்சினை, கண்டுபிடிப்புகளுக்கான புதிய வாயில்களை திறக்கக் கூடியதாகவும், தற்போதைய அறிவை விரிவுபடுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.

கல்வி ஆய்வுப் பிரச்சினைகளின் முக்கிய வகைப்பாடுகள் (A Comprehensive Classification of Educational Research Problems)

ஆய்வுப் பிரச்சினைகளை பின்வரும் வகைகளில் வகைப்படுத்தலாம். இந்த வகைகள், ஆய்வின் நோக்கம் மற்றும் ஆய்வின் வடிவம், திசையை தெளிவுபடுத்துவதிலும், ஆய்வுப் பிரச்சினையை சரியாக உருவாக்கவும்  உதவும்.

1. நெறிமுறைசார் ஆய்வுப் பிரச்சினை (Normative Research Problem)

நோக்கம்: ஒரு குறிப்பிட்ட சூழலில் எது சரியானது, நெறிமுறைக்கு உகந்தது அல்லது செய்ய வேண்டியது என்பதை, ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகள், கோட்பாடுகள் அல்லது ஒழுக்கத் தத்துவங்கள் அடிப்படையாக ஆராயும் ஆய்வுப் பிரச்சினைகள் இதுவாகும்.

உதாரணங்கள்:

  • வகுப்பறையில் மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது, அவர்களின் ஒழுக்க விருத்தியில்  பெரும் தாக்கம் செலுத்துமா?

  • வகுப்பறைத் தொழிநுட்பப் பயன்பாடுகளில், மாணவர்களின் தனியுரிமை மற்றும் சைபர் பாதுகாப்பு நடைமுறைகள் பாடசாலைகளில் எவ்வாறு செயற்படுத்தப்பட வேண்டும்?

2. விவரண ஆய்வுப் பிரச்சினை (Descriptive Research Problem)

விவரண ஆய்வுப் பிரச்சினை என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் (ஆசிரியர்/அதிபர்/மாணவர்), சூழ்நிலை அல்லது நிகழ்வின் பண்புகளை விவரிக்கும் ஒரு வினாவாகும், இது "யார்," "என்ன," "எங்கே," "எப்போது," அல்லது "எப்படி" என்ற வினாக்களுக்கு  பதிலளிக்கிறது. காரண ஆராய்ச்சியைப் போலன்றி, இது காரண-விளைவு உறவுகளைத் தீர்மானிக்க முயலுவதில்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் விரிவான படத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது, பெரும்பாலும் அளவை நிலை ஆய்வுகளின் மூலம் மேற்கொள்ளப்படும். .

உதாரணம்:

  • தற்போதைய பாடசாலை காலை உணவு திட்டங்கள் மாணவர் வரவு  மற்றும் நலனோம்பலை  எந்த அளவிற்கு பாதிக்கின்றன?
  • ஹட்டன் கல்வி வலயத்தில் நடைமுறைப்படுத்தப்படும் ஆசிரியர் வாண்மை  விருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின்  ஆசிரியர்களின் பங்களிப்பு நிலை எவ்வாறு உள்ளது?
  • பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் பயன்படுத்துவதில் ஆசிரியர்கள் கொண்டுள்ள திறன்கள் யாவை?
  • STEM பாடங்களில் சிறப்பான மாணவர்கள் எத்தகைய சுய ஒழுங்கமைக்கப்பட்ட கற்றல் உத்திகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள்?
  • நேர்மறையான வகுப்பறை சூழலை பேணுவதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்


3. வேறுபாடு காணும் ஆய்வுப் பிரச்சினைகள்  (Difference-Seeking Research Problem)

ஒரு குறிப்பிட்ட நிகழ்வில்,  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள், முறைகள், அல்லது நிலைகளுக்கு இடையே கணிசமான வேறுபாடு உள்ளதா என ஆராய முற்படும் ஆய்வு பிரச்சினைகள்

உதாரணம்.

  • விஞ்ஞான பாடக் கற்பித்தலில்  போது கண்டறி கற்பித்தல் முறை மற்றும் கூட்டுறவு கற்பித்தல் முறை ஆகியவற்றின்  செயற்திறன் எவ்வாறு வேறுபடுகிறது?

4. தொடர்பு காணும் ஆய்வுப் பிரச்சினைகள்  (Relational/Correlational Research Problem)

 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளுக்கு இடையே உள்ள தொடர்பு இருப்பதை ஆராய முப்பதும் ஆய்வுப் பிரச்சினைகள்.

உதாரணம்

  •   மாணவர்களின் தூக்க நேர அளவிற்கும், கல்வி சாதனைக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது?
  •  பெற்றோர்களின் ஈடுபாட்டிற்கும் குழந்தைகளின் கல்வி வெற்றிக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது?

5. காரண காரிய  ஆய்வுப் பிரச்சினை (Causal Research Problem)

ஒரு காரண காரிய  ஆய்வு பிரச்சினை  என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளுக்கு இடையிலான காரண-விளைவு உறவைத் தீர்மானிக்க முயலும் ஆய்வுப் பிரச்சினைகள் ஆகும். , இது ஒரு விடயம்  ஏன் நடக்கிறது என்பதை விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உதாரணம்:

  • மாணவர் ஈடுபாடு மற்றும் நீண்டகால அறிவைத் தக்கவைத்துக்கொள்வதில் பாரம்பரிய கற்பித்தல் முறைகளுக்கு பதிலாக   செயற்திட்ட அடிப்படையிலான கற்றலின் தாக்கம் எவ்வாறுள்ளது
  • வகுப்பறையில் கல்வி செயலிகளைப் பயன்படுத்துவது மாணவர்களின் வாசிப்புப்  திறனில் அளவிடக்கூடிய முன்னேற்றத்தை ஏற்படுத்துமா?
  •    ஃபோனிக்ஸ் கற்பித்தல் முறை, நான்காம் வகுப்பு மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்க காரணமாக அமைகிறதா?

6. விளக்க ஆய்வுப் பிரச்சினை (Explanatory  Research Problem)

ஒரு விளக்க ஆய்வுபிரச்சினை , மாறிகளுக்கு இடையிலான காரண-விளைவு உறவுகளை அடையாளம் காண்பதன் மூலம் ஒரு விஷயம் ஏன் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயல்கிறது. இது எளிய விளக்கத்திற்கு அப்பால் சென்று கருதுகோள்களைச் சோதித்து, ஒரு மாறி மற்றொன்றை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நிறுவுகிறது, பெரும்பாலும் தலைப்பில் வரையறுக்கப்பட்ட முன் தகவல்கள் இருக்கும்போது இத்தகைய ஆய்வு வினாக்கள் உருவாக்கம் செய்யலாம். .

படிக்கும் போது இசையைக் கேட்பது பரீட்சை அடைவுகளை மேம்படுத்துகிறதா அல்லது பெற்றோரின் ஈடுபாடு ஒரு மாணவரின் கல்வி வெற்றியை எவ்வாறு பாதிக்கிறது என ஆராய்வது இதில் உள்ளடங்கும். இத்தகைய விளக்க ஆய்வு பிரச்சினைகள் காரண காரிய ஆய்வு பிரச்சினைகளை ஒத்திருந்தாலும், இவை பரந்து பட்ட ஆய்வு பிரச்சினைகளாக அமைக்கப்படும்.

7. தலையீட்டை வேண்டி நிற்கும்  சார்ந்த ஆய்வுப் பிரச்சினை (Intervention / Solution-Oriented Research Problem)

கல்விப்புலத்தில் காணப்படும்  ஒரு பிரச்சினையை  தீர்க்க உத்தி அல்லது தலையீட்டை வடிவமைத்து, அதன் செயற்திறன் மற்றும் சாத்தியத்தை மதிப்பீடு செய்யும் வகையினாலான ஆய்வு பிரச்சினைகள் இவையாக்கியம். குறிப்பாக செயல் நிலை ஆய்வு பிரச்சினைகள் இதனுள் அடங்கும். .

  • கணிதக் கவனச்சிதறலைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய கற்றல் உத்தி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது?
  •  think-pair-share எனும் உத்தி எங்ஙனம் மாணவர் கற்றல் ஈடுபாட்டை அதிகரிக்க உதவுகின்றது

மேற்கண்ட வகைகள்  போன்று கோட்பாட்டு சார் ஆய்வு பிரச்சினைகள், மதிப்பீட்டு ஆய்வுப் பிரச்சினை (Evaluation Research Problem),கண்டறியும் ஆய்வுப் பிரச்சினை (Exploratory Research Problem), ஒப்பீட்டு ஆய்வுப் பிரச்சினை (Comparative Research Problem) எனப் பல வகைகள் உள்ளன.

ஆய்வுப் பிரச்சினை எழுதும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

 ஆய்வுப் பிரச்சினை ஒரு நடுநிலையான, ஆராயக்கூடிய பிரச்சினையாக இருக்க வேண்டும். ஆய்வுப் பிரச்சினை எழுதும் போது, அதில் முன்கூட்டியே காரணம், விளைவு, அல்லது தீர்வை குறிப்பிடக்கூடாது. ஏனெனில்:

  •  முன்கூட்டியே காரணம் அல்லது முடிவை சேர்த்தால், ஆய்வில் பக்கச்சார்பு (Bias) உருவாகும்.
  •  இது ஆய்வின் நோக்கத்தை, உண்மையான அறிவை கண்டறிவதில், தடையாக அமைக்கும்.

தவறான ஆய்வுப் பிரச்சினைகளுக்கான உதாரணங்கள்:

 

காரணத்தை முன்கூட்டியே கூறுதல்: இரு மொழி கல்வியில் இருந்து ஆங்கில அறிவு குறைவின் காரணமாக மாணவர்கள் இடைவிலகுகின்றனர்."

காரண-விளைவை முன்கூட்டியே தீர்மானித்தல்: அதிகரித்த சமூக ஊடகப் பயன்பாடு மாணவர் வன்முறைக்கு இட்டுச் செல்கின்றது.

 தீர்வை பிரச்சினையில் சேர்த்தல்: பாடசாலையில் பொருத்தமற்ற கவின்நிலை  மாணவர் கற்றலை பாதிக்கிறது."

மேற்கண்டவாறு பிழையாக ஆய்வு பிரச்சினைகளை எழுதாமல், சரியாக , நடுநிலையாக ஆய்வு  பிரச்சினை எழுதுவது முக்கியமாகும். ஆய்வுப் பிரச்சினை என்பது ஒரு தெளிவான, ஆராயக்கூடிய பிரச்சினை ஆகும். இது ஆய்வின் அடித்தளமாக அமைந்து, முழு ஆய்வுத் திட்டத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்தும். பிரச்சினை காரணம் அல்லது தீர்வை முன்கூட்டியே கூறாது, ஆய்வின் முடிவில் தான், ஆய்வு பிரச்சினைக்கான காரணம், தீர்வுகள் வெளிப்படும் என்பதை மனதில் கொள்ளல் வேண்டும்.


ஆசிரியர் கல்வியில் ஆய்வு

ஆசிரியர் கல்வியில் ஆய்வு அறிமுகம் ஆசிரியர் கல்வியில் ஆய்வு  என்பது கற்பித்தல்–கற்றல் செயன் முறைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளவும் , அவற்றை மேம...